டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் 2022 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ரூ.98,564 முதல் என்கிற (டெல்லி ஆன்-ரோடு; ஃபேம் II மானியம் உட்பட) விலைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இந்த 2022 மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், இது ஐக்யூப, ஐக்யூப் எஸ், ஐக்யூப் எஸ்டி என்கிற மூன்று வேரியண்ட்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவைகள் மாறுபட்ட ரேன்ஜ், வண்ண விருப்பங்கள் மற்றும் அம்சங்களுடன் வருகிறது.
அம்சங்களை பொறுத்தவரை, 2022 டிவிஎஸ் ஐக்யூப்பின் எஸ் மற்றும் எஸ்டி வேரியண்ட்கள் ஆனது 7-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதே நேரத்தில் பேஸிக் வேரியண்ட் ஆனது 5-இன்ச் டிஸ்பிளேவை பெறுகிறது. எஸ்டி வேரியண்டில் இரண்டு ஃபுல் சைஸ் ஹெல்மெட்டுகளுக்கான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உள்ளது. அதே நேரத்தில் எஸ் மற்றும் பேஸிக் வேரியண்ட்களில் 17-லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் உள்ளது.
அனைத்து வேரியண்ட்களிலும் உள்ள ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் (SmartXonnect) ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி இணைப்பு நேரடி வாகன கண்காணிப்பு, விபத்து எச்சரிக்கை, ஜியோ ஃபென்சிங், சர்வீஸ் அலெர்ட், டிபிஎம்ஸ், மியூசிக் பிளேயர், கால் ஆக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ரீஜென் பிரேக்கிங் மற்றும் பல செயல்பாடுகளை அனுமதிக்கிறது.
பேஸிக் 2022 டிவிஎஸ் ஐக்யூப் வேரியண்ட் ஆனது 3.04kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்ட 4.4kW மோட்டாரை பெறுகிறது. கூடுதல் ரேன்ஞ் உடன் வரும் எஸ்டி வேரியண்ட் ஆனது அதே மோட்டாருடன் பெரிய 4.56kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தப்படுகிறது. 650W சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது எஸ் மற்றும் பேஸிக் வேரியண்டில் 4.5 மணி நேரத்தில் 80 சதவீத பேட்டரியை நிரப்ப முடியும். அதே நேரத்தில் வேகமாக சார்ஜ் செய்யும் திறனுடன் வரும் எஸ்டி வேரியண்ட் ஆனது 950W அல்லது 1,500W சார்ஜரைப் பயன்படுத்தி பேட்டரியை நிரப்ப முடியும். இவைகள் முறையே 4 மணி மற்றும் 2.5 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யும்.
இந்த ஸ்கூட்டரை எக்கோ அல்லது பவர் மோட்-இன் கீழ் பயன்படுத்தலாம், இது பேஸிக் மற்றும் எஸ் வகைகளில் அதிகப்பட்சமாக 100 கிமீ வரம்பையும், எஸ்டி வேரியண்ட்டில் 140 கிமீ வரம்பையும் வழங்குகிறது. இதுதவிர மூன்று வேரியண்ட்களுமே 0 - 40 கிமீ வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது. இருப்பினும் எஸ்டி வேரியண்ட் மட்டுமே 82 கிமீ என்கிற டாப் ஸ்பீட்டை வழங்கும்.
Also see... புதிய Splendor Plus XTEC-ன் விலை மற்றும் கூலான 5 அம்சங்கள்..!
விலைகளை பொறுத்தவரை, 2022 டிவிஎஸ் ஐக்யூப்பின் பேஸிக் வேரியண்ட் ஆனது ரூ.98,564 (ஆன்-ரோடு டெல்லி) என்கிற விலைக்கு தொடங்குகிறது, அதே சமயம் டிவிஎஸ் ஐக்யூப் எஸ் வேரியண்ட் ஆனது ரூ.1.08 லட்சம் (ஆன்-ரோடு டெல்லி) என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. டாப் எண்ட் மாடல் ஆன டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி வேரியண்ட்டின் விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் முன்பதிவுகள் ரூ.999 முதல் திறக்கப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TVS