Home /News /automobile /

அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள புதிய Mahindra Scorpio-N பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள புதிய Mahindra Scorpio-N பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

2022 Mahindra Scorpio-N

2022 Mahindra Scorpio-N

2022 Mahindra Scorpio-N | சமீபத்தில் ஷேர் செய்யப்பட்ட Scorpio-N காரின் அதிகாரப்பூர்வ படங்களின் படி, 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ-என் டூயல் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ்களை பெற்றுள்ளது.

இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி-க்கு பெரிதாக எந்த அறிமுகமும் தேவையில்லை. சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் தனது புதிய தலைமுறை மற்றும் முன்பை விட பெரிய SUV-ஆன Scorpio-N அறிமுகம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு புதிய காரின் டீசரையும் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்திருந்தது மஹிந்திரா நிறுவனம்.

நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,  வரும் ஜூன் 27-ல் புத்தம் புதிய Mahindra Scorpio-N இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதனிடயே தற்போதைய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ இந்தியாவில் ‘ஸ்கார்பியோ கிளாசிக்’ என்ற பெயரில் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் SUV கார்களுக்கெல்லாம் பெரிய SUV-யாக தங்களது புதிய Mahindra Scorpio-N SUV இருக்கும் என்று குறிப்பிடும் வகையில் "Big Daddy of SUVs" என்ற வாசகத்துடன் Scorpio-N அறிமுகம் பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம்.

அடுத்த அறிமுகத்திற்கு முன்னதாக வர உள்ள புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

சமீபத்தில் ஷேர் செய்யப்பட்ட Scorpio-N காரின் அதிகாரப்பூர்வ படங்களின் படி, 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ-என் டூயல் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ்களை பெற்றுள்ளது. இது காருக்கு ஸ்போர்ட்டி லுக்கை கொடுக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700-க்குப் பிறகு, புதிய மஹிந்திரா லோகோவைப் பெறும் இரண்டாவது வாகனமாக வர உள்ள 2022 ஸ்கார்பியோ-என் உள்ளது. "பிக் டாடி ஆஃப் எஸ்யூவி-" என்று குறிப்பிடப்படுவதன் மூலம் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் பரிமாணங்களில் பெரியதாக இருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள Mahindra Scorpio-N இந்திய சாலைகளில் பல முறை டெஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. டெஸ்டிங்கின் போது கசிந்த ரகசிய போட்டோக்களின் படி, புதிய ஸ்கார்பியோ SUV-யின் டாஷ்போர்ட் மையத்தில் செங்குத்தாக அமைந்த பெரிய டச் ஸ்கிரீனை பெறும். கூடுதலாக, இது ஃபுல் -டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ஃபிளாட்-பாட்டம் மல்டி-ஃபங்க்ஷ்னல் ஸ்டீயரிங் வீலையும் பெறும்.



ஆல்-நியூ Scorpio-N காரானது 4X4 ஃபங்ஷனை ஆப்ஷனாக பெறும் என்று மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக ஒரு செய்தி குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் ஆஃப்-ரோடிங் தேவைகளை புதிய எஸ்யூவி பூர்த்தி செய்யும் என்பதை கருத்தில் கொண்டு 4X4 ஆப்ஷன் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது. மிக சமீபத்தில் வெளிவந்த காரின் அதிகாரப்பூர்வ வடிவமைப்பை வெளிப்படுத்திய போட்டோக்களில் சன்ரூஃப் அம்சம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போதைய-தலைமுறை ஸ்கார்பியோ 6-ஸ்பீடு மேனுவல் டிரான்

ஸ்மிஷனுடன் வருகிறது. இருப்பினும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் யூனிட் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. மொத்தத்தில் பனோரமிக் சன்ரூஃப், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், டைனமிக்-ஸ்வைப் டர்ன் இண்டிகேட்டர்ஸ், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே கம்பேடிபிளிட்டி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கனெக்டெட் கார் அம்சங்கள் உள்ளிட்ட பலவற்றுடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Mahindra

அடுத்த செய்தி