அதிக எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி S1 மற்றும் S1 Pro என இரண்டு மாடல்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த ஓலா நிறுவனம் அடுத்ததாக எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் களமிறங்குகிறது.
வாடகை கார் ஒருங்கிணைப்பு நிறுவனமாக பயணத்தை துவங்கிய ஓலா நிறுவனத்தின் மொபைல் செயலி வழியாக கேப் புக் செய்தால் வீட்டு வாசலுக்கே கார் வந்துவிடும். ஆனால் இப்படிப்பட்ட ஓலா நிறுவனம் சொந்தமாக ஒரு கார் கூட உற்பத்தி செய்வது கிடையாது என கூறுவது உண்டு. ஆனால் இனி இதுபோல சொல்ல முடியாத வகையில் கார் தயாரிப்பிலும் களமிறங்குகிறது ஓலா நிறுவனம்.
அதிகரித்து வரும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட ஓலா நிறுவனம், கடந்த ஆண்டு எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பிக்ல் ஈடுபட போவதாக அறிவித்த்து. சொன்னது போலவே தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலையையும் நிறுவியுள்ளது.
Also Read: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்: ஆச்சரியப்படுத்தும் விலை, மைலேஜ் - முழு விவரம்!
இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட S1 மற்றும் S1 Pro ஆகிய இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகம் செய்தது ஓலா நிறுவனம்.
அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலா ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. புக்கிங் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் புக்கிங்குகள் குவிந்தது ஓலா நிறுவனத்துக்கு புது தெம்பை அளித்திருக்கிறது. செப்டம்பர் 8ம் தேதி முதல் நேரடியாக வீடுகளுக்கே பைக்குகள் டெலிவரி செய்யப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read: ‘உங்கள் தைரியத்துக்கும், உத்வேகத்திற்கும் சல்யூட்!’ – தாலிபான்களை பாராட்டிய இந்திய முஸ்லிம் அமைப்பு!
இந்நிலையில் வெற்றிகரமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்கிய ஓலா நிறுவனம் அடுத்ததாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் களமிறங்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ஓலா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறுகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஓலாவின் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் அது குறித்த மேலும் தகவல்களை அவர் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட இருக்கும் ஓலாவின் எலக்ட்ரிக் கார்கள் எதிர்கால வடிவமைப்பில் இருக்கும் என தெரியவந்திருக்கிறது. இது ஒரு காம்பாக்ட் சிட்டி காராக இருக்கும் எனவும் குறைந்த ரேஞ்சுடன் கூடியதாக இருந்தாலும் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் அது களமிறக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
Also Read: தாலிபான்களை இந்திய சுதந்திர வீரர்களோடு ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாதி எம்.பி மீது தேசதுரோக வழக்கு!
இதற்காக பெங்களூருவில் சர்வதேச தரத்திலான டிசைன் மையம் ஒன்றை ஓலா அமைக்க இருக்கிறது. மேலும் டாடா நிறுவன டிசைனர்கள் சிலரை தன் பக்கமாக ஓலா ஈர்த்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் ஆகிவந்தாலும், சார்ஜிங் கட்டமைப்பு என்பது ஒரு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. இந்த சவாலை எதிர்கொள்வதற்காக மிகப்பெரிய சார்ஜிங் கட்டமைப்பை ஓலா நிறுவனம் உருவாக்கும் என அறிவித்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதல் ஆண்டிலேயே 100 நகரங்களில் 5000 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்திருக்கிறது ஓலா, இது தற்போதைய அளவில் இந்தியாவில் இருக்கும் சார்ஜிங் நிலையங்களை விட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளது ஓலா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric bike, Electric car, Krishnagiri, Ola