லைவ் மற்றும் ஃபீல் என்று இரண்டு பேர்களில் கிடைக்கும் இந்த சூப்பர் கார்களை புக் செய்ய லா மைசன் (la maison) டீலர்ஷிப் நிறுவனத்தை அணுகலாம். அல்லது அந்த காரின் வெப்சைட்டில் நாம் புக்கிங் செய்து கொள்ளலாம். வருகிற பிப்ரவரி மாதம் முதல் இந்த கார்கள் கிடைக்க துவங்கும். கார்களிலேயே பெரிய ஹேட்ச் பேக் வசதி கொண்டதாக கூறப்படும் இந்த கார்களை வாங்க மக்கள் மத்தியில் பெரிய ஆர்வம் நிலவி வருகிறது. தற்போது இந்திய சந்தைக்கு வந்திருக்கும் இது கார் அபிமானிகளின் பெரிய ஆதரவை பெற்றுள்ளது.
இப்போது வந்திருக்கும் இந்த Citroen eC3 காரானது 29.2 கிலோவாட் பேட்டரி பவர் கொண்டது. மேலும் இது 57 php மற்றும் 143 என். எம் டார்க்கை கொண்டது. இதனால் இந்த கார் 0 - 60 கிலோ மீட்டர் வேகத்தை, வண்டியை ஸ்டார்ட் செய்த வெறும் 6.8 நொடிகளில் எட்ட முடியும். இந்த காரில் அதிகபட்சமாக 107 கிலோமீட்டர் வேகம் வரை செல்லலாம். ஹேட்ச் பேக் எலக்ட்ரிக் கார்களில் இது ஒரு புதுவித அனுபவமாக பார்க்கப்படுகிறது.
இந்த கார்களில் 2 வகையான சார்ஜ் செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று டிசி பாஸ்ட் சார்ஜர் வசதி அதில் 10 முதல் 80 சதவீதம் சார்ஜை வெறும் 57 நிமிடத்தில் பெற முடியும் என்று கூறுகிறார்கள். மற்றொரு வகை மூன்று புள்ளி மூன்று கிலோ வாட் ஆன் - போர்டு ஏசி சார்ஜர். இதில் 10 முதல் 80 சதவீதம் பேட்டரியை பெற சுமார் 10.5 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். முன்னர் குறிப்பிட்டது போல ஒருமுறை சார் செய்தால் 320 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த கார்.
Also Read : ரூ.5.69 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் துவங்கும் ஹூண்டாயின் புதிய Grand i10 Nios - காரின் சிறப்பம்சங்கள்!
சி 3 மாடல் போலவே இந்த இசி3 கார்களும் காம்போசன் ஐசி 3 இன்ஜின் கொண்டது அதேபோல நீள அகலம் கொண்டது. உருவத்தில் சி3-க்கும் ஈசி3-க்கும் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. இந்த சூப்பர் காரில் ஆப்பிள் கார்ப்பரேட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 10.2 இன்ச் டச் ஸ்கிரீனும் நான்கு ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டமும் உள்ளது. டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் அளவிற்கு இந்த கார் உள்ளது, இது ஓட்டுனருக்கு ஒரு பெரிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறுகிறார்கள். இந்த சிட்ரோன் சூப்பர் கார்களில் ஈசி 3 எலக்ட்ரிக் டிரைவிங் மோடுகளில் ஈகோ மற்றும் ஸ்டாண்டர்ட் என்று இரு விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது eco model சுற்றுச்சூழல் மாச ஏற்படுத்தாத வகையில் வண்டி இயக்க உதவுகிறது.
இந்த காரில் மை சிட்ரோன் கனெக்ட் ஆப் உள்ளது, இதில் கார் ஓனர்கள் அருகில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன் போன்ற தகவல்களை அறிந்து கொள்வதற்காக இந்த ஆப் பெரிதும் உதவும். இந்த கார்களில் இரண்டு விதமான ஏர் பேக்குகளும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டமான ஏபிஎஸ் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் இ பி டி போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது இது ஓட்டும்போது ஓட்டுநர் பாதுகாப்பை பெரிதும் உறுதி செய்கிறது.
Also Read : எலெக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடிக்காமல் பாதுகாப்பது எப்படி.? சிம்பிளான சில டிப்ஸ்!
eC3 கார்களின் சந்தை விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையில் இருக்கலாம். இந்த கார்கள் டாடா டியாகோ போன்ற கார்களுக்கு பெரும் போட்டியாக அமையலாம். டாடா டியாகோ 8.49 லட்சம் முதல் 11.79 லட்சம் வரை நம் இந்திய சந்தைகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலைக்கு ஏற்றார் போல இந்த ஈசி 3 காரின் விலை நிர்ணயிக்கப்பட்டால் இந்திய சந்தையில் கடும் போட்டியாக அமையலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric car, India, Tamil News