Home /News /automobile /

புதிய வெளிப்புறம் மற்றும் கேபின் வடிவமைப்பைப் பெறும் ஆல்-நியூ "கியா ஸ்போர்டேஜ்": நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள்

புதிய வெளிப்புறம் மற்றும் கேபின் வடிவமைப்பைப் பெறும் ஆல்-நியூ "கியா ஸ்போர்டேஜ்": நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள்

ஆல்-நியூ ஸ்போர்டேஜ்

ஆல்-நியூ ஸ்போர்டேஜ்

புதிய ஸ்போர்டேஜ் அதன் கிராஸ்ஓவர்-ஈஷ் வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

  தென் கொரிய பிரண்டான கியா கார்ப்பரேஷன் பிரீமியம் 5 இருக்கைகள் கொண்ட எஸ்யூவியின் ஆல்-நியூ ஸ்போர்டேஜ் மாடலின் அதிகாரப்பூர்வ படங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கியாவின் புதிய வடிவமைப்பு தத்துவத்தின் - "Opposites United" -கீழ் இந்த வாகனம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி -நியூ ஸ்போர்டேஜின் புதிய ராடிக்கல் வெளிப்புறத்தை கொண்டுள்ளது. கொரியா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள கியாவின் முக்கிய உலகளாவிய வடிவமைப்பு நெட்ஒர்க்குகளுக்கு இடையிலான கூட்டு முயற்சியின் விளைவாக அனைத்து புதிய ஸ்போர்டேஜ் உள்ளது. Opposites United இன் கொள்கைகள் எதிர்கால கியா வடிவமைப்புகளில் உள்ளடங்கும். அதேபோல அடிப்படை DNA-வை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

  புதிய வடிவமைப்புகளின்படி, வியத்தகு ஸ்டைலிங் வாகனத்தின் டென்ஸை மேலும் அதிகரிக்கின்றன. ஸ்போர்டேஜ் அதன் நான்காவது தலைமுறை அவதாரத்தில் இருந்த வட்டமான தோற்றத்தை இழந்துள்ளது. அதற்கு மாறாக, இப்போது அது மிகவும் கூர்மையாகவும் கண்களைக் கவரும் விதமாகவும் தோற்றமளிக்கிறது. இதன் முன் கிரில் ஒரு பளபளப்பான கருப்பு பொருளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அறுகோண கட்அவுட்களைக் கொண்டுள்ளது. இது பூமராங் வடிவ எல்.ஈ.டி டி.ஆர்.எல் உடன் நன்றாக ஒன்றிணைந்துள்ளது.

  இது கிரில் மற்றும் ஹெட்லைட் கிளஸ்டருக்கு இடையில் ஒரு தடையாக செயல்படுகிறது. பம்பரின் கீழ் பாதி ஒட்டுமொத்த வடிவமைப்பிற்கும் ஒரு குறிப்பிட்ட சமநிலையை அளிக்கிறது. மேலும் இந்த வாகனத்தில் மூடுபனி விளக்குகள், இருபுறமும் இரட்டை அலகுகள் ஆகியவை பம்பரில் கீழாக வைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஸ்போர்டேஜ் அதன் கிராஸ்ஓவர்-ஈஷ் வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும் வாகனத்தின் ரூப் பின்புறத்தை நோக்கி சாய்வாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

   Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டெயில் விளக்குகள் முன்பகுதியில் மட்டுமல்ல, காரின் பக்கவாட்டிலும் நீண்டுள்ளன. வாகனத்தின் நடுத்தரத்திலும் இணைக்கப்பட்டுள்ளன. பின்புற பம்பரும் மிகவும் பிஸியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது கருப்பு அடிப்படை நிறத்துடன் நன்றாக மாறுபடும் அளவுக்கு வெள்ளி தோற்றத்தை பயன்படுத்துகிறது. உள்வடிவமைப்பை பொறுத்தவரை, சிறப்பம்சமாக டிரைவர் இருக்கை முன்பு பனோரமிக் திரை அமைப்பு உள்ளது. இது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தொடுதிரையையும் உள்ளடக்கியிருக்கிறது. இது மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் முன்னதாக காணப்பட்டது.

  ஆனால் இப்போதெல்லாம், கியா செல்டோஸ் போன்ற கார்கள் கூட இந்த வடிவமைப்பை பிரதிபலித்து வருகின்றன. ஸ்போர்டேஜ் எஸ்யூவியின் வித்தியாசம் என்னவென்றால், முழு அமைப்பும் டிரைவர் மையமாக இருக்கும்படி வளைந்திருக்கும். சென்டர் கன்சோலில் மென்மையான-டச் கட்டுப்பாடுகள் உள்ளன. அவை தொடுதிரை செயல்படுவதை எளிதாக்குகின்றன. கேபின் அமைப்பை பொறுத்தவரை, கருப்பு மற்றும் பழுப்பு என்ற இரட்டை தொனி தீம் உள்ளது. கேபினின் மேல் பாதியில் கறுப்பு நிறத்தை தாராளமாகப் பயன்படுத்துகிறது. அதேசமயம் கீழ் பாதி பழுப்பு நிறத்தில் இருக்கிறது. இது உட்புறத்திற்கு ஒரு துடிப்பான ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது.

  ஸ்போர்டேஜ் அதன் அடிப்படை மற்றும் பவர் ட்ரெயின்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த, சமீபத்திய ஜெனரல் ஹூண்டாய் டியூசனுடன் பகிர்ந்து கொள்ளும் என்று தெரியவந்துள்ளது. ஆனால் அது தொடர்பாக எந்த செய்தியையும் கியா இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், ஸ்போர்டேஜ் எஸ்யூவிக்கு இதுபோன்ற எந்த திட்டமும் இதுவரை இல்லை என்றும் கூறப்படுகிறது. ஸ்போர்டேஜ் வாகனம் சிட்ரோயன் சி 5 ஏர்கிராஸ், ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டியூசன் மற்றும் வோக்ஸ்வாகன் டிகுவான் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த வாகனம் ரூ.25 லட்சத்திற்கும் விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

   

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Car, India, Kia motors

  அடுத்த செய்தி