Home /News /automobile /

கடந்த 3 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 950% அதிகரிப்பு..

கடந்த 3 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 950% அதிகரிப்பு..

காட்சி படம்

காட்சி படம்

வருங்காலங்களில்  இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டின் அளவானது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் வாகனங்களின் விற்பனையானது பல மடங்கு அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையின் பெருக்கத்தால் வாகன உற்பத்தியானது அதிகரித்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது போன்று அதிக அளவில் வாகனங்களை பயன்படுத்துவதால் காற்று மாசு போன்ற பாதிப்புகள் அதிகரிக்கவும் செய்கிறது. எனவே எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது.

இதை கருத்தில் கொண்டு தான் பல நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டு பலர் எலக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்கின்றனர். மக்களின் தேவைக்கு ஏற்ப இவ்வகை வாகனங்களின் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்கள் பல ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருங்காலங்களில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டின் அளவானது நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எலெட்ரிக் வாகனங்களின் எதிர்காலத்தை மேம்படுத்த இந்தியா தற்போது முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு வழங்கும் திட்டங்களுக்கு கூடுதலாக பல மாநில அரசுகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி, குஜராத் மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையானது 950 சதவீதமாக அதிகரித்துள்ளது.

also read : அடுத்த 5 ஆண்டுகளில் 10 புதிய EV தயாரிப்புகளை வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டம்!

மாநில அரசாங்கத்தின் வாகன விற்பனையின் அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள் காட்டி இந்த அறிக்கையை தயாரித்து உள்ளனர். இந்த அறிக்கைகள் 2019 ஆம் ஆண்டின் இறுதியில், பதிவுசெய்யப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 950 ஆக பதிவாகி உள்ளது. இது 2020 ஆண்டில் 1,119 ஆக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 9,780 ஆக உயர்ந்து திடீர் எழுச்சி பெற்றது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் குஜராத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் பதிவு 956 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று சமீபத்திய அறிக்கையில் விளக்கியுள்ளனர்.



மாநில அரசு தனது முதல் மின்சார வாகனக் கொள்கையை, மானியங்கள் மற்றும் மூலதன ஊக்குவிப்புகளை வாங்குபவர்களுக்கும் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கும் வழங்குவதன் மூலம் ஜூன் 2021 முதல் எலக்ட்ரிக் வாகனங்களின் பதிவு பெருமளவில் அதிகரிக்கத் தொடங்கியது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் வரை எரிபொருளைச் சேமிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

also read : இந்தியாவில் மொத்தம் எத்தனை எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

முக்கியமாக அடுத்த நான்கு ஆண்டுகளில் கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை ஆறு லட்சம் டன்கள் அளவிற்கு குறைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனும் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்புகள் தொடங்கப்பட்டது. 110,000 எலக்ட்ரிக்-இரு சக்கர வாகனங்கள், 70,000 எலக்ட்ரிக்-மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 20,000 எலக்ட்ரிக்-நான்கு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 200,000 எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 1 ஜூலை 2025 வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Electric car

அடுத்த செய்தி