முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / புதிய 4 மாடல் பைக்குகள்… அசத்தலாக அறிமுகம் செய்த யமஹா!

புதிய 4 மாடல் பைக்குகள்… அசத்தலாக அறிமுகம் செய்த யமஹா!

யமஹா பைக் வாங்க போறீங்களா..!

யமஹா பைக் வாங்க போறீங்களா..!

யமஹா நிறுவனம் இன்று தனது பைக்குகளின் அப்டேட்டட் வெர்னில்ல புதிய நான்கு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல் பைக்குகள் எவை?அதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை இப்போது பார்க்கலாம்

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புழக்கத்தில் இருக்கும் எஃப் இசட்-எஸ் 4.0, எஃப் இசட்-எக்ஸ், எம்டி 15 2.0, ஆர்15-எம் ஆகிய பைக்குகள்தான் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது இருக்கும் பைக்குகளை தொழில்நுட்ப ரீதியாக அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம். இந்தியாவில் ஏப்.1-ம் தேதி அமலுக்கு வரவுள்ள ஒபிடி-2 விதிமுறைக்கு இணங்க இந்த பைக்குகளின் என்ஜினில் ஆன் போர்டு டையனஸ்டிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ரியல் டைமில் எமிஷனல் ரிப்போர்ட்களை வழங்கும்.

இது போக இந்நிறுவனத்தின் புதிய டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டமும் அனைத்து பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் பைக் வேகமாகச் செல்லும்போது வளைவுகளில் பைக்கை ஸ்கிட் ஆக்காமல் டிரைவருக்கு கண்ட்ரோலை வழங்குகிறது. எஃப்இசட்-எஸ் 4.0 புதிய எஃப்இசட் -எஸ்4.0 பைக்கை பொருத்தவரை பழைய வெர்ஷனிலிருந்து ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் டிசைனே பழைய பைக்கிலிருந்து மஸ்குலின் டிசைனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடலில் புதிதாக டிசைன் செய்யப்பட்ட பொசிஷன் லேம்ப் உடன் கூடிய பிரைட்டான ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்லீக்கான எல்இடி இன்டிகேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கமும் உயர்த்தப்பட்ட எல்இடி லைட், மற்றும் எல்இடி ஃபிளாஷர்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

Read More : இந்தியாவில் அறிமுகமான புதிய Dzire Tour S - மைலேஜ் கேட்டா மிரண்டு போவீங்க

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இதில் வழங்கப்பட்டுள்ளது. 149 சிசி எஃப்ஐ இன்ஜின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. அசத்தலான லுக்கிற்கு ஏற்றார் போல வீல்கள் பைக்கின் கலருக்கு ஏற்ற கலர்டு வீல்களாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த பைக் மெட்டாலிக் க்ரே, மெஜெஸ்டிக் ரெட், மெட்டாலிக் பிளாக், ஆகிய 3 நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. டில்லியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 400 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (எக்ஸ ஷோ ரூம் விலை). யமஹா நிறுவனம் குறுகிய தூரப் பயணத்திற்காக இந்த எஃப்இசட்-எக்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் வீல்கள் கோல்டன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் யமஹாவின் புதிய டிராக்ஷன் கண்ட்ரோல் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் டிசைனை பொருத்தவரை நியோ ரெட்ரோ டிசைன் பொருத்தப்பட்டுள்ளது. ஃபை-பங்க்ஷனல் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல் ஆகியன பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் புதிய எல்இடி ஃபிளாஷர்கள், ஸ்லீக் எல்இடி டெயில் லைட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பக்கவாட்டில் மெட்டல் சைடு கவர் வழங்கப்பட்டுள்ளது. பைக்கின் அடிப்பகுதியில் மெட்டல் அண்டர் கவர் வழங்கப்பட்டுள்ளது. இது வேகத்தடையில் செல்லும் போது பைக்கின் இன்ஜின் ரோட்டில் உரசாமல் தடுக்கும். செல்போனை சார்ஜ் போட வசதியுடன் ப்ளூடூத் ஆப்சனும் உள்ளது.

இதன் மூலம் பைக்கின் எல்சிடி ஸ்கிரீனில் கால் எஸ்எம்எஸ், இமெயில் அலர்ட், ஆப் கனெக்டிவிட்ட ஸ்டேட்டஸ், போன் பேட்டரி லெவல் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள முடியும். இது போக மொபைல் ஆப்பில் ஃப்யூயல் கன்சம்ஷன் செக், பராமரிப்பு பரிந்துரை ரேங்கிங், கடைசியாக பார்க் செய்யப்பட்ட லோகேஷன், ரிப்பேர் நோட்டிஃபிகேஷன், ரெவ் டேஷ்போர்டு ஆகிய தகவல்களும் கிடைக்கும். இது போக பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்சன் மற்றும் பிளாக் பேட்டர்ன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

டார்க் மேட் ப்ளூ, மேட் காப்பர், மேட் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த பைக்கை வாங்கலாம். இந்த பைக்கின் விலை ரூ. 1,35,900 (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை) எம்டி-15 வெர்ஷன் 2 எம்டி 15 பைக் ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கிறது. யமஹா நிறுவனம் அந்த பைக்கை அப்டேட் செய்து வெர்ஷன் 2வாக வெளியிட்டுள்ளது. இந்த பைக்கில் பழைய பைக்கிலிருந்து ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 155 சிசி இன்ஜின், அப்சைடு டவுன் ஃபோர்க், எல்இடி ஃபிளாஷர்கள் உள்ளன. கிராப் பார் உடன் கூடிய யூனிலெவல் சீட் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

இது போக டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், அட்வான்ஸ்டு மற்றும் முழுமையான டிஜிட்டல் எல்சிடி மீட்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், ஆகிய வசதிகள் உள்ளன. மேலும் ஆப் மூலம் கனெக்ட் செய்யும் வசதியும் இந்த பைக்கில் இருக்கிறது. அதன் மூலம் செல்போன் ஆப்பில் ரேங்கிங், கடைசியாக பார்க் செய்யப்பட்ட லோகேஷன், ரிப்பேர் நோட்டிஃபிகேஷன், ரெவ் டேஷ்போர்டு, ஆகிய தகவல்கள் கிடைக்கும். இந்த பைக் மொத்தம் 5 விதமான கலர்களில் விற்பனைக்கு வருகிறது. சியான் ஸ்ட்ரோம், மெட்டாலிக் பிளாக், டிஎல்எக், ரோஸிங் ப்ளூ, ஐஸ்-ப்ளோ வெர்மில்லியன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

பைக்கின் விலை ரூ.1,68,400  (டில்லி எக்ஸ் ஷோரூம் விலை) ஆர்15-எம் ஏற்கனவே மார்க்கெட்டில் கலக்கி வரும் யமஹாவின் ஆர்15 பைக்கில் புதிய அப்டேட்களை புகுத்தி ஆர்15எம் என அறிமுகப்படுத்தியுள்ளது யமாஹா நிறுவனம். இந்த பைக் பழைய பைக்கை விட அதிக ஏரோடைமனிக்ஸ் ஸ்டைலில் இருக்கும். இதன் எடையைக் குறைக்க அலுமினியம் ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் முக்கியமாக ஆர்1 இன்ஸ்பயர்டு டே மற்றும் நைட் மோட்கள் கொண்ட டிஎஃப்டி மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கிலும் ப்ளூடூத் கனெக்ட் வசதி உள்ளது. பழைய பைக்கை விடக் குறைவான எடையில் இந்த புதிய மாடல்வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய எல்இடி் ஃபிளாஷர்கள், அப்சைடு டவுண் ஃபோர்க்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. ரேஸிங் ப்ளூ, டார்க் நைட், மெட்டாலிக் ரெட் ஆகிய நிறங்களில் ரூ.1,80,900 முதல் ரூ.1,85,900என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது புதிய ஆர்15எம்.

First published:

Tags: Automobile, Bike, Yamaha bike