ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

2022-ஆம் ஆண்டிற்கான FZ25, FZS25 பைக்குகளை இந்தியாவில் வெளியிட்ட யமஹா..! என்ன மாற்றம்.?

2022-ஆம் ஆண்டிற்கான FZ25, FZS25 பைக்குகளை இந்தியாவில் வெளியிட்ட யமஹா..! என்ன மாற்றம்.?

யமஹா

யமஹா

மோட்டார் சைக்கிளுக்கான புதிய DLX டிரிம் அறிமுகத்தை அறிவித்திருந்த நிலையில், தற்போது யமஹா நிறுவனம் FZS25 மற்றும் FZ25 மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

யமஹா மோட்டார்ஸின் தயாரிப்பு வரிசையானது வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தக்க வைக்கும் வகையில் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்கள் சமீபத்தில் FZ S FI மோட்டார் சைக்கிளுக்கான புதிய DLX டிரிம் அறிமுகத்தை அறிவித்திருந்த நிலையில், தற்போது யமஹா நிறுவனம் FZS25 மற்றும் FZ25 மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.

சென்ற ஆண்டில் பிஸியாக இருந்த ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா, இப்போது 2022-ஆம் ஆண்டிற்கான அதன் நேக்ட் குவாட்டர் லிட்டர் பைக்குகளான FZS-25 மற்றும் FZ-25 ஆகியவற்றில் 2 புதிய கலர் ஆப்ஷன்களை சேர்த்துள்ளது.

RushLane.com வெளியிட்டு உள்ள தகவலின் படி யமஹாவின் FZ25 பைக் தற்போது ரேசிங் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் ஆகிய கலர் ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. மேலும் FZS-25 பைக் மாடலில் புதிதாக மேட் காப்பர் மற்றும் மேட் பிளாக் (Matte Copper and Matte Black) ஆகிய கலர் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள் ..  பிரதமரின் பாதுகாப்பிற்காக ரூ.12 கோடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Mercedes-Maybach S650 Guard-ன் சிறப்பம்சங்கள்!

இதன் ஸ்போர்ட்டி கவர்ச்சியை மேம்படுத்தும் 2 டூயல் டோன் புதிய கலர் ஆப்ஷன்களை தவிர வேறு எந்த மாற்றமும் பைக்குகளில் செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த அழகியலைத் தவிர புதிய 2 கலர் ஆப்ஷன்களும் காப்பர்-கலர்ட் அலாய் வீல்களுடன் வருகின்றன. நிலையான வேரியண்ட்டிற்கு மோட்டோஜிபி-இன்ஸ்பைர்டு லைவரி கிடைக்கிறது.

புதிய கலர் ஆப்ஷன்களை தவிர 2 மோட்டார் சைக்கிளின் மற்ற அம்சங்கள் அப்படியே இருக்கும் நிலையில் 2022 FZS25 அதே ஏர்-கூல்டு 250cc சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினைக் கொண்டிருக்கும். மேலும் இது 20bhp அதிகபட்ச ஆற்றலையும் 20.1Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும். மேலும் இந்த எஞ்ஜின் 5 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும் பின்புறத்தில் ஒரு மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும்.

ஒரு ஜோடி 282 மிமீ முன் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்குகள் இரு முனைகளிலும் ஆங்கரேஜை (anchorage) கையாளுகின்றன. கூடுதலாக ஆல்-எல்இடி இலுமினேஷன், நெகட்டிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அண்டர் கௌலிங் மற்றும் சைட் ஸ்டாண்ட் மற்றும் எஞ்சின் கட்-ஆஃப் சுவிட்ச் போன்ற அம்சங்கள் 2 வேரியன்ட்களிலும் பொதுவானவையாக வழங்கப்படுகின்றன.

இருப்பினும் டாப்-ஸ்பெக் S வேரியன்ட் (top-spec S variant ) கோல்டன் அலாய் வீல்ஸ், லாங் வைசர் மற்றும் ஹேண்டில் கிரிப்களில் பிரஷ் கார்டுகள் போன்ற கூடுதல் ஹார்டுவேர்களை பெறுகிறது. இந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட மாடல்களான FZS25 மற்றும் FZ25 ஆகியவை முறையே ரூ.1,43,300 மற்றும் ரூ.1,38,800 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்க கிடைக்கும் என்று தெரிகிறது. Yamaha FZ 25 மற்றும் Yamaha FZS 25 ஆகியவை quarter-litre naked bike category-யில் சுஸுகி ஜிக்ஸர் 250, பஜாஜ் டோமினார் 250 ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றன.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Bike, Two Wheeler, Yamaha, Yamaha bike