Home /News /automobile /

புதிய ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் கார் அறிமுகம் - நாலு வீல் சொர்க்கம்!

புதிய ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் கோஸ்ட் கார் அறிமுகம் - நாலு வீல் சொர்க்கம்!

Rolls royce Ghost - Black Badge Edition

Rolls royce Ghost - Black Badge Edition

ஏராளமான சொகுசு கார் உற்பத்தியாளர்கள் பிளாக் பேட்ஜ் கார்களை முன் மாதிரியாக வைத்து தங்கள் கார்களை தயாரித்து வருகிறார்கள்.

  ரோல்ஸ் ராய்ஸ் புதிய பிளாக் பேட்ஜ் கோஸ்ட்டை அதன் செழுமைமிக்க வடிவமைப்பிற்கு பிந்தைய இருண்ட பக்கமாக அறிமுகப்படுத்துகிறது. ரோல்ஸ் – ராய்ஸ் நிறுவனம் 2016-ம் ஆண்டு பிளாக் பேட்ஜ் ரைத் மற்றும் கோஸ்ட் ஆகிய கார்களையும் அதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் டான், பிறகு 2019-ம் ஆண்டில் கல்லினன் ஆகிய கார்களை அறிமுகம் செய்தது. இன்று, புதிதாக பிளாக் பேட்ஜிற்கு பிந்தைய செழிப்பான வெளிப்பாடு இந்த குடும்பத்தில் இணைந்துள்ளது. அது பிளாக் பேட்ஜ் கோஸ்ட் என்ற தூய்மையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பிளாக் பேட்ஜ் மோட்டார் கார் ஆகும்.

  வாடிக்கையாளர்கள் மார்க்கின் 44,000 வண்ணங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது தங்களுடைய முற்றிலும் தனித்துவமான பெஸ்போக் சாயலை உருவாக்கலாம்.

  6.75-லிட்டர் வி12 இன்ஜினுடன் தற்போது அதிக ஆற்றல் (600PS/592hp) மற்றும் முறுக்குவிசையுடன் (900NM) வெளிவருகிறதுடிரைவ்ட்ரெய்ன் எனும் இதன் என்ஜின் உள் அமைப்பு மற்றும் சேசிஸ் ஆகியவை மிகவும் வேகமான செயல்திறனுக்கு ஏற்ப மறுவடிவம் பெற்றுள்ளன. இதன் உட்புறம் டர்கீஸ் தோல் மற்றும் டெக்னிக்கல் கார்பன் வெனீர் ஆகியவற்றின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெஸ்போக் அலாய் வீல் கார்பன் பைபர் பேரலுடன் பிளாக் பேட்ஜ் ஹவுஸ் ஸ்டைலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  Also read: ஷாருக் மகனை கைது செய்த சமீர் வான்கடே இந்து மதத்தைச் சேர்ந்தவரல்ல – அம்பலப்படுத்திய முதல் மனைவியின் தந்தை

  இதன் இன்பினிட்டி லெம்னிஸ்கேட் சின்னம் தனித்துவமிக்க சிறப்பு வாய்ந்த ரோல்ஸ் ராய்சின் வெளிப்பாட்டை குறிக்கிறது.

  Rolls royce Ghost - Black Badge Edition


  இது குறித்து ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டார்ஸ்டன் முல்லர்-ஓட்வோஸ் கூறுகையில்,

  ‘‘குறிப்பிடத்தக்க உள் விவாதத்திற்குப் பிறகு, புதிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் பிரத்யேக கார்களை வழங்கும் என்று அதிகாரப்பூர்வமாக ரோல்ஸ் ராய்ஸ் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக பிரத்யேக கார்களை பிளாக் பேட்ஜ் என்ற பெயரில் வெளியிட்டது. இந்த கார்கள் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. அடர்த்தியான கறுப்பு நிறத்தில் மிக அழகிய வடிவமைப்புடன், ஆளுமையில் மிகவும் கம்பீரமாகவும், பார்ப்பவர்களை வியக்க வைக்கும் வகையில் இவை வெளிவந்தன.

  Also read:   மோடியின் பலம் பற்றி ராகுல் காந்தி புரிந்துகொள்ளவில்லை – பிரசாந்த் கிஷோர்

  கடந்த ஐந்து வருடங்களாக இந்த பிளாக் பேட்ஜ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. துணிச்சல்மிக்க மோட்டார் கார் நிறுவனமான எங்கள் நிறுவனம் ஒரு புதிய வகை அதிசொகுசு தயாரிப்புகளின் உச்சத்தை அடையாளப்படுத்தும் விதமாக பரந்து விரிந்த ஆடம்பரமிக்க கார் துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏராளமான சொகுசு கார் உற்பத்தியாளர்கள் பிளாக் பேட்ஜ் கார்களை முன் மாதிரியாக வைத்து தங்கள் கார்களை தயாரித்து வருகிறார்கள்.

  Rolls royce Ghost - Black Badge Edition


  இன்று, புதிய வகையான பிளாக் பேட்ஜ் மோட்டார் காரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தயாரிப்பை நாங்கள் அறிவிக்கிறோம், எங்கள் ரோல்ஸ் ராய்சின் மாற்று வடிவத்தை வகைப்படுத்த எங்களின் மிகவும் மேம்பட்ட மோட்டார் கார்கள் மேலும் உறுதியான, ஆற்றல்மிக்க மற்றும் வலிமையானதாக மறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கார் தயாரிப்பு வரலாற்றில் இதுவே தூய்மையான பிளாக் பேட்ஜ் மோட்டார் கார் ஆகும். அது பிளாக் பேட்ஜ் கோஸ்ட் என்று டார்ஸ்டன் முல்லர்-ஓட்வோஸ் தெரிவித்தார்.
  Published by:Arun
  First published:

  அடுத்த செய்தி