Home /News /automobile /

புத்தம் புதிய வண்ணங்களில் 2022 யமஹா MT-25 அறிமுகம்!

புத்தம் புதிய வண்ணங்களில் 2022 யமஹா MT-25 அறிமுகம்!

யமஹா MT-25

யமஹா MT-25

யமஹா MT-25 பைக்கின் வெளிப்புறத் தோற்றமும் டிசைனும், MT-09 டிசைனை அடிப்படையாக வைத்து மேம்படுத்தப்பட்டது.

யமஹா மோட்டார் இந்தோனேஷியா தனது புத்தம் புதிய, அப்டேட் செய்யப்பட்ட 2022 MT-25 மோட்டார்சைக்கிள் அறிமுகம் பற்றி அறிவித்துள்ளது. ஸ்ட்ரீட்ஃபைட்டர் என்று கூறப்படும் இந்த நேக்கட் பைக் தற்போது புதிதாக இரண்டு வண்ணங்களிலும், புதிய பெயின்ட் ஸ்கீம்களிலும் அறிமுகமாகிறது. வண்ணங்களும், பைக்கின் தோற்றத்தில் மாறுதலும் தவிர்த்து வேறு என்ன மாற்றங்கள் இந்த புதிய பைக்கில் இருக்கிறது என்று பார்க்கலாம்.

தற்போது பண்டிகைக் காலத்தை முன்னிட்டு யமஹா நிறுவனம் பல்வேறு வாகனங்களுக்கு எக்கச்சக்கமான சலுகைகளை, தள்ளுபடியை வாரி வழங்கி வருகிறது. யமஹாவின் ரசிகர்களுக்கு அதுவே மிகப்பெரிய தீபாவளிப் பரிசாக காணப்படுகையில், தற்போது யமஹாவின் மற்றொரு அப்டேட் செய்யப்பட்ட வானகம் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பைக் ஆர்வலர்களிடம் பரிச்சயமான மாடல் தான் ஆனால் புதிய வண்ணக் கலவைகளின் மூலம் புதிய தோற்றத்துடன் பொலிவாக இந்தியாவில் விரைவில் வர இருக்கிறது.

யமஹா MT-25 பைக் இப்போது இரண்டு வண்ணங்களில், பெயின்ட் ஸ்கீம்களில் வருகிறது. புதிதாக அறிமுகமாகியுள்ள நிறங்களில், யமஹாவின் சிக்னேச்சர் மெட்டாலிக் நீல நிறத்துடன், வெளிர் நீலமும் (light blue) சேர்க்கப்பட்டுள்ளது. லைட் ப்ளூ நிறம் பைக் டாங்க்கின் பேனல்களிலும், டெயில் பகுதியிலும் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இதே பெயின்ட் ஸ்கீமில், பைக்கின் உடல் நிறத்தில் வீல்களும் அடங்கும்.

மெட்டாலிக் டார்க் கிரே பெயின்ட் மற்றும் ஆரஞ்சு மற்றும் சியான் ஹைலைட்டுகளுன் வடிவமைக்கப்பட்டுள்ள மற்றொரு பெயின்ட் ஸ்கீம், நீல நிற மாடலை விட தோற்றத்தில் மேம்பட்டு இருக்கிறது. இந்த மாடலில், பைக்கின் அடிப்படை நிறம் கிரே. இந்த நிறங்கள் தவிர்த்து, பைக்கின் ஏனைய அம்சங்கள் மற்றும் பாகங்கள் எதுவும் மாற்றப்படவில்லை.

யமஹா MT-25 பைக்கின் வெளிப்புறத் தோற்றமும் டிசைனும், MT-09 டிசைனை அடிப்படையாக வைத்து மேம்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இதே டிசைனை நீங்கள் இந்தியாவில் விற்பனையாகி வரும் யமஹாவில் MT-15 விலும் பார்த்திருக்கக் கூடும். இந்த பைக்குன் வெளிப்புற தோற்றத்தில், பார்த்தவுடனே வியக்கும் அளவுக்கு ஹைலைட்டாக சில அம்சங்கள் உள்ளன. ரோபோட் வடிவ LED முகப்பு விளக்குகள், சிங்கிள் ப்ரொஜக்டர், இரண்டு பக்கங்களிலும் ஏர் ஸ்கூப்புகள் ஆகிய அம்சங்கள் பைக்கிற்கு நல்ல உறுதியான மஸ்குலார் தோற்றத்தை வழங்கியுள்ளது.

Also read... இளைஞர்களே தட்டி தூக்கலாம்... இரு வெர்சன்களில் வெளியான பஜாஜ் பல்சர் பைக்குகள்!

பைக் டிசைன் மாறாமல் இருப்பது போலவே, பைக்கின் இதயமான என்ஜினிலும் மாற்றமில்லை. YZF-R25 மோட்டார்சைக்கிளில் மிகவும் பிரபலமான பேரலல்-டிவின் 250 சிசி என்ஜின் தான்யமஹா MT-25 பைக்கிலும் இருக்கிறது. இதன் டிரான்ஸ்மிஷனில் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உள்ளது.

இந்தியாவில் இந்த புதிய Yamaha MT-25 எப்போது வேண்டுமானாலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. யமஹா ஏற்கனவே FZ-25 நேக்கட் பைக்கை, பஜாஜ் பல்சர் 250, சுஸுகி கிக்சர் 250 மற்றும் கேடிஎம் டியூக் 200 ஆகிய பைக்குகளுக்கு நாடு முழுவதும் விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Yamaha, Yamaha bike

அடுத்த செய்தி