Home /News /automobile /

2022 மாருதி சுசுகி பலேனோ: 25,000 முன்பதிவுகளை கடந்தது... விலை என்ன தெரியுமா?

2022 மாருதி சுசுகி பலேனோ: 25,000 முன்பதிவுகளை கடந்தது... விலை என்ன தெரியுமா?

மாருதி சுசுகி பலேனோ

மாருதி சுசுகி பலேனோ

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட 2022 பலேனோ (Baleno) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Maruti Suzuki நிறுவனம் நியூ ஜென்ரேஷன பலேனோ பிரீமியம் தர அம்சங்கள் கொண்ட ஹேட்ச்பேக் கார் டெலிவரியை இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரை 25 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட 2022 பலேனோ (Baleno) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.ஏற்கனவே இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஓனர்களை கொண்டுள்ளது Baleno. தவிர உள்நாட்டு சந்தையில் அதிகம் விற்பனையாகும் முதல் ஐந்து கார்களில் பலேனோவும் ஒன்றாகும்.

பழைய பலேனோ காரை விட பல மடங்கு தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் மதிப்பு கூட்டப்பட்ட வகையில் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு ஏர்பேக்குகள் (டிரைவர், கோ-டிரைவர், சைட் மற்றும் கர்டன்), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) , ஹெட்ஸ் அப் திரை, ஏபிஎஸ் உடன் EBD, ஹை-ஸ்பீட் அலர்ட் சிஸ்டம், டிரைவர் மற்றும் அருகில் அமருபவருக்கான சீட் பெல்ட் ரிமைன்டர், எல்இடி ஃபோக்லேம்ப்கள், அல்ட்ரா ஹை டென்சைல் ஸ்டீல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

காரின் உட்புறத்தில் புதிய 9-இன்ச் டிஜிட்டல் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி வசதிக் கொண்ட பார்க்கிங் கேமிரா, ஒயர்லெஸ் ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஒயர்லெஸ் சார்ஜர், புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், யுவி கட் கிளாஸஸ், ஹெட் அப் டிஸ்ப்ளே (HUD) திரை மற்றும் ARKAMYS இன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கெனிச்சி அயுகாவா கூறுகையில், "வெளியீடு செய்ததில் இருந்து தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும் முதல் ஐந்து கார்களில் பலேனோவும் ஒன்று. இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான மகிழ்ச்சியான பலேனோ வாடிக்கையாளர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வடிவமைப்பு மற்றும் செயல்திறனுக்காக பாராட்டுக்களை பெற்றுள்ளது. புதிய மாடல் பலேனோ எதிர்காலத்தை நோக்கிய எங்களின் புதிய அணுகுமுறையாகும். தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், நியூ ஏஜ் பலேனோ பல பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவை மீண்டும் உற்சாகப்படுத்த உள்ளது. இன்டீரியர், பாதுகாப்பு சிறப்பம்சங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு பயண அனுபவத்தி புதிய உச்சம் தொட்ட உணர்வை கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also read... புதிய MINI Cooper SE எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை மற்றும் சிறப்பம்சங்கள்

முகவர்களுடன் இணைந்து மாருதி சுசுகி இந்த முழு மாடல் மாற்றத்திற்காக ரூ.1,150 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. தற்போது வரை 25 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்துள்ள நிலையில், நியூ ஏஜ் பலேனோ தொடர்ந்து அதிக புக்கிங்குகளை பெறும் என மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி சஸ்பென்ஷனில் மாற்றங்களைச் செய்துள்ளது. வசதியான டிரைவ் அனுபவத்திற்காக புதிய ஹைட்ராலிக் கிளட்ச் சிஸ்டம், 14 இன்ச் டிஸ்க் பிரேக்குகள், பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் மேம்பட்ட என்விஹெச் செயல்திறன் ஆகியவற்றை அறிமுக விலையாக இந்த காருக்கு ரூ. 6.35 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுப்பிக்கப்பட்ட பலேனோவை 'மாருதி சுஸுகி சப்ஸ்கிரைப்' மூலம் ரூ.13,999 முதல் அனைத்தையும் உள்ளடக்கிய மாதாந்திர சந்தாக் கட்டணத்தில் பெறலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Maruti Suzuki

அடுத்த செய்தி