Home /News /automobile /

ஆகாசா ஏர் நிறுவனம் : குறைவான விலையில் இந்தியாவின் புதிய விமான சேவை... டிக்கெட் விலை என்ன?

ஆகாசா ஏர் நிறுவனம் : குறைவான விலையில் இந்தியாவின் புதிய விமான சேவை... டிக்கெட் விலை என்ன?

ஆகாசா ஏர் சேவை

ஆகாசா ஏர் சேவை

இந்தியாவில் புதிதாக விமான சேவையை தொடங்க திட்டமிட்டு வரும் ஆகாசா ஏர் நிறுவனம் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் வணிக ரீதியிலான பயணத்தை தொடங்க உள்ளது.

    இந்திய கோடீஸ்வர்களில் ஒருவரும், மிகப்பெரிய பங்குச்சந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜூஜூன்வாலாவின் புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த நிறுவனத்தின் ''இட்ஸ் யுவர் ஸ்கை'' என்கிற தலைப்பில் புதிய லோகோ மற்றும் இதன் வடிவமைப்பு அறிமுகப்படுத்தியது.

    இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. குறைவான கட்டணத்தில் விமான சேவையை வழங்க ஆகாசா ஏர் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இந்நிறுவனம் எப்போது சேவையை தொடங்கும் என மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்நிலையில் ஆகாசா ஏர் நிறுவனம் போயிங் 737 மேக்ஸ் விமானத்தைப் பயன்படுத்தி தனது முதல் வணிக ரீதியிலான சேவையை மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இரண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்களுடன் சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள ஆகாசா ஏர் நிறுவனம், இம்மாத இறுதிக்குள் மற்றொரு போயிங் 737 விமானத்தை வாங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

    ALSO READ | வீட்டு நாயை குளிக்க வைக்க மறுத்த கன்மேனை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.. அதிரடி காட்டிய ஐ.ஜி!

    ஆகாச ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வர்த்தக அதிகாரி பிரவீன் ஐயர் கூறுகையில், புத்தம் புதிய போயிங் 737 மேக்ஸ் விமானம் மூலம் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே விமானங்களை இயக்க தொடங்குகிறோம். ஒவ்வொரு மாதமும் இரண்டு விமானங்களை சேர்ப்பதன் மூலமாக நகரங்களுக்கு இடையிலான சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

    ஆகஸ்ட் 7 முதல் மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் வாராந்திர விமான சேவையையும், ஆகஸ்ட் 13ம் தேதி முதல் பெங்களூரு-கொச்சி வழித்தடத்தில் வாராந்திர விமான சேவையும் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 22ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

    ALSO READ | 'ஷீரடி சாய்பாபாவிற்கு வைரம் பதித்த தங்க கிரீடம்' 80 வயதில் ஆசையை நிறைவேற்றிய மருத்துவர் !
     

    மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் விமானத்தின் டிக்கெட் கட்டணம் 4,314 ரூபாய் என்றும், அகமதாபாத்திலிருந்து மும்பை செல்லும் விமானத்திற்கான கட்டணம் 3,906 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூருவிலிருந்து கொச்சிக்கு செல்லும் விமான கட்டணம் 3,483 ரூபாயில் தொடங்கும் என்றும், கொச்சியில் இருந்து பெங்களூரு திரும்பும் விமான டிக்கெட் 5,008 ரூபாயில் இருந்து தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக பெங்களூரு, கொச்சி, மும்பை, அகமதாபாத் என 4 நகரங்களை இணைக்கும் ஆகாசா விமான நிறுவனம் அடுத்தடுத்து கூடுதல் சேவைகளை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ALSO READ | 39,000 ரயில் சக்கரங்கள் தயாரிக்க சீன நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே ஒப்பந்தம்!

    விமான போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனமான DGCA யிடமிருந்து விமான நிறுவனம் அதன் ஏர் ஆபரேட்டர் சான்றிதழை (AOC) ஜூலை 7 அன்று பெற்றுள்ளது. ஆகஸ்ட் 2021ல் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மேக்ஸ் விமானங்களுக்கு அனுமதி வழங்கியதால், ஆகாசா ஏர் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி போயிங் நிறுவனத்துடன் 72 மேக்ஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Air force

    அடுத்த செய்தி