இந்த மாதமும் சரிந்த வாகனங்களின் விற்பனை... சலுகைகளை அள்ளி வழங்கும் நிறுவனங்கள்

இது போன்ற சரிவு, பொருளாதாரத்தில் பொதுவான ஒன்று தான் என்றும் இது இனி வரும் காலங்களில் சரியாகும் என்றும் வாகன விற்பனை துறையில் இருப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த மாதமும் சரிந்த வாகனங்களின் விற்பனை... சலுகைகளை அள்ளி வழங்கும் நிறுவனங்கள்
வாகனங்களின் விற்பனை சரிவு
  • News18
  • Last Updated: September 3, 2019, 8:48 AM IST
  • Share this:
இந்தியாவில் வாகனங்களின் விற்பனை இந்த மாதமும் சரிந்துள்ளது. விற்பனை ஆகாமல் இருக்கும் வாகனங்களை விற்பனை செய்ய அனைத்து நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இந்தியாவில் வாகனங்களின் விற்பனை, கடந்த ஜூலை மாதம் 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்தது. இதே நிலை தான் ஆகஸ்ட் மாதமும் தொடர்ந்தது. ஜூலை மாத சரிவை தொடர்ந்து ஆகஸ்ட் மாத விற்பனையும் பன்மடங்கு சரிந்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவன கார்களின் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 35 சதவிதம் குறைந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 17 சதவிதமும், மகேந்திரா நிறுவனத்தின் விற்பனை 32 சதவிதமும் சரிந்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம் 24 சதவிதமும், டாடா மோட்டார் மற்றும் ஹோண்டா கார் நிறுவனங்களின் விற்பனை முறையே 58 சதவிதம் மற்றும் 51 சதவிதம் என்ற அளவிலும் குறைந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் கனரக வாகனங்களின் விற்பனையும் பன்மடங்கு சரிந்துள்ளன


இது போன்ற சரிவு, பொருளாதாரத்தில் பொதுவான ஒன்று தான் என்றும், இது இனி வரும் காலங்களில் சரியாகும் என்றும் வாகன விற்பனை துறையில் இருப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கார்களின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதாலும், 2020 மார்ச் 31-க்கு மேல் BS4 ரக வாகனங்களை விற்பனை செய்ய முடியாது என்பதாலும், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல ஆயிரங்களில் தொடங்கி, சில லட்சங்கள் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளன. இருப்பினும் BS4 ரக வாகனங்களை வாங்குவதை விட, BS6 ரக வாகனங்களை வாங்கவே பலரும் காத்திருகின்றனர். ஆனால் BS6 தரத்தில் பெட்ரோல் வாகனங்களின் விலை 50 ஆயிரம் ரூபாய் வரையும், டீசல் வாகனங்களின் விலை 1 முதல் 1 லட்சத்து 50 ரூபாய் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Also watch
First published: September 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading