Home /News /automobile /

52 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிய புதிய வந்தே பாரத் ரயில்

52 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிய புதிய வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்.

வந்தே பாரத் ரயில்.

புதிதாக பரிசோதனை செய்யப்பட்ட 3-ஆவது வந்தே பாரத் ரயிலானது 52 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
புதிதாகப் பரிசோதனை செய்யப்பட்ட 3-வது வந்தே பாரத் ரயிலானது 52 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டியது. இதற்கு முந்தைய வந்தே பாரத் ரயிலானது 100 கி.மீ. வேகத்தை எட்டுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டிலும் 2.6 நொடிகள் குறைவான நேரத்தில் இந்த ரயில் வேகத்தை எட்டியது.

வெகுவிரைவில் இந்த ரயிலானது போக்குவரத்து சேவையைத் தொடங்க உள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்றாவது வந்தே பாரத் ரயிலின் அதிகபட்ச வேகம் என்பது 180 கி.மீ என்றும், முந்தைய ரயிலின் அதிகபட்ச வேகத்தை ஒப்பிடுகையில் இது 20 கி.மீ. கூடுதல் வேகம் கொண்டது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்

75 ரயில் சேவைகளைத் தொடங்க இலக்கு:

அதிவேகம் கொண்ட வந்தே பாரத் ரயில்களைக் கொண்டு, அடுத்த சுதந்திர தினத்திற்குள் 75 ரயில் சேவைகளைத் தொடங்குவதற்கு இந்திய ரயில்வே துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாதத்திலேயே இந்த தடத்தில் போக்குவரத்து சேவை முறைப்படி தொடங்க இருக்கிறது.

புதிய மற்றும் மூன்றாவது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 492 கி.மீ. தொலைவு கொண்ட பயணத்தை இந்த ரயில் 5 மணி நேரம் 10 நிமிடங்களில் கடந்து சென்றது. இதே தொலைவைச் சென்றடைவதற்கு சதாப்தி அதிவேக ரயிலானது 6 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

அஹமதாபாத் நகரில் காலை 7.06 மணிக்குப் புறப்பட்ட வந்தே பாரத் ரயிலானது, 2 மணி நேரம் 32 நிமிடங்களில் சூரத் நகருக்குச் சென்றடைந்தது. சதாப்தி ரயிலில் இதே பயணத்திற்கு 3 மணி நேரம் ஆகிறது.

Also Read : சீட் பெல்ட் அணியாவிட்டால் கார்களில் உள்ள ஏர்பேக் மூலமாக எந்த பலனும் கிடைக்காது - காரணம் ஏன்?

வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்:

தற்போதைய புதிய வந்தே பாரத் ரயிலானது 130 நொடிகளில் 160 கி.மீ. வேகத்தை எட்டி விடுகிறது. இதற்கு முந்தைய வந்தே பாரத் ரயில்கள் இத வேகத்தை எட்டுவதற்கு 146 நொடிகள் தேவைப்பட்டது. புதிய ரயிலில் பயணிகள் வசதிக்காக மேம்பட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. ரயிலின் எடை என்பது 430 டன் அளவிலிருந்து 290 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயிலில் பயணிகளின் வசதிக்காக வைஃபை இணைய வசதி, 32 இன்ச் கொண்ட எல்சிடி டிவி வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.ரயிலில் பயோ டாய்லட், ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் கட்டமைப்பு மற்றும் சிசிடிவி கேமரா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

 
Published by:Janvi
First published:

Tags: Bullet Train, Indian Railways, Vande Bharat

அடுத்த செய்தி