65 நகரங்களுக்கான 5,645 எலெக்ட்ரிக் பேருந்துகள் தயார் - நிதி ஆயோக் தலைவர்

எலெக்ட்ரிக் வாகனங்கள் அனைத்துக்கும் சுங்க வரி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

65 நகரங்களுக்கான 5,645 எலெக்ட்ரிக் பேருந்துகள் தயார் - நிதி ஆயோக் தலைவர்
எலெக்ட்ரிக் பேருந்துகள்
  • News18
  • Last Updated: August 1, 2019, 3:01 PM IST
  • Share this:
இந்தியாவின் 65 நகரங்களுக்கான 5,645 எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாடைக் குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் இனி எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அரசு ஊக்குவிக்கும் என அறிவித்தது. மேலும், அரசு வாகனங்களும் எலெக்ட்ரிக் மயமாக மாறும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் கூட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது.

அமிதாப் கண்ட் கூறுகையில், “8 மாநில போக்குவரத்துத் துறையினர் 65 நகரங்களுக்கான 5,645 எலெக்ட்ரிக் பேருந்துகளைப் பயன்படுத்த இணை அமைச்சகம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையின் சார்பில் தூய்மை நகரங்களுக்கான முன்னெடுப்பாக இது இருக்கும்” என்றார்.


கூடுதலாக, எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் அனைத்துக்கும் சுங்க வரி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விலை ₹1.5 லட்சம் வரை குறைய வாய்ப்பு..!
First published: August 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்