பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளியான புதிய ஸ்கோடா ஃபேபியா பிரீமியம் ஹேட்ச்பேக்!

ஸ்கோடா ஃபேபியா

கார் பிரபலமான ஃபேபியா மாடலின் நான்காவது தலைமுறையாக (fourth generation) வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
செக் குடியரசின் தலைமையிடமான ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) இறுதியாக அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேபியா (Skoda Fabia) மாடலை சர்வதேச சந்தைகளுக்காக வெளியிட்டுள்ளது. இந்த நியூ ஸ்கோடா ஃபேபியா (new Skoda Fabia) வோக்ஸ்வாகனின் MQB A0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த கார் பிரபலமான ஃபேபியா மாடலின் நான்காவது தலைமுறையாக (fourth generation) வருகிறது. இது அவாண்ட்-கார்ட் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த நான்காம் தலைமுறை ஃபேபியா காரானது ஸ்டாண்டர்ட் மாடல் தவிர கோம்பி க்ளவர், கோம்பி மான்டே கார்லோ, பிளாக் எடிஷன் கோம்பி ஸ்கவுட்லைன் க்ளவர், மான்டே கார்லோ மற்றும் கோம்பி பாடி ஸ்டைல்களில் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஃபேபியா விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் நேரத்தில் ஸ்டைல், ஆம்பிஷன் மற்றும் ஆக்ட்டிவ் உள்ளிட்ட மூன்று ட்ரிம்களில் (trims) வழங்கப்படும். நான்காம் தலைமுறை ஸ்கோடா ஃபேபியா சமகால வடிவமைப்பு மொழியை உருவாக்கி பராமரிக்கிறது.

திடமான விகிதாச்சாரங்கள், சிற்பக் கோடுகள் மற்றும் மேம்பட்ட எல்.ஈ.டி தொழில்நுட்பத்தை எடுத்து காட்டும் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு, நான்காவது தலைமுறை நியூ ஃபேபியா கார் பிரியர்களுக்கான முழுமையான தொகுப்பாக வருகிறது. இந்த காரின் ஸ்டீயரிங் த்ரீ ஸ்போக் ஸ்டைலை (three-spoke style) வழங்குகிறது மற்றும் லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தவிர குளிர்காலத்தில் வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்த ஸ்கோடா நிறுவனம் தனது புதிய ஃபேபியா ரக காரில், ஹீட்டட் விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஸ்டீயரிங் (heated windscreen and steering wheel ) கொண்டுள்ளது.

இந்த காரின் உட்புறத்தை பற்றி பேசும் போது, anLED ambient lighting கொடுக்கப்பட்டுள்ளது. இது சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் டாஷ்போர்டை ஒளிரச் செய்ய உதவுகிறது. முன் கதவு கைப்பிடிகள் மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவற்றை ஒளிரச் செய்யலாம். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல்கள் வாகனத்தின் உட்புறத்திற்கு ஒரு சிறந்த பினிஷிங்க்கை தருகின்றன. இந்த வாகனம் ஒரு விருப்ப டிஜிட்டல் கருவி கிளஸ்டருடன் (optional digital instrument cluster ) வருகிறது, இது 10.25 அங்குல டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Also read... ரெனால்ட் ட்ரைபர் MPV விலை அறிவிப்பு - தொடக்க விலை ரூ.5.30 லட்சம்

ஸ்கோடா நிறுவனம் நியூ ஃபேபியாவை 1.5 டிஎஸ்ஐ நான்கு சிலிண்டர் மோட்டார் உட்பட ( இது அதிகபட்சமாக 148 பிஹெச்பி சக்தியை வெளியேற்றும்) 5 என்ஜின் விருப்பங்களில் வழங்குகிறது. இயந்திரத்தின் செயலில் சிலிண்டர் நுட்பம் அதிக எரிபொருள் செயல்திறன் மற்றும் குறைந்த CO2 உமிழ்வை அனுமதிக்கிறது. நியூ ஸ்கோடா ஃபேபியா காரின் மற்ற எஞ்சின் வகைகளில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் டிஎஸ்ஐ ஈவோ எஞ்சின் 2 பவர் ஆப்ஷன்களில் அடங்கும். மேலும் 94 பிஎச்பி மற்றும் 109 பிஎச்பி மற்றும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் MPI EVO மோட்டார் 64 பிஎச்பி மற்றும் 79 பிஎச்பி பவர் ஆப்ஷன்களில் வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: