Home /News /automobile /

இளசுகளை கவரும் ஹோண்டாவின் புதிய அறிமுகம்! CB300F விலை, அம்சங்கள்!

இளசுகளை கவரும் ஹோண்டாவின் புதிய அறிமுகம்! CB300F விலை, அம்சங்கள்!

Honda CB300F

Honda CB300F

Honda CB300F | அதிக திறன் கொண்ட பைக்குகளை வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதற்காகவே தற்போது ஹோண்டா CB300F யை அறிமுகம் செய்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    முழு LED லிக்ட் வசதி உள்பட பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் CB300F என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் பைக்கின் விலை 2.26 லட்ச ரூபாய் மற்றம் ரூ.2.29 லட்சம் எனவும் தெரிவித்துள்ளது.

    இன்றைக்கு இளம்தலைமுறையினர் விதவிதமாக மற்றும் பல்வேறு அம்சங்களுடன் வரக்கூடிய பைக்குகளை வாங்குவதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதுப் போன்ற வாடிக்கையாளர்களின் வசதிகளை நிறைவேற்றும் விதமாக இந்தியாவின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா பல்வேறு புதிய அம்சங்களுடன் பைக்குகளைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தான் புதிய ரைடிங் அனுபவம் மற்றும் அதிக திறன் கொண்ட பைக்குகளை வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதற்காகவே தற்போது ஹோண்டா CB300F யை அறிமுகம் செய்துள்ளது.

    ஏற்கனவே ஹோண்டா நிறுவனத்தின் பிக் விங் ஷோரூம் மூலம் விற்பனை செய்யப்படும் ஹோண்டா CB300R பைக்கை போன்றே இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் ஸ்ட்ரீட் பைக் செக்மென்டில் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் வசதிகள் மற்றும் அதிக செயல்திறன் இந்த பைக்கில் இடம் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் கூறும் நிலையில் இதில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளது என இங்கே அறிந்துக்கொள்வோம்.

    ஹோண்டோ அறிமுகம் செய்துள்ள CB300F ன் அம்சங்கள்:

    இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள CB300F மாடல் பைக் DLX மற்றும் DLX pro ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹோண்டோ CB300F (Honda CB300F Engine) பைக் 293cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது. இதோடு 24.1 BHP மற்றும் டார்க் 25.6 NM வுடன் கிடைக்க பெறுகிறது. 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி மற்றும் ஸ்லீப்பர் கிளட்ச் வசதியும் இந்த பைக்கில் இடம் பெற்றுள்ளது.

    Also Read : ராயல் என்ஃபீல்டு டூ ஹோண்டா வரை புதிய பைக் அறிமுகங்கள்.!

    முழு LED லிக்ட் வசதியுடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டர், ஹோண்டோ ஹார்னெட் 2.0 போன்ற டிசைன், டூயல் டோன் கலர் ஆப்சன் , அலாய் வீல் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளது. இந்த பைக்கின் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை 276 mm முன்பக்க டிஸ்க், 220 mm பின்பக்க டிஸ்க், டூயல் சேனல் ABS, கோல்டன் யுஎஸ்டி போர்க், 5 ஸ்டெப் அட்ஜஸ்ட் மோனோ ஷாக் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.

    இதோடு வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற USB சார்ஜிங் சாக்கெட், ஸ்ப்ளிட் சீட் வசதி, Honda Selectable Torque Control (HSTC) போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் Mat Axis Grey Metallic, Mat Marvel Blue Metallic and Sports Red போன்ற 3 கலர்களில் கிடைக்கிறது.

    இப்படி பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா CB300F பைக் புக்கிங் இன்று முதல் Honda bigwing டீலர்ஷிப்புகளில் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் உங்களுக்கான பைக்குகளை உடனே புக் செய்து ஜாலியா புதிய ஹோண்டோ பைக்கில் ரைடு போக ரெடியாகுங்க…
    Published by:Vijay R
    First published:

    Tags: Automobile, Honda

    அடுத்த செய்தி