ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

2.5 லட்சம் வாடிக்கையாளுக்கு ரீபண்ட் தொகை - ஏர் இந்தியா அறிவிப்பு!

2.5 லட்சம் வாடிக்கையாளுக்கு ரீபண்ட் தொகை - ஏர் இந்தியா அறிவிப்பு!

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

Air India | முன்பதிவு செய்த விமான டிக்கெட்டிற்கான பணத்தை அல்லது வேறு காரணத்திற்காக டிக்கெட்டை ரத்து செய்தவர்களுக்கு அவர்கள் செலுத்தி தொகையை இதுவரை திரும்ப தராமல் இருந்துள்ளது ஏர் இந்தியா.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா காலத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க முடியாத 2.5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய 150 கோடி ரூபாய் அளவிலான ரீபண்ட் தொகையைத் திரும்பத் தருவதற்கானப் பணிகளை ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

பயணிகளின் விமானப்போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது ஏர் இந்தியா. இருந்தப்போதும் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு கடும் நிதி நெருக்கடியை ஏர் இந்தியா நிறுவனம் சந்திக்க நேரிட்டது. ஊழியர்களுக்கு சம்பள வழங்க முடியாத நிலை, பயணிகள் ரத்து செய்த டிக்கெட்டிற்கான முன்பதிவு பணம் மீண்டும் திரும்ப செலுத்த முடியாத நிலை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. இந்த சூழலில் தான் ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்தாண்டு அக்டோபர் மாதம் டாடா நிறுவனம் வாங்கியது.

இதனையடுத்து ஏர் இந்தியாவில் பல்வேறு மாற்றங்களும், விமானப்பயணிகளின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை சரிசெய்யும் நோக்கத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் காரணமாக அடிக்கடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, திட்டமிட்ட விமான சேவைகளை முறையாக பயன்படுத்த முடியவில்லை. இதனையடுத்து முன்பதிவு செய்த விமான டிக்கெட்டிற்கான பணத்தை அல்லது வேறு காரணத்திற்காக டிக்கெட்டை ரத்து செய்தவர்களுக்கு அவர்கள் செலுத்தி தொகையை இதுவரை திரும்ப தராமல் இருந்துள்ளது ஏர் இந்தியா.

Also Read : EV பேட்டரி பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான காலக்கெடுவை டிசம்பர் வரை நீட்டித்த மத்திய அரசு!

இதன்படி சுமார் 2.5 லட்சம் விமான பயணிகளுக்கு ரூபாய் 150 கோடி வரையிலான பணம் தாராமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் விமானப் பயணிகளுக்கு கொடுக்க வேண்டியிருந்த ரீபண்ட் தொகையை விரைவாக வழங்குவதற்கான ஊழியர், தொழில்நுட்பம், வேகமான செயல்பாடு போன்ற அனைத்து விஷயங்களையும் தயார் செய்து கொண்டிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. எனவே விமான பயணிகளுக்கு வழங்க வேண்டிய ரீபண்ட் தொகை இன்னும் 2-3 நாள்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இதோடு வங்கி, கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு தர வேண்டிய தொகை அடுத்த இரண்டு வாரங்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இத்தகவல் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தப்போதும் ஏர் இந்தியா அறிவித்துள்ளப்படி, ரீபண்ட் தொகையை திரும்பப் பெற வேண்டும் என்றால் வாடிக்கையாளர்கள் சில விஷயங்களை கட்டாயம் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ரீபண்ட்க்குத் தகுதியானர்கள் என்ன காரணம்? என்ன நடந்தது? என்பது போன்ற விபரங்களை ஏர் இந்தியா இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம் எனவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.

இதுகுறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில்சன், தனது ஊழியர்களிடம் இனி வரும் காலங்களில், அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விமானங்களின் நேர மாற்றம், விமான ரத்து போன்றவை எதனால் நிகழ்ந்து? என்பதை துல்லியமாகவும், தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் இனி வரும் காலங்களில் வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்துவதற்கு உதவும் என்றும் தெரிவித்தார். மேலும் இதுவரை ஏர் இந்தியா நிறுவனத்தின் மீதுள்ள தவறானக் கருத்துக்கள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

இதோடு ஏர் இந்தியா இணையதள பக்கத்தில், பழைய ரீபண்ட் தொகையைப் பெறுவதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் அனைத்து விமானப்பயணிகளுக்கும் ரிபண்ட் தொகையை திரும்ப பெற உதவியாக இருக்கும் என நம்புவதாகத் தெரிவிக்கிறார் ஏர்போட் அதிகாரி டோக்ரா.

First published: