வடதுருவத்தின் மேல் பறக்க உள்ள இந்தியாவின் முதல் விமானமாகிறது ஏர் இந்தியா!

வடதுருவத்தின் மேல் பயணிக்கும் போது 12ஆயிரம் கி.மீ தூரம் என்பது 8 ஆயிரம் கி.மீ ஆகக் குறையும்.

Web Desk | news18
Updated: August 13, 2019, 5:47 PM IST
வடதுருவத்தின் மேல் பறக்க உள்ள இந்தியாவின் முதல் விமானமாகிறது ஏர் இந்தியா!
ஏர் இந்தியா (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: August 13, 2019, 5:47 PM IST
வடதுருவத்தின் வான்வெளிப் பயணப் பாதையில் முதல் இந்திய விமானமாக ஏர் இந்தியா விமானம் பயணிக்க உள்ளது.

சர்வதேச விமானங்கள் சில இந்த வடதுருவப் பாதையில் பயணித்துள்ளன. ஆனால், ஒரு இந்திய விமானம் கூட இந்தப் பாதையில் பயணித்தது இல்லை. முதன்முறையாக புது டெல்லி முதல் சான் பிரான்சிஸ்கோ பயணிக்க உள்ள ஏர் இந்தியா விமானம் வடதுருவத்தின் மேலே பயணிக்க உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் இப்பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் வடதுருவத்தின் மீது பறக்க விரும்பும் விமான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிதாக உருவாகியுள்ள வடதுருவ மேற்பாதையில் பயணிக்க ஏர் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.


தற்போது புது டெல்லியிலிருந்து வங்கதேசம், மியான்மர், சீனா மற்றும் ஜப்பான் வழியாக பசிபிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்காவை 17 மணி நேரத்தில் சென்றடைகிறது ஏர் இந்தியா விமானம். ஆனால், வடதுருவத்தின் மேல் பறக்கும் போது இப்பயண நேரம் 90 நிமிடங்கள் குறைந்து அமெரிக்காவுக்கு விமானம் 15.5 மணி நேரங்களிலேயே சென்றடையும்.

வடதுருவத்தின் மேல் பறக்கும் போது புது டெல்லியிலிருந்து கிரிகிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, ஆர்டிக் பெருங்கடல், கனடா வழியாக விமானம் அமெரிக்காவை சென்றடையும். வடதுருவத்தின் மேல் பயணிக்கும் போது 12ஆயிரம் கி.மீ தூரம் என்பது 8 ஆயிரம் கி.மீ ஆகக் குறையும்.

மேலும் பார்க்க: இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் ஹூண்டாய்-க்கு முதலிடம்!
First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...