ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

கேடிஎம் 2022 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன

கேடிஎம் 2022 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன

கேடிஎம் 2022 390 அட்வென்ச்சர் பைக்

கேடிஎம் 2022 390 அட்வென்ச்சர் பைக்

2022 KTM 390 Adventure | கேடிஎம் 2022 390 அட்வென்ச்சர் ஆனது இப்போது இரண்டு ட்ராக்ஷன் கண்ட்ரோல் மோட்-களுடன் வருகிறது.

  கேடிஎம் நிறுவனம், அதன் 2022 390 அட்வென்ச்சர் பைக்கை கடந்த ஆண்டு உலகளவில் வெளியிட்டது. ஒருவழியாக இந்த  பைக்கின் புதிய எடிஷனை இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 2022 390 அட்வென்ச்சரின் விலை ரூ. 3.35 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும். இந்த பைக் ரூ.7000 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளது, அதே சமயம் கேடிஎம் நிறுவனம் இந்த பைக்கில் சில மாற்றங்களையும் செய்துள்ளது.

  கேடிஎம் 2022 390 அட்வென்ச்சர் ஆனது இப்போது இரண்டு ட்ராக்ஷன் கண்ட்ரோல் மோட்-களுடன் வருகிறது. அது ஸ்ட்ரீட் மற்றும் ஆஃப் ரோடு ஆகும். இந்த மோட்கள் ரைட்டிங் கண்டிஷனை பொறுத்து ட்ராக்ஷன் கண்ட்ரோல் தலையீட்டின் வெவ்வேறு நிலைகளை வழங்குகின்றன. இதன் 12-ஸ்போக் அலாய் வீல்கள் புதிய 5-ஸ்போக் யூனிட்களுடன் மாற்றப்பட்டுள்ளன. கேடிஎம் நிறுவனத்தின் படி, புதிய அலாய் வீல்கள் கடினமானதாகவும், குறைவான ஸ்போக்குகள் இருந்தபோதிலும் தாக்கங்களை சிறப்பாக கையாளும்.

  மேலும் இந்த பைக் இரண்டு புதிய வண்ண விருப்பங்களை பெற்றுள்ளது - டார்க் கால்வனோ பிளாக் மற்றும் கேடிஎம் ஃபேக்டரி ரேசிங் ப்ளூ. இது தவிர்த்து 390 அட்வென்ச்சரில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

  அதாவது தற்போதும் 373 சிசி, லிக்விட்-கூலிங், சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினையே பெறுகிறது. இந்த எஞ்சின் 9,000 ஆர்பிஎம்மில் 43.5 பிஎஸ் மேக்ஸ் பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 37 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் குவிக் ஷிஃப்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொறுத்தவரை, முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் ரியரில் 280 மிமீ டிஸ்க் உள்ளது.

  ALSO READ | டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 5 எஸ்யூவி மாடல் கார்கள் இதோ!

   

  சஸ்பென்ஷனை பொறுத்தவரை, முன்புறத்தில் டபுள்யூபி அப்-சைட் டவுன் ஃபோர்க்ஸும், ரியரில் ஒரு மோனோ-ஷாக்கும் உள்ளது. நினைவூட்டும் வண்ணம், கேடிஎம் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில் 2022 250 அட்வென்ச்சரை அறிமுகப்படுத்தியது. அதன் விலை ரூ. 2.35 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும். 390 அட்வென்ச்சரின் அப்டேட்களுடன் ஒப்பிடும்போது 250 மாடல் ஆனது பெரிய அளவிலான அப்டேட்கள் எதையும் பெறவில்லை.

  இந்த பைக், இரண்டு புதிய வண்ண விருப்பங்களை பெற்றது - கேடிஎம் ஃபேக்டரி ரேசிங் ப்ளூ மற்றும் கேடிஎம் எலக்ட்ரானிக் ஆரஞ்சு; மேலும் இது கடினமான புதிய 10-ஸ்போக் அலாய் வீல்களையும் பெறுகிறது. இது எல்சிடி டிஸ்பிளே, ஹாலஜன் ஹெட்லேம்ப், மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே மற்றும் 12V சார்ஜிங் சாக்கெட் ஆகியவற்றுடனேயே வருகிறது.

  390 அட்வென்ச்சருடன் ஒப்பிடும் போது, ​​இது டிஎஃப்டி டிஸ்பிளே, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, குவிக்-ஷிஃப்ட்டர், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவற்றை இழக்கிறது.

  ALSO READ | இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு தொடங்கியது!

   மேலும் எஞ்சினிலும் எந்த மாற்றமும் இல்லை, இது இன்னுமும் 248 சிசி, லிக்விட் கூலிங், சிங்கிள்-சிலிண்டர் எஞ்சினுடன் வருகிறது. இது அதிகபட்சமாக 30 பிஎஸ் பவரையும், 24 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொறுத்தவரை முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் ரியரில் 230 மிமீ டிஸ்க் உள்ளது. சஸ்பென்ஷனை பொறுத்தவரை முன்பக்கத்தில் 43 மிமீ அப்-சைடு டவுன் ஃபோர்க்ஸ் உடனான டபுள்யூபி அபெக்ஸ் மற்றும் ரியரில் ஒரு மோனோ-ஷாக் உள்ளது.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Bike