விமானம் கிளம்பும்போது கழண்டு விழுந்த சக்கரம்... வீடியோ எடுத்த விமானப் பயணி...!

வீடியோவில், விமானம் மேலே எழும் நேரத்தில் சக்கரம் ஒன்று தீப்பிடித்து கழண்டு விழுகிறது.

விமானம் கிளம்பும்போது கழண்டு விழுந்த சக்கரம்... வீடியோ எடுத்த விமானப் பயணி...!
ஏர் கனடா
  • News18
  • Last Updated: January 9, 2020, 3:26 PM IST
  • Share this:
ஏர் கனடா விமானம் ஒன்று ஓடுதளத்திலிருந்து கிளம்பும்போது அதனது சக்கரம் கழண்டு விழும் காட்சியை அதே விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதவிட்ட அந்தப் பயணி, “நான் பயணிக்கும் விமானத்தில் சக்கரம் கழண்டுவிழுகிறது. 2020 சிறப்பாகவே தொடங்குகிறதே” எனக் குறிப்பிட்டிருந்தார். வீடியோவில், விமானம் மேலே எழும் நேரத்தில் சக்கரம் ஒன்று தீப்பிடித்து கழண்டு விழுகிறது.

இந்த விமானம் அதே வேகத்தில் மேல் எழுந்து பறக்கிறது. ’நல்வாய்ப்பாக இந்த சக்கரம் அந்தரத்தில் பறக்கும் போது விழவில்லை’ என்றும் ‘இந்த வீடியோக்குப் பின் எந்தவொரு விமான விபத்தும் எங்கும் நிகழவில்லை. அதனால் அந்த விமானம் தப்பித்ததாகவே நம்புகிறோம்’ என்றும் ட்விட்டர்வாசிகள் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பார்க்க: 2020-ம் ஆண்டில் ட்ரெண்ட் ஆக உள்ள டாப் எலெக்ட்ரிக் கார்கள்..!
First published: January 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading