ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இரண்டு வண்ணங்களில் விண்டேஜ் தோற்றத்தில் அறிமுகமான கவாஸாகியின் புதிய பைக்! விலை எவ்வளவு தெரியுமா?

இரண்டு வண்ணங்களில் விண்டேஜ் தோற்றத்தில் அறிமுகமான கவாஸாகியின் புதிய பைக்! விலை எவ்வளவு தெரியுமா?

புதிய Z650RS ஆனது, Z650 நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலை விட ரூ.41,000 அதிகமாக உள்ளது.

புதிய Z650RS ஆனது, Z650 நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலை விட ரூ.41,000 அதிகமாக உள்ளது.

புதிய Z650RS ஆனது, Z650 நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலை விட ரூ.41,000 அதிகமாக உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் சர்வதேச சந்தைகளில் ‘Z650’ மாடலின் புதிய ரெட்ரோ பதிப்பை வெளியிட்டது. ஜப்பானிய சூப்பர் பைக்கான இது, விண்டேஜ் தோற்றத்தில் உருவாக்கி உள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர். ‘Z650RS’ என்று அழைக்கப்படும் இந்த பைக், நிஞ்ஜா 650 மற்றும் Z650 பைக்குகளில் இருப்பதை போலவே சிறிய 650ccயினை இதில் பொருத்தி உள்ளனர். இந்த பைக்கின் விலை ரூ.6.65 லட்சம் ஆகும்.

புதிய Z650RS ஆனது, Z650 நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலை விட ரூ.41,000 அதிகமாக உள்ளது. இது இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. ஒன்று மெட்டாலிக் மூண்டஸ்ட் கிரே. மற்றொன்று கேண்டி எமரால்டு கிரீன் ஆகும். இது ‘ட்ரையம்ப் போனவில்லே ரேஞ்ச்’ உட்பட மற்ற ரெட்ரோ கிளாசிக் மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த ரெட்ரோ கிளாசிக் முன்புறத்தில் ஒரு வட்ட வடிவ ‘எல்இடி’ ஹெட்லேம்ப் இருக்கிறது.

எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் பைக்கின் இரு முனைகளிலும் சிறப்பாக பொருத்தி இருக்கின்றனர். பின்புறத்தில் புதிய எல்இடி டெயில்லேம்ப் இருக்கிறது. இதில் உள்ள கோல்டன் ஸ்பிலிட்-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் இரட்டை-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆனது, அதன் ரெட்ரோ வசீகரத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைத்து இருக்கின்றனர். கவாஸாகியின் Z650RS ஆனது திரவ-குளிரூட்டப்பட்ட, நான்கு-ஸ்ட்ரோக், இணை-இரட்டை என்ஜினால் இயக்கப்படுகிறது. 192 கிலோ எடையுள்ள இந்த பைக்கை இயக்குவதற்கு 649சிசி பேரலல் ட்வின் என்ஜினை பொருத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Must Read | விரைவில் வெளியாகிறது யமஹா R15 S- அசரவைக்கும் சிறப்பம்சங்கள்!

இதே BS6 இணக்கமான 649cc, Z650 மற்றும் நிஞ்ஜா 650 ஆகியவற்றிலும் காணப்படுகிறது. ஆறு-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 8,000 ஆர்பிஎம்மில் (RPM) 68 பிஎஸ் பவர் மற்றும் 6,700 ஆர்பிஎம்மில் 64 என்எம் பீக் டார்க்கினையும் வெளிப்படுத்துகிறது. இதில் இருக்கும் ரெட்ரோ கிளாசிக் பிரேக்கிங் செயல்பாடுகள் முன்புறத்தில் இரட்டை 310 மிமீ டிஸ்க்குகளாலும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க்குகளாலும் இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை சுருள்-லோடு ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் கவாஸாகி நிறுவனம் ‘இசட்650 ஆர்எஸ்’ என்ற பெயரில் புதிய ஸ்ட்ரீட் பைக்கை உலகளவில் வெளியீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்கு இடையே பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிளை உருவாக்கும் பணியிலும் கவாஸாகி நிறுவனம் தற்சமயம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது உண்மையெனில் அது மோட்டார் வாகன உற்பத்தி துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறலாம். கவாஸாகி நிறுவனம் ஆனது நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் 2021 தொடக்கத்தில் ‘கவாஸாகி Z650RS’ மாடல்களை டெலிவரி செய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Automobile, Bike