யமஹா நிறுவனம் விலை குறைந்த ‘R15 S’ இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ‘யமஹா’ அட்டகாசமான இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்துகிறது. அது யமஹாவின் முந்தைய சக்ஸஸ் மாடலான ‘Yamaha R15 V4’ போன்று, குறைந்த விலையில் கிடைக்கும். அது அநேகமாக ‘Yamaha R15S’ ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா நிறுவனத்தின் R15 பைக்குகளுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு.
இதன் அடுத்த வெர்சன் எப்பொழுது வரும் என்று வாடிக்கையாளர்கள் காத்திருக்க, புதிய அப்டேட் வந்திருக்கிறது. யமஹா மோட்டார் நிறுவனம் இந்தியாவில், சமீபத்தில் R15 S-க்கு ஒப்புதலைப் பெற்றுள்ளது. யமஹா R15 V4 பைக்கை போலவே, அதனை விட குறைந்த விலையில் விற்க முடிவு செய்துள்ளது. மிகவும் மலிவு விலையில் வரும் ‘R15 S’ பேட்ஜுடன் YZF-R15 V3 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாக, R15 V2 ஐ விட R15 S மிகவும் மலிவு விலையில் வரலாம்.
புதிய R 15 எஸ் ஆனது R15 V3 பைக்கின் ரீ-பிராண்ட் வெர்சனாகவும் யமஹா கொண்டு வருகிறது. R15 V 2 மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட அதே ஃபார்முலா தான் R15 S பைக்கின் வடிவமைப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. R15 V 2 பைக்கை யமஹா நிறுவனம் பெரிய அளவில் எக்டேன்ஷன் செய்யாமல் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும். புளூடூத் இணைப்பு, ஆப்ஷனல் குயிக் ஷிஃப்டர், தலைகீழான ஃபோர்க் சஸ்பென்ஷன் அமைப்பு போன்ற அம்சங்கள் இல்லாமல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
Must Read | இந்தியாவில் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த அவசரம் காட்டாத மாருதி சுசூகி!
R15 Sல் முன்பக்க சஸ்பென்ஷன் அமைப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம். முழு டிஜிட்டல் எல்சிடி மீட்டர் கண்சோலும் இதனுடன் வருகிறது. புதிய யமஹா R15 S ஆனது, புதிய யமஹா R15 V 4 போன்ற அதே 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படும். புதிய R15 V4 பைக்கில் வழங்கப்பட்டுள்ள டிசைன் அப்டேட்கள், யுஎஸ்டி ஃபோர்க்குகள், நிறங்கள், கிராஃபிக்ஸ் மற்றும் மற்ற காஸ்மெட்டிக் மேம்பாடுகள் போன்ற அனைத்தும் R15 S வேரியண்ட்டிலும் யமஹா வழங்கும் என்று கருதப்படுகிறது.
யமஹா R15 V3 பைக்கின் அதே என்ஜின் தான் R15 S பைக்கிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்தியாவில் வரவிருக்கும் யமஹா பைக்கில் உள்ள இந்த மோட்டார் பைக் அதிகபட்சமாக 18.3 பிஎச்பி ஆற்றலை வெளியிடும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது யமஹா R15 V3 இன் எஞ்சின் வெளியீட்டை போன்றே இருக்கும் என நம்பலாம். கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய முந்தைய R15 இன் 155 சிசி, SOHC, லிக்யுடு கூல்டு, 4-வால்வு என்ஜின் பொருத்தப்படலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Yamaha, Yamaha bike