கச்சா எண்ணெய்யின் நிலையற்ற தன்மை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற காரணங்களால் இந்தியாவில் சமீபகாலமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த தேடலும், விழிப்புணர்வும் மக்களிடம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்கள் கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களை உமிழ்கின்றன. எனவே பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஸ்கூட்டர்கள் முதற்கொண்டு கார், பேருந்துகள் என பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இருந்து மின்சக்திக்கு மாற்றப்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு, பசுமை இல்லா வாயுக்களின் உமிழ்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மக்களும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கார்களின் விலையேற்றம் காரணமாக எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் முன்பைவிட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை இந்தோ-ஏசியன் நியூஸ் சர்வீஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் 45 முதல் 50 மில்லியன் வரையிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியச் சாலைகளில் வலம் வரக்கூடும் என அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்தியாவில் இ-சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படாதது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.
Also Read : புதுப்புது கலர்களில் மஹிந்திரா தார் கார் - குவியும் ஆர்டர்கள்..!
வெவ்வேறு வகையான வாகனங்களுக்கு சார்ஜிங் தொழில்நுட்பம் மாறுபடும் என்பதால், பொது மற்றும் தனியார் சார்ஜிங் மையங்களை அமைத்து வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவையை வழங்க உதவும் என இந்தோ-ஏசியன் நியூஸ் சர்வீஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு AC ஸ்லோ சார்ஜிங் முறையையும், விரைவான சார்ஜிங் டர்ன்அரவுண்ட் தேவைப்படும் வாகனங்களுக்கு பேட்டரி ஸ்வாப்பிங் முறையும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்திய எலெக்ட்ரிக் வாகனச் சந்தையைப் பொறுத்தவரை ஏசி (AC) எனப்படும் வேகம் குறைந்த, பொதுவான சார்ஜிங் முறை தனியார் மற்றும் பொதுப்பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. 10 கிலோ வாட் முதல் 50 கிலோ வாட் வரையுள்ள ஹெவி சார்ஜிங் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டிசி (DC) எனப்படும் வேகமான சார்ஜிங் முறையைக் கொண்ட சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியச் சாலைகளில் 50 மில்லியன் EVகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதிக ப்ளே சார்ஜிங் மையங்களுக்குள், பேட்டரி தயாரிப்பாளர்கள் போன்றவர்களுக்கான வர்த்தகமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Electric Cars, India