எரிபொருளுக்கான கடன் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாய்! ஏர் இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்

ஐஓசி, பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் பாக்கியால் எரிபொருள் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

எரிபொருளுக்கான கடன் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாய்! ஏர் இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்
ஏர் இந்தியா
  • News18
  • Last Updated: August 25, 2019, 8:33 PM IST
  • Share this:
ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பியதற்கான கடன் மட்டும் 5ஆயிரம் கோடி ரூபாய் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த எட்டு மாதங்களாக எரிபொருளுக்கான கட்டணத்தை செலுத்தவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஐஓசி, பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் பாக்கியால் கொச்சி, பூனேம் பாட்னா, ராஞ்சி மற்றும் மொஹாலி ஆகிய விமான நிலையங்களில் எரிபொருள் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இந்த பெட்ரோலிய நிறுவனங்களின் முடிவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடன் தொகைக்கு வட்டியும் விதிக்கப்படுவதால் நாளுக்குநாள் கடன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏர் இந்தியா ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு எரிபொருளுக்கான கட்டண விலையை செலுத்த வேண்டும்.


ஆனால், தற்போது 230 நாட்களாகியும் கடனை அடைக்க ஏர் இந்தியா எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்பதால் எரிபொருள் மறுக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்ட ஆறு விமான நிலையங்களில் செயல்படும் ஏர் இந்தியா விமானங்கள் மொத்தமாக ஒரு நாளுக்கு 250 கிலோலிட்டர் எரிபொருளைப் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: பழைய அரசு வாகனங்களைப் புதிதாக மாற்ற உத்தரவு... மாருதி சுசூகி-க்கு அடிக்கும் ஜாக்பாட்!
First published: August 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading