பைக் பிரியர்கள் பலருக்கும் பிடித்தமான வண்டிகளில் ட்ரைம்ப் மாடல் வண்டியும் மிக பிரபலமானது. இந்த பைக்கின் சர்வதேச சந்தைகளுக்கான மாடலை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைம்ப் மாடல் பைக்கின் சமீபத்திய வெர்ஷனான ட்ரைம்ப் ஸ்பீட் டிரிபிள் 1200 ஆர்எஸ் உள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் புதிய நிறத்துடன் வரவுள்ளது. மேலும், இதனுடன் இந்த பைக்கை மூன்று வண்ணங்களிலும் பெறலாம். அதன்படி, மேட் பாஜா ஆரஞ்சு, மேட் சில்வர் ஐஸ் மற்றும் சபையர் பிளாக் ஆகிய நிறங்களில் பெறலாம்.
இந்த மாடலில் தற்போது மேட் பாஜா ஆரஞ்சு நிறமானது புது வரவாக சேர்க்கப்பட்டுள்ளது. இவை தனித்துவமான சில்வர் ஐஸ் மற்றும் கிராஃபைட் ‘ஆர்எஸ்’ கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறத்தை ட்ரைம்ப் ஸ்பீட் ட்ரிபிள் 1200 RS பைக்கின் பெட்ரோல் டேங்க், சைடு பேனல்கள், ஹெட்லைட் ஃபினிஷர், பின்புற பாடிவொர்க், சீட் கவுல் மற்றும் பெல்லி பான் ஆகிய இடங்களில் காணலாம். அதே போன்று வண்டியின் முன்புறத்தில், மட்கார்டு கார்பன் ஃபைபர் ஃபினிஷனிங் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த புதிய ட்ரைம்ப் 2023 பைக் ஸ்பீட் ட்ரிபிள் RS பைக் புதிய கலர் ஆப்ஷனில் அறிமுகமாகி உள்ளதால், இது விரைவில் இந்தியாவிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக்கின் என்ஜின், பிற அம்சங்கள், டெக்னாலஜி போன்ற எந்த விஷயத்திலும் மாறுபாடு எதுவும் செய்யாமல் அப்படியே வருகிறது. இதில் புதிதாக வரவுள்ள மேட் பாஜா ஆரஞ்சு நிறமானது இந்த பைக்கிற்கு கூடுதல் அழகையும், சிறப்பான தோற்றத்தையும் தருகிறது. இந்த பைக்கில் உள்ள கார்பன் பைபர் கொண்ட முன்பக்க மட் கார்ட் இதன் ஸ்போர்ட்ஸ் லுக் தோற்றத்தை மேலும் சிறப்பாக்கி உள்ளது.

triumph speed triple 1200 rs
இந்த வண்டியின் புதிய நிறத்தை மட்டுமே அப்டேட்டாக தந்துள்ளனர். மற்றபடி, அனைத்து அம்சங்களும் 2022 வெர்ஷனில் உள்ளதை போன்றே இருக்கிறது. இந்த ட்ரைம்ப் ஸ்பீட் டிரிபிள் 1200 ஆர்.எஸ் வண்டியில், எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய இரட்டை-பாட் ஹெட்லைட், பார்-எண்ட்-மவுண்டட் ரியர்-வியூ மிரர்கள் மற்றும் ஒற்றை பக்க ஸ்விங்கார்ம் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இதன் இந்த சிறப்பம்சங்களுடம் இந்த பைக் பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தை பெற்றுள்ளது.
Also Read : மே 2022 Maruti Suzuki வழங்கும் அதிரடி ஆஃபர்கள்..! இப்போது ரூ. 38,000 வரை சேமிக்கலாம்
இந்த பைக்கில் 1160 சிசி ட்ரிபிள் சிலிண்டர் என்ஜின் உள்ளது. அத்துடன் 180bhp பவர் மற்றும் 125NM டார்க் வசதியும் உள்ளது. இதில் எடை குறைவான சேசிஸ், பிரெம்போ பிரேக், சிறந்த சஸ்பென்ஸன் ஆகிய வசதியும் உள்ளன. இந்த பைக்கில் 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷ, குயிக் ஷிப்ட்டர் மற்றும் ஸ்லீப்பர் அஸ்சிஸ்ட் கிளட்ச் போன்ற சிறப்பு அம்சங்களும் உள்ளன. பிரிட்டிஷ் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமானது, இந்திய சந்தையில் சபையர் பிளாக் மற்றும் மேட் சில்வர் ஐஸ் ஆகிய இரு நிறங்களில் மட்டுமே வழங்கி வருகிறது. வருகின்ற 2023 மாடலில் புதிதாக வரவுள்ள நிறத்தை பற்றி மட்டுமே அறிவிப்பு வந்துள்ளது. மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.