உங்களுக்கு ஏற்ற விலையில் 5 சூப்பரான 110cc பைக்குகள் - என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா?

உங்களுக்கு ஏற்ற விலையில் 5 சூப்பரான 110cc பைக்குகள் - என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா?

உங்களுக்கு ஏற்ற விலையில் 5 சூப்பரான 110cc பைக்குகள்

இந்தியாவில் 100 மற்றும் 110 cc இருசக்கர வாகனங்கள் அதிகளவு விற்பனையாகின்றன. மாத ஊதியம் பெறுபவர்கள் மற்றும் நடுத்தர மக்களின் முன்னணி தேர்வாக இந்த பைக்குகள் இருக்கின்றன. காரணம், அவர்களின் வருமானத்துக்கு ஏற்ற அளவிலான விலையில் இந்த பைக்குகள் கிடைக்கின்றன.

  • Share this:
இந்தியாவில் 100 மற்றும் 110 cc இருசக்கர வாகனங்கள் அதிகளவு விற்பனையாகின்றன. மாத ஊதியம் பெறுபவர்கள் மற்றும் நடுத்தர மக்களின் முன்னணி தேர்வாக இந்த பைக்குகள் இருக்கின்றன. காரணம், அவர்களின் வருமானத்துக்கு ஏற்ற அளவிலான விலையில் இந்த பைக்குகள் கிடைக்கின்றன. நாளுக்கு நாள் புது புது பைக்குகள் அறிமுகப்படுத்தப்படுவதால், எந்தெந்த பைக்குகளில் பாதுகாப்பு உள்ளிட்ட என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்வது வாடிக்கையாளர்களுக்கு கடினமாக இருக்கிறது. அதற்கு விடையளிக்கும் வகையில், டிஸ்க் பிரேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட 5 சூப்பரான பைக்குகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

பஜாஜ் பிளாட்டினா 110 H கியர் (Bajaj Platina 110 H-Gear)

2019 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் விற்பனைக்கு வந்த பஜாஜ் பிளாட்டினா 110 H கியர் இருசக்கர வாகனம், 8 பிஎச்பி பவர் மற்றும் 10 என்.எம் டார்க் திறனை அதிகபட்சமாக வழங்கும். பிளாட்டினா 100 தோற்றத்தைப்போல் இருந்தாலும், இந்த பைக்கில் மேம்படுத்தப்பட்ட நவீனமான கட்டமைப்புகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. புதிய ஹெச் கியர் செயல்பாட்டு அம்சத்தை விளக்கும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இது பைக்கின் கியர் இருக்கும் நிலை மற்றும் ஓட்டுநர் கியரின் நிலையை மாற்றலாமா வேண்டாமா என்கிற தகவல்களை வழங்கும். பாதுகாப்பு வசதிக்காக பிரன்ட் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு 64,301 ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டி.வி.எஸ் ரேடியான் (TVS Radeon)

ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்ட டி.வி.எஸ் ரேடியான், கம்யூட்டர் வகை மோட்டார் சைக்கிள் ஆகும். இது ஜெனரிக் மோட்டார் சைக்கிள் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளது. பைக்கின் முகப்பு விளக்குக்கு குரோ பீசெல், ஓட்டுநரின் கால் தொடைகள் பாதுக்காக்க ’தை பேடு’ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. சைடு ஸ்டேண்ட் குறித்து எச்சரிக்கும் ஒலிப்பான் இடம்பெற்றுள்ளது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூடிய இந்த எஞ்சின், 8 பிஎச்பி பவர் மற்றும் 9 என்.எம் டார்க் திறனை அதிகபட்சமாக வெளிப்படுத்தும். ரூ.68,037 எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் (Hero Splendor i-Smart)

இந்தியாவின் முதல் BS-6 பைக் என்ற பெருமை Hero Splendor i-Smart பைக்கை சேரும். டிசைன் அளவில் பைக்கில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. டூயல் டோன் கலர் & கிராஃபிக்ஸ், வீல் ஸ்ட்ரிப் ஆகியவை ஏற்கெனவே இருந்ததுதான் என்றாலும், கலர் காம்பினேஷன் மற்றும் லோகோவின் பொசிஷன் ஆகியவற்றில் மாற்றம் தெரிகிறது. இண்டிகேட்டர்கள் - எக்ஸாஸ்ட் பைப் - சில பாடி பேனல்கள் ஆகியவை புதிதாகக் காட்சியளிப்பதுடன், முன்பக்கத்தில் 240மி.மீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஹெட்லைட் முன்பைவிட அதிக வெளிச்சத்தை உமிழும் என ஹீரோ தெரிவித்துள்ளது. பெட்ரோல் டேங்க்கின் அளவு, 8.5 லிட்டரில் இருந்து 9.5 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் ஷோரூம் விலை 68,850 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ பேசன் ப்ரோ (Hero Passion Pro)

டிரம் பிரேக் மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் என இரு வேரியண்ட்களில் Hero Passion Pro கிடைக்கிறது. இந்த மாடலில் மேம்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டெயில் பகுதி முந்தைய மாடல்களை விட மெல்லியதாக காட்சியளிக்கிறது. இதன் எரிபொருள் டேங்க் பெரியதாகவும், புதிய வடிவமைப்பு கொண்ட கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன விற்பனை சந்தையில் இரண்டாவது மிகவும் விலை உயர்ந்த பைக்காக இருக்கிறது. ஹீரோ பேசன் ப்ரோவுக்கு 69,600 ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா லிவோ (Honda Livo)

110சிசி சந்தையில் பிரீமியம் அம்சங்களை லிவோ மாடலின் ஸ்டைலிங் அம்சங்கள் பெற்றுள்ளன. புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், முந்தைய பிஎஸ்4 மாடலில் இருந்து வேறுபடுத்துகின்றது. குறிப்பாக பைக்கின் தோற்ற அமைப்பில் பெரும்பாலான ஸ்டைலிங் ட்விக்ஸ் மேம்பாடுகளை கொண்டதாக அமைந்துள்ளது. பெட்ரோல் டேங்கின் கூர்மையான ஷோர்ட்ஸ், 17 மி.மீ வரை நீட்டிக்கப்பட்ட இருக்கை ஆகியவை புதிய தோற்றத்தைக் கொடுக்கின்றன. சர்வீஸ் இன்டிகேட்டர், புதுப்பிக்கப்பட்ட சுவிட்சு கியர் மற்றும் மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது. 8.67 hp பவரை 7500 ஆர்பிஎம்-லும், 9.30 Nm டார்க் 7500 ஆர்பிஎம்-ல் வழங்குகின்றது. டிரம் அல்லது டிஸ்க் பிரேக் என இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். காஸ்டிலியான விலையைக் கொண்ட இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூமின் விலை 75,748 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: