டாப் 10 கார்கள் ரேங்கிங் பட்டியலில் 8 இடங்களில் மாருதி சுசூகி..!

கடந்த டிசம்பர் மாத கார் விற்பனையில் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது மாருதி சுசூகி.

டாப் 10 கார்கள் ரேங்கிங் பட்டியலில் 8 இடங்களில் மாருதி சுசூகி..!
வேகன்ஆர்
  • News18
  • Last Updated: January 11, 2020, 7:24 PM IST
  • Share this:
இந்தியாவின் முன்னனி கார் நிறுவனமான மாருதி சுசூகியின் கார்கள் தொடர்ந்து விற்பனையிலும் திறனிலும் முதலிடங்களைக் கைப்பற்றி வருகிறது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 கார்கள் பட்டியலில் எட்டு இடங்களை மாருதி சுசூகியின் தயாரிப்புகளே கைப்பற்றியுள்ளன. கடந்த டிசம்பர் மாத கார் விற்பனையில் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது மாருதி சுசூகி.

மாருதி சுசூகியின் கார்களிலேயே பலேனோ கார் அதிக விற்பனையைப் பெற்றுள்ளது. கடந்த டிசம்பரில் மட்டும் 18,464 பலேனோ கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இரண்டாம் இடத்தில் ஆல்டோ உள்ளது. ஆல்டோ விற்பனை எண்ணிக்கை 15,489. மூன்றாம் இடத்தில் செடான் டிசைர் கார் உள்ளது. டிசைர் கார்கள் மட்டும் 15,286 விற்பனை ஆகியுள்ளன.


தொடர்ந்து 4, 5, மற்றும் 6-ம் இடங்களில் சிஃப்ட், வித்தாரா ப்ரெஸ்சா, வேகன்ஆர் கார்கள் இடம்பெற்றுள்ளன. 7-ம் இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்யூவி வென்யூ கார் இடம்பிடித்துள்ளது. 8-ம் டத்தில் மாருதி எஸ்-ப்ரெஸ்சோ, 9-ம் இடத்தில் ஹூண்டாய் i20 மற்றும் பத்தாம் இடத்தில் மாருதி ஈகோ கார் உள்ளன.

Also see:
First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading