Home /News /automobile /

நீர் சூழ்நத பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது இந்த 5 விஷயங்களை மறக்க வேண்டாம்..!

நீர் சூழ்நத பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது இந்த 5 விஷயங்களை மறக்க வேண்டாம்..!

காட்சி படம்

காட்சி படம்

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் உங்கள் கார் திடீரென்று பழுதாகி நின்று விட்டால் உடனடியாக அதை ரீஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நாட்டின் பல பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரு கடந்த சில நாட்களாக கொட்டும் மழையால் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வழக்கத்தை விட தற்போது பெங்களூர் நகரின் பல இடங்களில் மழைநீர் அதிகமாக தேங்கி உள்ளது.  ஆண்டு இறுதி வந்து விட்டால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் தலைநகர் சென்னையின் நிலைமை கர்நாடகாவை விட மோசமாக இருக்குமோ என்ற அச்சம் இப்போதே மக்கள் மனதில் எழ துவங்கிவிட்டது. பருவமழையுடன் வெள்ள அபாயமும் எப்போதும் சேர்ந்தே வருவதால் மழைநீர் அல்லது வெள்ளம் சூழும் ஏரியாக்களில் ஒருவர் வாகனம் இயக்கும் சூழல் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்கள் இங்கே..

மிக அதிகமாக நீர் சூழ்ந்திருக்கும் ஏரியாவை தவிர்க்கவும்..

மிக அதிகமாக மழைநீர் தேங்கி நிற்கும் ஏரியா அல்லது வெள்ளம் ஓடும் ஏரியா இரண்டுமே உங்களுக்கும், வாகனத்திற்கும் ஆபத்து. எனவே நீங்கள் வாகனம் ஒட்டி செல்ல உள்ள ஏரியாவில் வெள்ளம் ஓரளவு இருக்கிறதா அல்லது மிக அதிகமா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட சில SUV-க்கள் கூட அரை அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி இருக்கும் சாலைகளில் ஓட்டினால் பழுதாகிவிட வாய்ப்பு அதிகம். எனவே வெளியே செல்லும் முன் அதிகம் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளுக்கு வாகனம் எடுத்து செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும்.



எஞ்சினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டாம்..

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் உங்கள் கார் திடீரென்று பழுதாகி நின்று விட்டால் உடனடியாக அதை ரீஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். இந்த முயற்சி எஞ்சினின் கனெக்டிங் ராடுகள் உடைய வழிவகுக்கும். கூடுதலாக இன்டேக் அல்லது எக்ஸாஸ்ட் மூலம் எஞ்சினுக்குள் தண்ணீர் நுழைந்தால், அது தீவிர சேதத்தை ஏற்படுத்தலாம். எஞ்சினுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக நீங்கள் சந்தேகித்தால் பெரும் சேதத்தைத் தவிர்க்க காரை உடனடியாக ஆஃப் செய்யவும்.

also read : இந்தியாவில் 6 ஏர்பேக்ஸ்களுடன் குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த கார்களின் பட்டியல்

பதற்றம் & பீதி வேண்டாம்..

உங்கள் கார் அல்லது வாகனம் வெள்ளத்தில் சிக்கி கொண்டால் முதலில் பதற்றமோ, பீதியோ அடைய வேண்டாம். ஒருவேளை நீங்கள் காரில் சிக்கி இருந்தால் அதன் கதவுகளை திறக்க முடியவில்லை என்றால், பதற்றம் அடையாமல் அமைதியாக சிந்தித்து இரு கால்களாலும் தள்ளி காரின் கதவுகளை திறக்க முயற்சிக்க வேண்டும். இது ஒர்கவுட் ஆகவில்லை என்றால் விண்ட்ஸ்கிரீனை உடைக்க முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் பொதுவாக விண்டோ கிளாஸை விட இது மிக கடினமாக இருக்கும். தண்ணீர் தேங்கி நிற்கும் வாகனத்திற்குள் இருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதால் வாகனத்தை விட்டு வெளியேறுவதே பாதுகாப்பானது.



இயக்கத்திலேயே வைத்திருங்கள்..

ஒருவேளை எதிர்பாராவிதமாக வெள்ளம் சூழ்ந்த ஏரியாவிற்குள் சென்று விட்டால் வாகனத்தை தொடர்ந்து இயக்குவதில் கவனம் செலுத்துங்கள். தண்ணீர் சூழ்ந்த சாலையில் வாகனம் இயங்கும் போது அதன் என்ஜினில் கூடுதல் லோடை ஏற்படுத்துகிறது. வெள்ளத்தை கண்டு தயங்கி பிரேக் போடவோ அல்லது நிறுத்தவோ வேண்டாம். நிலையான மற்றும் சீரான வேகத்தில் வாகனத்தை குறைந்த கியரில் இயக்கியபடியே இருங்கள். வெள்ளத்தை கடக்க வேண்டும் என்று திடீரென்று வாகனத்தின் வேகத்தை அதிகரிக்காதீர்கள்.

தண்ணீரை வெளியேற்ற பிரேக்குகளை பம்ப் செய்யவும்..

வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் ஏரியாவில் இருந்து நீங்கள் வாகனத்தை விட்டு வெளியேறியவுடன் முதலில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற பிரேக்குகளை பம்ப் செய்யவும். ஏனென்றால் பிரேக்குகளில் தண்ணீர் இருந்தால் அவை சரியாக வேலை செய்யாது. உங்கள் வாகனத்தின் பிரேக் யூனிட் எந்த சேதமும் அடையாமல் இருக்க இதை அவசியம் பின்பற்ற வேண்டும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Flood

அடுத்த செய்தி