கவாஸாகி (Kawasaki) நிறுவனம் 2022 நின்ஜா 300 (2022 Kawasaki Ninja 300) மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் சோஷியல் மீடியாக்களில் இந்த பைக் குறித்த டீசரை வெளியிட்டு இருந்தது கவாஸாகி இந்தியா. இந்நிலையில் இப்போது அப்டேட் செய்யப்பட்ட 2022 நின்ஜா 300 மோட்டார் பைக்கை ரூ.3.37 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. லேட்டஸ்ட் அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த புதிய 2022 மாடலின் விலை சற்றே உயர்த்தப்பட்டு உள்ளது.
முன்பு கவாஸாகி நிறுவனம் 2021-ஆம் ஆண்டு மாடலை ரூ.3.18 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) அறிமுகப்படுத்திய நிலையில், இந்த ஆண்டு மாடலின் விலையை சுமார் ரூ.19,000 வரை உயர்த்தி இருக்கிறது. கவாஸாகி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட டீலர் பார்ட்னர்கள் மூலம் இந்த புதிய மாடல் பைக்கிற்கான புக்கிங்ஸ்களை ஏற்க தொடங்கியுள்ளது. டெலிவரிகள் அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.
புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் 2022 கவாஸாகி நின்ஜா 300 மேம்படுத்தபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்டேட் செய்யப்பட்ட 2022 Kawasaki Ninja 300 சிறிய தோற்றம் சார்ந்த மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் இந்த பைக் மாடல், திருத்தப்பட்ட பெயிண்ட் ஸ்கீம் மற்றும் புதிய கிராபிக்ஸ் உள்ளிட்ட சில வெளிப்புற மாற்றங்களைப் பெற்றுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நிஞ்ஜா 300 முன்பை போலவே அனைத்து மெக்கானிக்கல் காம்போனென்ட்ஸ்களையும் கொண்டுள்ளது. அதே நேரம் ஏற்கனவே இருக்கும் 3 பெயிண்ட் ஸ்கீம்களில் 2 புதிய லைவரிகளை பெறுகிறது. புதிய லைவரிகள் இந்த மோட்டார் சைக்கிளை முன்பை விட நவீனமாக தோற்றமளிக்க செய்கின்றன. ஆம், புதிய கிராபிக்ஸ் மற்றும் புதிய பெயிண்ட் ஸ்கீமை பெறுகிறது 2022 நிஞ்ஜா 300 மோட்டார் பைக். புதிய மாடலில் எபோனி, லைம் கிரீன் மற்றும் கேண்டி லைம் கிரீன் என 3 கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இது தவிர, மோட்டார் சைக்கிளின் மற்ற பாகங்கள் அப்படியே இருக்கின்றன.
இந்த பைக் அதன் முந்தைய மாடலை போலவே அதே BS 6- கம்ப்லியென்ட் 296cc,பேர்லல்-ட்வின், லிக்விட்-கூல்டு எஞ்சினை கொண்டுள்ளது. இந்த எஞ்சின் யூனிட் அதே 6-ஸ்பீடு யூனிட்டுடன் 38.4bhp பவர் மற்றும் 27Nm பீக் டார்க்கையும் வழங்கும். தவிர ட்வின்-பாட் ஹாலோஜன் ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் மெக்கானிசம் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட அதே அம்சங்களை இந்த மாடலும் பெறுகிறது. புதிய 2022 Kawasaki Ninja 300 மிட்-லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் போட்டியாக இருக்கும். இந்த பிரிவில் இந்த பைக் TVS Apache RR310 மற்றும் KTM RC 390 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.