பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய சிறந்த ஏர் பியூரிஃபையர் கார்களின் பட்டியல்

கியா சோனெட்

கார்களில் ஏர் பியூரிஃபையர் அம்சங்கள் முக்கியமானதாக மாறிவரும் சூழலில் இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஏர் பியூரிஃபையர் அம்சங்களுடன் உள்ள கார்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காலநிலை மற்றும் காற்றின் தரக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமான அம்சமாக மாறி வருகிறது. குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் மாசுபாடு அதிகரித்து வருகிறது. அதுவும் குளிர்காலத்தில் காற்றின் தரம் பெரும்பாலும் மிகவும் ஆபத்தான அளவிற்கு குறையும் போது இந்த அம்சம் இன்னும் முக்கியமானதாக அமைகிறது. 

இதன் காரணமாகவே, பல கார் தயாரிப்பாளர்கள் தாங்கள் வெளியிடும் தயாரிப்புகளில் காற்று சுத்திகரிப்பன்களை வழங்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் பெரும்பாலும், இந்த அம்சத்தோடு வரும் கார்கள் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இருப்பினும், நீங்கள் தேர்வு செய்ய சில குறைந்த விலை கார்களும் உள்ளன. அதன்படி உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல காற்று சுத்திகரிப்பு அம்சத்தைக் கொண்ட சிறந்த 5 கார்களின் பட்டியல் குறித்து காண்போம்.

ஹூண்டாய் i20

ஹூண்டாய் i20 வாகனத்தின் விலை ரூ.6.80 லட்சம் முதல் தொடங்கி ரூ.11.11 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்களின் அடிப்படையில் மூன்றாம் தலைமுறையுடன் i20 பல மாற்றங்களுடன் வருகிறது. மேலும் ஒரு முக்கிய கூடுதல் அம்சமாக காற்று சுத்திகரிப்புடன் வருகிறது. மேலும் இந்த கார் எண்ணற்ற வகைகளில் வருகின்றன. அவை அஸ்டா (ஓ), இதன் விலை ரூ. 9.20 லட்சத்தில் தொடங்கி ரூ. 11.18 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தது அஸ்டா டர்போ, இதன் விலை ரூ. 9.90 - ரூ. 10.67 லட்சம் மற்றும்  அஸ்டா சி.வி.டி, இதன் விலை ரூ.9.70 லட்சம் ஆகும்.

ஹூண்டாய் வென்யூ

இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 6.75 லட்சத்தில் தொடங்கி ரூ.11.65 லட்சம் வரை விற்பனையாகிறது. இது சப் -4 எம் எஸ்யூவி பிரிவில் தனது போட்டியாளர்களுக்கு கடும் சவாலை அளித்துள்ளது. மேலும் எஸ்எக்ஸ் (ஓ) (ரூ. 10.85 - ரூ. 11.09 லட்சம்) மற்றும் எஸ்எக்ஸ் + டிசிடி (ரூ. 11.36 - ரூ. 11.51 லட்சம்) உள்ளிட்ட சில வகை கார்கள் காற்று சுத்திகரிப்பு அம்சத்துடன் கிடைக்கின்றன.

கியா சோனெட்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கியா சோனெட் எரிபொருள் செயல்திறனுக்காக சில பிரீமியம் அம்சங்கள் மற்றும் பவர்டிரெய்ன் விருப்பங்களைக் கொண்டுள்ளது. இதன் HTX+ வகை ரூ.11.65 லட்சம் முதல் ரூ. 11.75 லட்சம் விலையிலும் மற்றும் GTX+ வகை ரூ.11.99 லட்சம் முதல் ரூ. 12.99 லட்சம் விலையிலும் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட காற்று சுத்திகரிப்பு அம்சத்துடன் வருகிறது. இந்த வாகனத்தின் விலை ரூ. 6.71 லட்சம் முதல் ரூ 12.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Also read... Google Photosல் இருந்து புகைப்படங்களை சேமிப்பது, பதிவிறக்குவது எப்படி?ஹூண்டாய் கிரெட்டா

கிரெட்டா சந்தேகத்திற்கு இடமின்றி ஹூண்டாயின் மிக வெற்றிகரமான படைப்புகளில் ஒன்றாகும். இது எஸ்எக்ஸ் (ஓ) (ரூ.15.91 - ரூ.17.32 லட்சம்) மற்றும் எஸ்எக்ஸ் தானியங்கி (ரூ.15.06 - ரூ.16.11 லட்சம்) வகைகளில் காற்று சுத்திகரிப்புடன் வருகிறது. இதன் விலை ரூ.9.81 லட்சத்தில் தொடங்கி  ரூ.17.17 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கியா செல்டோஸ்

கியா செல்டோஸ், கிரெட்டாவைப் போலவே பவர்டிரெய்ன் விருப்பங்களையும் மற்ற அம்சங்களுடன் கூடுதலாக ஒரு காற்று சுத்திகரிப்பையும் கொண்டுள்ளது. இது எச்.டி.எக்ஸ் (ரூ. 13.34 - ரூ. 14.44 லட்சம்), எச்.டி.எக்ஸ் + (ரூ. 15.49 - ரூ. 16.49 லட்சம்), எச்.டி.எக்ஸ் ஆண்டு பதிப்பு (ரூ. 13.75 - ரூ. 14.85 லட்சம்), ஜி.டி.எக்ஸ் (ரூ. 15.54 லட்சம்), மற்றும் ஜி.டி.எக்ஸ் + (ரூ. 16.39 - ரூ. 17.34 லட்சம்) போன்ற வகைகளில் கிடைக்கின்றன. இந்த வாகனத்தின் விலை ரூ.9.89 லட்சத்தில் தொடங்கி ரூ.17.17 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. 
Published by:Vinothini Aandisamy
First published: