புதிய ஆடி கியூ8 எஸ்யுவி மாடல் காரின் புகைப்படம் வெளியீடு

news18
Updated: June 6, 2018, 8:42 PM IST
புதிய ஆடி கியூ8 எஸ்யுவி மாடல் காரின் புகைப்படம் வெளியீடு
விரைவில் வெளியாக இருக்கும் ஆடி கியூ8 எஸ்யுவி கார்.
news18
Updated: June 6, 2018, 8:42 PM IST
புதிய கியூ8 எஸ்யுவி மாடல் காரின் புகைப்படத்தை ஆடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த மாடலின் அவுட்லைன் படத்தை ஆடி நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போது இந்த மாடல் காரின் முழு புகைப்படத்தையும் ஆடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சொகுசு எஸ்யுவி கார்களில் மிகவும் பிரபலமானது ஆடி கியூ8 எஸ்யுவி. ஆடி பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்தக் கார் ஏற்கெனவே பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்இ-க்கு போட்டியாக இருந்து வருகிறது. தற்போது சர்வதேச அளவில் சொகுசு எஸ்யுவி கார்களின் மவுசு அதிகரித்து வருவதால் ஆடி நிறுவனம் கியூ8 எஸ்யுவி காரை புதிய வடிவில் வடிவமைத்து வருகிறது.

இந்த புதிய மாடல் காரின் புகைப்படத்தை சீனாவில் உள்ள ஷென்சேன் என்ற இடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கியூ8 எஸ்யுவி மாடல் கார் அடர்  மஞ்சள் நிறத்தில் உள்ளது. மேலும் பிரேம்லஸ் கதவுகள் பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஐந்து பேர் உட்காரக்கூடிய வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூப்டாப்பையும் கியூ8-ல் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு புதிய அம்சங்களுடன் உருவாகி வரும் ஆடி கியூ8 எஸ்யுவி கார் இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: June 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...