ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

Air Asia | 90வது ஆண்டில் ஜே.ஆர்.டி டாடாவின் முதல் வணிக விமானம் - கொண்டாடும் விமான நிறுவனம்.!

Air Asia | 90வது ஆண்டில் ஜே.ஆர்.டி டாடாவின் முதல் வணிக விமானம் - கொண்டாடும் விமான நிறுவனம்.!

ஏர் ஏசியா

ஏர் ஏசியா

Air Asia JRD Tata | கராச்சியிலிருந்து அகமதாபாத் வழியாக பம்பாய்க்கு டாடா ஏர் சர்வீசின் தொடக்க விமானத்தைக் கடந்த 1932ம் ஆண்டு அக்டோபர் 15ல் தொடங்கி வைத்தார் டாடா குழுமத்தின் தலைவர் ஜே.ஆர்.டி டாடா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் முதல் விமானி, டாடா குழுமத்தின் நீண்ட காலத் தலைவர், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை, பாரத ரத்னா விருதுக்கு சொந்தக்காரர் என பன்முகத்திறமை கொண்டவர் தான் ஜே.ஆர்.டி டாடா. இந்திய தந்தைக்கும், பிரெஞ்சு தாய்க்கும் பிறந்த இவர் ராணுவத்தில் சேர்ந்துப் பணியாற்றியிருந்தாலும், இளம் வயதிலேயே விண்ணில் விமானத்தில் பறப்பதன் மீது காதல் கொண்டார். தந்தையின் அறிவுரையின் பேரில் ராணுவத்தை விட்டு வெளியேறியதோடு, டாடா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த பின்னர், 1932 ஆம் ஆண்டு ஜே.ஆர்.டி டாடாவால் ஆரம்பிக்கப்பட்டது தான் டாடா ஏர்லைன்ஸ்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஏர் இந்தியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக அக்டோபர் 15, 1932 ல் கராச்சியிலிருந்து அகமதாபாத் வழியாக பம்பாய்க்கு ஒரு இன்ஜின் டி ஹேவிலாண்ட் புஸ் மோத்தில் இயக்கப்பட்டது ஜே. ஆர்.டி டாடாவின் டாடா ஏர் சர்வீசஸின் தொடக்க விமானம். இது தான் இந்தியாவில் சிவில் விமானப் போக்குவத்திற்கானப் பாதையை வகுத்துக் கொடுத்தது. ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை மக்களிடம் நன் மதிப்பை பெற்ற விமான நிறுவனமாகவே பயணத்து வரும் நிலையில் தற்போது 90 ஆண்டை நிறைவு செய்துள்ளது.

ஏர் ஏசியாவின் 90 ஆண்டு விழா:

இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்திற்கு முன்னோடியாக விளங்கும் ஏர் இந்தியா விமானம் கடந்த அக்டோபர் 15ம் தேதியோடு 90 ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த நாளையும், ஜே.ஆர்.டி டாடாவையும் நினைவுக் கூறும் வகையில், இந்த ஆண்டு விழாவில் பல்வேறு சிறப்பம்சங்களை விமான நிறுவனம் மேற்கொண்டது. குறிப்பாக விமானப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட போர்டிங் பாஸ்களில் 90 வது ஆண்டு லோகா மற்றும் Jeh எழுத்துருவும் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் ஜே.ஆர்.டி டாடாவை மக்கள் நினைவுக்கூர்ந்தனர்.

இதோடு மட்டுமின்றி '#Spot The Pioneer', #fly the pioneer, the pioneer, #air india, # JRD Tata, #90th anniversary போன்ற பல்வேறு ஹேஷ்டேக்குகள் மூலம் டிவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக் போன்றவற்றின் பழைய விமானத்தின் புகைப்படங்களை பகிர்ந்தது மக்களிடம் டிரெண்டாகி உள்ளது. மேலும் இந்தியாவின் முன்னோடி விமானத்தின் அசல் புகைப்படங்களை பகிரும் நபர்களுக்கு இலவச விமான பயணத்தை வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

Also Read : ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - பிரபலமான இந்த டூரிங் பைக்கின் வரலாறு தெரியுமா.?

இவ்வாறு ஜே.ஆர்.டி டாடாவின் முதல் வணிகப் பயணத்தின் 90வது ஆண்டு விழாவை டிஜிட்டல், தரை மற்றும் விமானத்தில் பல்வேறு செயல்பாடுகளை நடத்தி கொண்டாடப்பட்டது. குறிப்பாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் தந்தையாக கருதப்பட்டதோடு பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதுடன், அவருக்கு இந்திய விமானப்படையின் கவுரவ ஏர் வைஸ் மார்ஷல் பதவியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Air Asia, TATA