ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

டெல்லியிலும் சேவையை தொடங்கியது ஆகாசா ஏர் நிறுவனம்!

டெல்லியிலும் சேவையை தொடங்கியது ஆகாசா ஏர் நிறுவனம்!

ஆகாசா ஏர் நிறுவனம்

ஆகாசா ஏர் நிறுவனம்

Akasa Air | ஆகாசா நிறுவனத்திடம் தற்போது 6 விமானங்கள் உள்ளன. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 30 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

இந்தியாவில் அண்மையில் விமானப் போக்குவரத்து சேவையை தொடங்கிய ஆகாசா ஏர் நிறுவனம், டெல்லி மாநகரிலும் தங்களுடைய சேவையை தொடங்கியுள்ளது. முதலாவது விமானம் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.40 மணிக்கு டெல்லியில் புறப்பட்டு, பெங்களூரு மாநகரை பிற்பகல் 2.25 மணிக்கு சென்றடைந்தது. இதுகுறித்த செய்தியை டிவிட்டர் மூலமாக அந்த நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஆகாசா ஏர் நிறுவனம் முதன் முதலாக தங்களின் விமான சேவையை தொடங்கினர். அப்போது முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய சூழலில் நாள் ஒன்றுக்கு 30 விமானச் சேவைகளை ஆகாசா நிறுவனம் இயக்கி வருகிறது. தற்போது டெல்லி மாநகரிலும் சேவை தொடங்கப்பட்டுள்ளதன் மூலமாக, இந்தியாவின் முக்கிய நகரங்களில் அந்த நிறுவனம் தங்களது சேவையை வழங்கி வருகிறது.

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆகாசா ஏர் நிறுவனம்

புதிய விமான சேவையை தொடங்குவது குறித்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தங்களுடைய மகிழ்ச்சியை ஆகாசா ஏர் நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் அந்த நிறுவனம் வெளியிட்ட பதிவில், “முதல் முறையாக டெல்லி மாநகரில் விமானச் சேவை தொடங்கப்படுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.

Also Read : இனி வெயிட்டிங் லிஸ்ட் தொல்லை இல்லை; ஐஆர்டிசியின் அதிரடி திட்டம்!

டெல்லி விமான நிலையத்தில் எங்களுடைய கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். மேலும் பல நகரங்களுக்கு எங்களது விமானச் சேவையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6 விமானங்களைக் கொண்டுள்ள ஆகாசா ஏர் நிறுவனம்

ஆகாசா நிறுவனத்திடம் தற்போது 6 விமானங்கள் உள்ளன. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 30 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது போயிங் விமானம் ஒன்றை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக 18 புதிய விமானங்களை வாங்குவதற்கு ஆகாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை தொடங்கும் நோக்கில் அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Also Read : 2027-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிலுள்ள மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை 220ஆக உயர்த்த திட்டம்.!

மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் ஆகாசா ஏர் நிறுவனம்

விமானப் போக்குவரத்து சேவையில் முதன் முதலாக கால்தடம் வைத்துள்ள தங்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது என்று ஆகாசா ஏர் நிறுவனம் இதற்கு முன்னர் கூறியிருந்தது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி துபே கூறுகையில், “தொடக்கநிலை நிறுவனமாக இருந்தாலும் நாங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். அதேசமயம் மத்திய அரசு அளிக்கும் ஆதரவு எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. விமானப் பயணங்களுக்கு நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்று கூறியிருந்தார்.

ஆகாசா ஏர் நிறுவனத்தில் தற்சயம் 800 பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இது தவிர மாதந்தோறும் 175 பணியாளர்கள் வரையில் புதிதாக சேர்ந்து வருகின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Bengaluru, Delhi Airport, Flight