ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் வெளியிடப்பட்ட Jeep Grand Cherokee 4xe காரின் ஸ்பெஷல் எடிஷன்!

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் வெளியிடப்பட்ட Jeep Grand Cherokee 4xe காரின் ஸ்பெஷல் எடிஷன்!

ஜீப், 2023 4xe

ஜீப், 2023 4xe

இந்த ஸ்பெஷல் எடிஷன் காரில் பின்புற இருக்கை கண்காணிப்பு கேமரா அமைப்பு மற்றும் பில்ட்-இன் அமேசான் ஃபயர் டிவியுடன் 10.25 இன்ச் ஃப்ரன்ட் பேசேஞ்சர் ஸ்கிரீன் உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  Grand Cherokee-யின் 30-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், வாகன தயாரிப்பு நிறுவனமான ஜீப், 2023 Jeep Grand Cherokee 4xe-யின் 30-வது ஆண்டு பதிப்பை (30th Anniversary edition) வெளியிட்டுள்ளது. சமீபத்திய 2022 டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் இந்த எஸ்யூவி-யின் சி ஸ்பெஷல் எடிஷன் காரை வெளிப்படுத்தியது ஜீப் நிறுவனம்.

  2023 Jeep Grand Cherokee 4xe (30th Anniversary Edition) அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும். இந்த ஸ்பெஷல் எடிஷன் 4xe பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷனிற்கு தனித்துவமானது மேலும் இது ஜீப்பின் மிகவும் பிரபலமான எஸ்யூவி-யாக இருக்கும் Grand Cherokee அறிமுகமாகி மூன்று தசாப்தங்களாகி விட்டதை குறிக்கிறது.

  கடந்த 1992-ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஏழு மில்லியனுக்கும் அதிகமான Grand Cherokee இதுவரை விற்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள எஸ்யூவி-யாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் Grand Cherokee-யின் 30th Anniversary edition காரானது மாற்றியமைக்கப்பட்ட முன்பகுதியுடன் கூடிய தனித்துவமான கருப்பு எக்ஸ்டீரியருடன் வருகிறது.

  மேலும் இந்த ஸ்பெஷல் எடிஷன்சிக்னேச்சர் ப்ளூ டோ ஹூக்ஸ் மற்றும் டூயல் பேனல் சன்ரூஃப் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும் இந்த எடிஷனில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் ரீவொர்க் செய்யப்பட்ட ஃபேசியா, டூயல் எக்ஸாஸ்ட் டிப்ஸ், 20-இன்ச் பிளாக்-அவுட் வீல்கள் மற்றும் பல ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ்கள் கொண்ட பிளாக்-அவுட் வெளிப்புற தீம் உள்ளிட்டவையும் அடங்கும்.

  உட்புறத்தில் பிளாக் காப்ரி லெதர் அப்ஹோல்ஸ்டரி, காற்றோட்டமான சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், 9 ஸ்பீக்கர் ஆல்பைன் ஆடியோ சிஸ்டம் மற்றும் நேவிகேஷன் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் Uconnect 5-ஐ இயக்கும் 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 3டி நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

  இந்த ஸ்பெஷல் எடிஷன் காரில் பின்புற இருக்கை கண்காணிப்பு கேமரா அமைப்பு மற்றும் பில்ட்-இன் அமேசான் ஃபயர் டிவியுடன் 10.25 இன்ச் ஃப்ரன்ட் பேசேஞ்சர் ஸ்கிரீன் உள்ளது. மேலும் இந்த எடிஷன் ஐந்து மோட்களை கொண்டுள்ளது. இதில் ஆட்டோ, ஸ்போர்ட், ராக், ஸ்னோ மற்றும் மட்/சேண்ட் உள்ளிட்டவை அடங்கும். பாதுகாப்பிற்காக இந்த SUV-ஆனது 110-க்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், 360-டிகிரி சரவுண்ட் வியூ, டிரவுஸி டிரைவர் டிடெக்ஷன் மற்றும் நைட் விஷன் கேமராக்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

  இந்த எடிஷன் ஃப்ரன்ட் /ரியர் பார்க் அசிஸ்ட், இன்டர்செக்ஷன் கோலிஷன் அசிஸ்ட், பாஸிவ் என்ட்ரி, ரெயின் சென்சிங் விண்ட்ஷீல்ட் வைப்பர்ஸ், டிஜிட்டல் ரியர்வியூ மிரர் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்களை ஸ்டாண்டர்டாக பெறுகிறது.

  Read More: வானில் பறக்க நீங்க தயாரா..! உலகின் முதல் பறக்கும் பைக் அமெரிக்காவில் அறிமுகம்

  இந்த ஸ்பெஷல் எடிஷன் SUV-ன் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் 375 ஹார்ஸ்பவர் மற்றும் 470 பவுண்ட்-ஃபீட் டார்க்-ஐ உற்பத்தி செய்கிறது மற்றும் 6000 பவுண்டுகள் வரை டோ-அப் திறனை வழங்குகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் 2023 கிராண்ட் செரோகி 4xe 30-வது ஆண்டு பதிப்பிற்கான ஆர்டர்களை ஜீப் நிறுவனம் பெற தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Jeep, Motor, Suv car