• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • தீபாவளியை முன்னிட்டு சென்னை to திருச்சி, மதுரை to தூத்துக்குடி விமான டிக்கெட் விலை உயர்வு!

தீபாவளியை முன்னிட்டு சென்னை to திருச்சி, மதுரை to தூத்துக்குடி விமான டிக்கெட் விலை உயர்வு!

விமான டிக்கெட் விலை உயர்வு

விமான டிக்கெட் விலை உயர்வு

வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வதை விட உள் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் விமான டிக்கெட்டின் விலை இந்த தீபாவளிக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
பொதுவாக பண்டிகை காலம் வந்தாலே எல்லா பொருட்களின் விலையும் அதிகமாக தொடங்கி விடும். சாதாரண மளிகை பொருட்கள் முதல் தங்க நகைகள் வரை எல்லாவற்றின் விலையும் பண்டிகை நாட்களில் அதிகரிக்க செய்யும். இந்த தீபாவளிக்கும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் நடந்துள்ளது. தீபாவளிக்கு முதல் இரண்டு மூன்று நாட்கள் போக்குவரத்து சம்பந்தப்பட்ட எல்லாவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்து விடும்.

இந்த தீபாவளிக்கு விமான டிக்கெட்டின் விலை மிக அதிகமாகியுள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி போகும் விமான டிக்கெட்டின் விலை, மும்மையில் இருந்து டெல்லி போகும் டிக்கெட்டின் விலையை விட அதிகமாக உள்ளது. மேலும் மதுரையில் இருந்து தூத்துக்குடி போகும் விமான டிக்கெட்டின் விலையும் இதே போன்று அதிக விலை உள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திருச்சிக்கான விமான டிக்கெட்டின் விலை ரூ.9,500 வரைக்கும், மதுரைக்கான விமான டிக்கெட் விலை ரூ.10,000 வரைக்கும் மற்றும் தூத்துக்குடிக்கான விமான டிக்கெட் விலை ரூ.9200 முதல் ரூ.11000 வரை விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விடவும் அதிகமாகும்.

திங்கட்கிழமைக்காக முன்கூட்டியே மதுரைக்கு புக்கிங் செய்தவர்களின் விமான டிக்கெட்டின் விலை வெறும் 24 மணி நேரத்தில் ரூ.14000 வரை அதிகரித்துள்ளது. மும்பையில் இருந்து டெல்லி போகும் விமான டிக்கெட்டின் விலையை விட இதன் விலை பல மடங்கு அதிகம் என குறிப்பிடுகின்றனர். தற்போது மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்ல ரூ.6000 முதல் ரூ.7000 மட்டுமே ஆகிறது.

வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வதை விட உள் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் விமான டிக்கெட்டின் விலை இந்த தீபாவளிக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பண்டிகை காலங்களில் கொரோனாவிற்கு முன்பை விட தற்போது தான் எல்லா போக்குவரத்து கட்டணங்களும் சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி முடிந்த பின் சென்னைக்கு திரும்பும் போது இவற்றின் விலை இன்னும் கூடுதலாக உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு முன்பதிவு செய்துள்ளோருக்கு இந்த பிரச்சனை பெரிதும் இருக்காது.

Also read... சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழு விலக்கு - ஒடிசா அறிவிப்பு!

விமான கட்டணங்கள் மட்டுமில்லாமல் பேருந்து கட்டணமும் இந்த தீபாவளிக்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதன் விலையும் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பை விடவும் தற்போது உயர்ந்துள்ளதாக ட்ராவல் ஏஜென்ட்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வை கண்டித்து நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் தரப்பில் ஒவ்வொரு வருடமும் கோரிக்கை எழுந்தவண்ணம் உள்ளது. ஆனால், எல்லா வருடமும் போக்குவரத்துக்கான விலை கூடுதலாகிறதே தவிர குறைந்ததாக தெரியவில்லை என மக்கள் தங்களது அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

மேலும் ரயில்களில் பயணம் செய்வதற்கு முயற்சித்தாலும் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாகவே அதில் காட்டுகிறது. கூடுதல் ரயில்களை இம்முறை தென்னக ரயில்வே விட்டிருந்தாலும், அவற்றிலும் காத்திருப்பு பட்டியலில் தான் இருக்க வேண்டியுள்ளது என பயணிகள் கூறுகின்றனர். இனி வரும் பண்டிகை நாட்களில் முடிந்த வரை முன்கூட்டியே பதிவு செய்வது நல்லது என பலர் தங்களது அனுபவத்தின் மூலம் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: