Home /News /automobile /

இ.ஸ்கூட்டர்களின் பாதுகாப்பை நம்ப மறுக்கும் இந்தியர்கள்... சர்வேயில் வெளியான தகவல்

இ.ஸ்கூட்டர்களின் பாதுகாப்பை நம்ப மறுக்கும் இந்தியர்கள்... சர்வேயில் வெளியான தகவல்

காட்சி படம்

காட்சி படம்

Electric Scooter | எரிபொருள் விலையேற்றத்தின் விளைவாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சில மாதங்களாக சூடுபிடித்து வந்தது. எனினும் நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி தீ பிடித்து எரிந்த சம்பவங்கள் தற்போது மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    எரிபொருள் விலையேற்றத்தின் விளைவாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சில மாதங்களாக சூடுபிடித்து வந்தது. எனினும் நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி தீ பிடித்து எரிந்த சம்பவங்கள் தற்போது மக்கள் மத்தியில் அச்சம் மற்றும் தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள், சிலருக்கு காயங்கள் மற்றும் வாகன இழப்பு உள்ளிட்டவை இ-ஸ்கூட்டர் வாங்க நினைத்த நுகர்வோர் உணர்வுகளை மோசமாக பாதித்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் சரிவுக்கு வழிவகுத்தது. இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. இது குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கான தரத்தை மையப்படுத்திய வழிகாட்டுதல்களை உருவாக்க CFEES மற்றும் IISc அதிகாரிகள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

    எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து மக்களிடையே பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கவலைகள் வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.இதன் எதிரொலியாக அடுத்த 6 மாதங்களில் சுமார் 1% நுகர்வோர் மட்டுமே இ-ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டுள்ளதை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் குடிமக்களுக்கான கம்யூனிட்டி சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மான Local Circles கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

    Read More : இளைஞர்களை கவரும் ராயல் என்பீல்ட்! வழக்கத்துக்கு மாறாக சிறிய பைக்குகள் அறிமுகம்.. ஹண்டர் 350!


    இதில் பங்கேற்று பதிலளித்த 11,000-க்கும் மேற்பட்டவர்களில் 32% பேர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து நம்பிக்கை இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.இதே ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 17% ஆக இருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது. அதே போல சர்வேயில் பங்கேற்றவர்களில் சுமார் 1 சதவீதம் பேர் மட்டுமே அடுத்த 6 மாதங்களுக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.



    சுமார் 7% பேர் இ-ஸ்கூட்டர் வாங்க விருப்பம் இருந்தாலும் இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் அளவிற்கு நிதி இல்லை என்று கூறியிருக்கிறார்கள். சர்வேயில் பங்கேற்றவர்களோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ ஏன் “அடுத்த 6 மாதங்களில் இ-ஸ்கூட்டரை வாங்க திட்டமிடவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்ததில் சுமார் 5% பேர் வாங்க ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் நாங்கள் வசிக்கும் இடத்தில் இ-ஸ்கூட்டர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் பற்றி தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறி இருக்கிறார்கள்.

    31% வீடுகள் மின் ஸ்கூட்டர்களை ஓட்டாததால், இ-ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகமாக இல்லை மற்றும் 9% பேர் வீட்டில் போதுமான வாகனங்கள் இருப்பதாகவும், அதனால் புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கும் திட்டம் எதுவும் இல்லை என்ற உண்மையையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. பேட்டரி தீ விபத்துகளுக்கு மத்தியில் ஏத்தர் எனர்ஜி மற்றும் ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் விற்பனையில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளன. நாட்டில் தற்போது 1,640க்கும் மேற்பட்ட பொது EV சார்ஜிங் நிலையங்கள் உள்ளன, அவற்றில் 940 க்கும் மேற்பட்டவை 9 மெகாசிட்டிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Automobile, Electric bike

    அடுத்த செய்தி