European Countries: ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா தளங்கள் திறப்பு - இந்தியர்களுக்கு அனுமதியுண்டா?

மாதிரி படம்

11 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருக்க வேண்டும்.

  • Share this:
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் உள்ளது. திருமணம் போன்ற வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் கூட எவ்வித கொண்டாட்டமுமின்றி எளிமையாக நடைபெற்று வருகின்றன. உலக அளவில் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

தற்போது உலக அளவில் ஒரு சில நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. அதற்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணியாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த நாடுகளில் சுற்றுலாவிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இன்னும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில் இந்தியா விமானங்கள் பெரும்பாலான நாடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவதற்கு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.

ஃபிரான்ஸ்

நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டீர்கள் என்றால் நீங்கள் ஃபிரான்ஸிற்கு வரலாம். ஆனால் அந்த தடுப்பூசி, பைசர் (Pfizer), ஆஸ்ட்ராஜெனிகா(AstraZeneca), மாடெர்னா (Moderna), ஜான்சன் அண்ட் ஜான்சன் (Johnson and Johnson) ஆகிய தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை செலுத்தியிருக்க வேண்டும். கடந்த 72 மணி நேரத்தில் பிசிஆர் டெஸ்ட்டில் நெகட்டிவ் என வந்திருக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சிறுவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெரியவர்களுடன் வரலாம். ஆனால் 11 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருக்க வேண்டும். இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட 16 நாடுகளில் வைரஸின் தாக்கம் கவலையுறச் செய்யும் நிலையில் இருப்பதால் அந்த நாடுகளுக்கு தடையுள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் முக்கிய காரணங்கள் தவிர்த்து சுற்றுலாவிற்காக வரும் பயணிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு அனுமதியில்லை.

இத்தாலி

அதிக அளவு இத்தாலிக்கு சுற்றுலா வரும் அமெரிக்க பயணிகள் தங்களை 10 நாட்களுக்கு முன் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். முற்றிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட விமானங்கள், அதாவது விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட விமானத்துக்கு மட்டுமே அனுமதி. பயணிகள் தங்கள் சுய விவரங்கள் அனைத்தும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

கனடா, ஜப்பான், துபாய் போன்ற கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பயணிகள் கொண்ட விமானங்கள் கடந்த மே மாதம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்தும் பயணிகள் கடந்த மாதம் முதல் அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகள் கந்த 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவுகள் அடங்கிய சான்றிதழை அளிக்க வேண்டும்.

கிரீஸ்

கிரீஸ் நாட்டில் சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கிறது. பயணிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழையோ அல்லது பிசிஆர் டெஸ்ட் செய்யப்பட்டு நெகட்டிவ் என வந்த சான்றிதழையோ சமர்பிக்க வேண்டும். தற்போது ஜூன் 14 வரை மட்டுமே இந்த விதிமுறைகள் செல்லும் என்று கூறப்பட்டாலும் பயணிகளுக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 1 ம் தேதி, கிரீஸ், ஜெர்மனி மற்றும் ஐந்து பிளாக் உறுப்பினர்கள் பயணிகளுக்காக ஒரு கொரோனா சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயின்

ஸ்பெயின் அதன் கோடை சுற்றுலா பருவத்தை பெரும்பாலான நாடுகளிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட, தாங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கக்கூடிய ஐரோப்பிய பயணிகளையும் வரவேற்கிறது. சுற்றுலா பயணிகள் ஸ்பெயின் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

Also read... 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நாய்களை கொண்டு வர அமெரிக்கா திடீர் தடை - ஏன் தெரியுமா?

இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா பயணிகளுக்கு அனுமதியில்லை. காரணம் அங்கு கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் தடை தொடர்கிறது. அதனைப் போலவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அமெரிக்கர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் பிரிட்டனில் இருந்து எந்த சான்றிதழும் இல்லாமல் பயணிக்கலாம். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ், கொரோனாவில் இருந்து குணமான சான்றிதழ், அல்லது 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட பிசிஆர் டெஸ்ட் ஆகியவை பயணிகள் சமர்பிக்க வேண்டும்.

பிரிட்டன்

ஆபத்தான நாடுகளை மதிப்பிடுவதற்கு பிரிட்டன் ஒரு டிராஃபிக் லைட் சிஸ்டமை கொண்டுள்ளது. இங்கிலாந்து விமான நிறுவனங்களும் விமான நிலைய ஆபரேட்டர்களும் சுற்றுலாவை மீண்டும் தொடங்க அனுமதிக்க அழுத்தம் கொடுக்கின்றனர். வைரஸின் டெல்டா மாறுபாடு குறித்த தகவல் அதிகரித்துவருவதால் கவலை அடைந்துள்ள பிரிட்டன், வேறு சில நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சிறப்பு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மாறுபட்ட கொள்கைகளை கொண்டுள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு டிஜிட்டல் பயண சான்றிதழ், பயணம் மேற்கொள்வதற்கு சமீபத்தில் பரிசோதனை செய்துகொண்டவர்கள், சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் ஆகியவை குறித்து கூட்டாக கொள்கைகளை வகுத்துள்ளது. ஸ்பெயின், ஜெர்மனி, கிரீஸ், பல்கேரியா, குரோடியா, டென்மார்க், போலந்து போன்ற பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த நடைமுறையை பின்பற்றத் துவங்கியுள்ளன. மற்ற நாடுகளும் ஜூலை 1 முதல் இந்த நடைமுறையை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: