Home /News /automobile /

அறிமுகமானது புதிய TVS Apache RTR 200 4V பைக்.. விலை எவ்வளவு தெரியுமா?

அறிமுகமானது புதிய TVS Apache RTR 200 4V பைக்.. விலை எவ்வளவு தெரியுமா?

TVS Apache RTR 200 4V பைக்

TVS Apache RTR 200 4V பைக்

டிவிஎஸ் மோட்டார் சமீபத்தில் மின்சார வாகன உற்பத்தியில் புதிய முதலீட்டை அறிவித்துள்ளது. நிறுவனம் தனது EV உற்பத்தி ஆலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
TVS மோட்டார் நிறுவனம் கடந்த செவ்வாயன்று தனது புதிய 2022 Apache RTR 200 4Vயை ரூ.1,33,840 (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் சிங்கிள்-சேனல் ABS மற்றும் டூயல்-சேனல் ABS என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது வகையின் விலை ரூ.1,38,890 ஆக இருக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.      சமீபத்திய மாடல் வருகிற ஆண்டுக்கான புதுப்பித்தலுடன், அதே மூன்று ரைடிங் மோடுகளுடன் (ஸ்போர்ட்ஸ், அர்பன் மற்றும் ரெயின்) வருகிறது. இந்த மாடலின் பிரிவில் இந்த அம்சத்தைப் பெறும் ஒரே பைக் இதுதான் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய மோட்டார்சைக்கிளின் மற்ற முக்கிய சிறப்பம்சங்களில் ப்ரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா ஃபிரண்ட் சஸ்பென்ஷன், TVS SmartXonnect புளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஷோவா ரியர் மோனோ-ஷாக், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக்குகள் மற்றும் கிளட்ச் லீவர்கள் ஆகியவை அடங்கும்.

2022ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக புதிய அப்பாச்சி200 4வி பைக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள் (DRL)-உடன் புதிய டிசைனில் ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் முன்பக்கம் புதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த புத்துணர்ச்சியான ஹெட்லேம்ப் அமைப்பை தவிர்த்து 2022 அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி பைக்கின் மற்ற அம்சங்கள் எதிலிலும் கை வைக்கப்படவில்லை. இதனால் பைக்கின் மற்ற ஸ்டைலிங் வளைவுகள் மற்றும் சிறப்பம்சங்கள் அனைத்தும் அப்படியே தொடருகின்றன.

ALSO READ |  ஆண்ட்ராய்டு மொபைல் யூசர்களே… இந்த 5 புதிய அப்டேட்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

எஞ்சினை பொறுத்தவரை, பைக்கில் 197.75சிசி, ஒற்றை சிலிண்டர், நான்கு வால்வு, ஆயில் கூல்டு எஞ்சின் உள்ளது. 9,000 ஆர்பிஎம்மில் மேம்படுத்தப்பட்ட 20.82 பிஎஸ் பவரையும், 7,800 ஆர்பிஎம்மில் 17.25 என்எம் டார்க்கையும் கொண்டு, அதே ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இந்த எஞ்சின் இணைக்கப்பட்டுள்ளது.இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. திறன், 16.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இதுதவிர Apache RTR 200 4V மோட்டார்சைக்கிள் குளோஸ் பிளாக், பேர்ல் ஒயிட் மற்றும் மேட் ப்ளூ ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் செயல்திறன் மிக்க ஆரம்ப நிலை பைக் மாடலாக இருந்தாலும், மைலேஜிலும் வாடிக்கையாளர்களை கவர்கிறது. இந்த பைக் நகர்ப்புறத்தில் 35 கிமீ வரையிலும், நெடுஞ்சாலையில் 45 கிமீ வரையிலும் மைலேஜ் தரும். சராசரியாக லிட்டருக்கு 41 கிமீ மைலேஜை எதிர்பார்க்கலாம்.

ALSO READ |  ஹேக்கர்களிடமிருந்து ஃபேஸ்புக் அக்கவுண்ட்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் Facebook Protect

இதற்கிடையில், டிவிஎஸ் மோட்டார் சமீபத்தில் மின்சார வாகன உற்பத்தியில் புதிய முதலீட்டை அறிவித்துள்ளது. நிறுவனம் தனது EV உற்பத்தி ஆலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சென்னையைச் சேர்ந்த இந்த பைக் தயாரிப்பு நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் ₹1,200 கோடி முதலீடு செய்து மின்சார வாகனங்களை உருவாக்கவும், எதிர்கால தொழில்நுட்பங்களில் பணியாற்றவும் உள்ளதாக கூறப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: TVS

அடுத்த செய்தி