Home /News /automobile /

புதிய வேகனார் ஃபேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி - புதிய வசதிகள், விலை குறித்து பார்க்கலாம்

புதிய வேகனார் ஃபேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி - புதிய வசதிகள், விலை குறித்து பார்க்கலாம்

புதிய வேகனார் ஃபேஸ்லிப்ட் காரை அறிமுகம்

புதிய வேகனார் ஃபேஸ்லிப்ட் காரை அறிமுகம்

Maruti Suzuki WagonR facelift : 2022 மாருதி சுஸுகி வேகனார் என்பது 1.0 லிட்டர் கே சீரிஸ் டூயல் ஜெட் பவர் கொண்டதாகும். இதில் டூயல் விவிடி என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் என்ஜின் ஆகிய இரண்டும் உள்ளன.

தற்போதைய நிதியாண்டு நிறைவடைய இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான டாடா, ஹூண்டாய் போன்றவை சார்பில் ஏராளமான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், சந்தையில் நிலவும் போட்டிக்கு ஈடு கொடுக்கும் வகையில் வேகனார் காரில் புதிய மாடல் ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய வேகனார் ஃபேஸ்லிப்ட் காருக்கு, தொடக்க விலையாக ரூ.5.39 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், டாப்-ஸ்பெக் டிரிம் கொண்ட காரின் விலை ரூ.7.10 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கமர்ஷியல் போட்டோஷூட் ஒன்றில் இந்த காரை பார்க்க முடிந்தது. காரின் உள்ளேயும், வெளியேயும் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

2022 மாருதி சுஸுகி வேகனார் என்பது 1.0 லிட்டர் கே சீரிஸ் டூயல் ஜெட் பவர் கொண்டதாகும். இதில் டூயல் விவிடி என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் என்ஜின் ஆகிய இரண்டும் உள்ளன. இதில், 1.0 லிட்டர் வேரியண்டில் சிஎன்ஜி வசதியும் உண்டு. வேகனார் சிஎன்ஜி வகையின் காருக்கு ரூ.6.81 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்3,30,000 மஸ்டாங் கார்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் ஃபோர்டு... ஏன் தெரியுமா?
 புதிய அம்சங்கள் என்னென்ன?

மேம்படுத்தப்பட்ட வேகனார் காரில் ஐஎஸ்எஸ் (பெட்ரோல் வேரியண்ட்) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன. இதுதவிர 17.78 செ.மீ. கொண்ட ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோவும், அதனுடன் ஸ்மார்ட்ஃபோன் நேவிகேஷன் மற்றும் 4 ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு நல்ல டிரைவிங் அனுபவத்தை கொடுக்கும் வகையில், கிளவுட் அடிப்படையிலான சேவைகளை இதில் செயல்படுத்த முடியும்.

வாடிக்கையாளர்களின் மன விருப்பத்துக்கு ஏற்ப பல கலர் வேரியண்ட் கொண்டதாக இருந்த கார் வந்துள்ளது. கல்லண்ட் ரெட் மற்றும் பிளாக் ரூஃப் இணைந்த ஒரு வேரியண்ட் காரும், மேக்மா கிரே மற்றும் பிளாக் ரூஃப் இணைந்த மற்றொரு வேரியண்ட் காரும் இருக்கின்றன. குறிப்பாக, ரெட் மற்றும் பிளாக் இணைந்த காம்பினேஷன் நமது கண்களை கவருவதாக அமைந்துள்ளது.

புதிய வேகனார் காரை அறிமுகம் செய்து வைத்தபோது மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூத்த எக்ஸிகியூடிவ் இயக்குநர் இதுகுறித்து கூறுகையில், “இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பங்களை தடையின்றி பூர்த்தி செய்து வருவதால், சந்தையில் மாருதி சுஸுகி வேகனார் தொடர்ந்து வெற்றி அடைந்து வருகிறது. நல்ல வடிவமைப்பு, நல்ல செயல்திறன் ஆகியவற்றோடு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய அம்சங்களை இதில் அறிமுகம் செய்துள்ளோம்’’ என்று கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா அடிப்படையிலும் இந்த காரை மாருதி நிறுவனம் விற்பனை செய்கிறது. மாத சந்தா ரூ.12,000 முதல் தொடங்குகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Maruti Suzuki

அடுத்த செய்தி