கடந்த சில வாரங்களாகத் தான் விமான நிறுவனங்கள் மீண்டும் முழுவீச்சில் இயங்க தொடங்கியுள்ளன. இந்தியாவிலும் விமான சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்பட்டு தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதும் பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏர் இந்தியா ஏலத்தில் வெற்றி பெற்றதை அடுத்து ஜனவரி 27ஆம் தேதியன்று டாடா குழுமம் ஏர் இந்தியாவின் முழு பொறுப்பையும் எடுத்துக் கொண்டது. ஏர் இந்தியா நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அதன் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது விருப்ப ஓய்வை நிறுவனம் அறிவித்துள்ளது. விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
விருப்ப ஓய்வு பெறும் வயதை 55 வயதில் இருந்து 40 வயதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஓய்வு பெறுபவர்களுக்கு கூடுதலாக ரொக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விமான நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன், டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களான டாடா ஸ்டீல் மற்றும் விஸ்தாரா ஆகியவற்றில் பணியாற்றி வரும் மூத்த மற்றும் நடுத்தர-லெவல் அதிகாரிகளை கொண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்தை மறுசீரமைத்துள்ளார்.
நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றறிக்கையில், ஏர் இந்தியாவில் இருக்கும் ஊழியர்கள் ஏற்கனவே உள்ள விதிகளின் படி, 55 வயதுக்கும் மேற்பட்ட நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுபவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, 55 வயதானவர்கள் தான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தளர்த்தி, 40 வயதில் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read : எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி... மத்திய அரசு அதிரடி முடிவு!
“S-3, S-5, S-7, E-0, E-1, E-2, E-3, E-4, and E-5” கிரேடுகளில் உள்ள கேபின் குழு பணியாட்கள், “S-2, S-5, S-6 and S-7" கிரேடுகளில் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்கள், மற்றும் “S-1, S-2, S-3, S-4, and S-5" கிரேடுகளில் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். மேலும், ஜூன் 1 முதல் ஜூலை 31, 2022க்குள் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு எக்ஸ்-கிரேசியா தொகையும் வழங்கப்படும்.
Also Read : குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய தரமான டாப் 5 ஸ்கூட்டர்கள்..!
மேலும், இந்த மாதம் 30ம் தேதிக்குள் விருப்ப ஓய்வு பெறும் நபர்களுக்கு எக்ஸ்-கிரேசியா தொகையுடன் சேர்த்து, கூடுதலாக ரொக்க இன்சென்டிவ் கிடைக்கும் என்றும் அறிக்கையில் இருந்தது.
எந்தந்த ஊழியர்களுக்கு எந்த விதமான நன்மைகள் வழங்கப்படும் என்பதை விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் நிர்வாகம் முடிவு செய்யும் என்ற செய்தியும் வெளியானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.