Home /News /automobile /

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது 2022 Jeep Compass Trailhawk... முந்தைய மாடலைவிட பல மடங்கு சிறப்பு அம்சங்கள்...

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது 2022 Jeep Compass Trailhawk... முந்தைய மாடலைவிட பல மடங்கு சிறப்பு அம்சங்கள்...

காம்பஸ் டிரெயில் ஹாக்

காம்பஸ் டிரெயில் ஹாக்

ஜீப் (Jeep) நிறுவனத்தின் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் (2022 Compass Trailhawk) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவிலேயே பிரபலமான ஜீப் (Jeep) நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காம்பஸ் டிரெயில்ஹாக் கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன என பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுக விலையாக 30 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கு காம்பஸ் டிரெயில் ஹாக் விற்பனையாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காம்பஸ் டிரெயில்ஹாக் ஓர் மிக சிறந்த ஆஃப்-ரோடு வாகனமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் கரடு முரடான சாலைகளிலும் சிறப்பாக பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

காம்பஸ் டிரெயில் ஹாக் என்பது முந்தயை காம்பஸ் காரைக் காட்டிலும் பன்மடங்கு அதிக சிறப்பு வசதிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரெயில் ஹாக் காரில் முந்தையை SUVயின் மாடலில் இருந்து பல வேறுபாடுகள் மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் செய்யப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, இந்த டிரெயில் ஹாக் மாறுபாட்டின் பம்பர்கள் நிலையான ஜீப் காம்பஸில் இருந்து வேறுபட்டவை, சிறந்த அணுகுமுறை மற்றும் புறப்படும் கோணங்களை செயல்படுத்துகின்றன. வழக்கமான ஜீப் காம்பஸ் அம்சங்களுடன் கூடுதலாக, ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் ஒரு "ராக்" பயன்முறையை (AWD) கொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் 19 அங்குல ஆழம் வரையுள்ள தண்ணீரில் கூட பயணிக்க உகந்ததாக உள்ளது. ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் ஃபேஸ்லிஃப்ட் ஸ்போர்ட்ஸ் எல்இடி புரொஜெக்டர் ஹெட் லேம்ப்கள், ஒரு ஆட்டோ டிம்மிங் ரியர்வியூ மிரர், எல்இடி முன்பக்க மூடுபனி விளக்குகள், கருப்பு சரவுண்ட் கொண்ட புதிய சாம்பல் ஏழு ஸ்லாட் கிரில், ரெயின்-சென்சிங் முன் வைப்பர்கள் மற்றும் 17-இன்ச் டிரெயில் ஹாக் அலாய் வீல்கள் ஆகியன உள்ளன.

ஜீப் காம்பஸ் காரின் உட்புறம் அதிக பிரீமியம் உணர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 360 டிகிரி பார்க்கிங் கேமிரா, 12V பவர் அவுட்லெட், 10.25 அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 10.25 இன்ச் அளவுள்ள ஃப்ளோட்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜிங் வசதி, 9 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளிட்டவை காம்பஸ் டிரெயில் ஹாக்கில் உள்ள முக்கிய அம்சங்களாகும். இந்த அம்சங்களுடன் கூடுதலாக, ஜீப் காம்பஸ் டிரெயில் ஹாக் அதன் ஆஃப்-ரோடு திறனைக் காட்ட, 'டிரெயில் ரேட்டட்' பேட் ஜால் தனித்து நிற்கிறது.

Also read... போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையில் டிஸ்கவுண்ட் வழங்கும் காவல்துறை - என்ன காரணம்னு தெரிஞ்சுகோங்க

2.0-லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு-சிலிண்டர் உடன் கூடிய டர்போ-டீசல் (மல்டிஜெட்) எஞ்ஜின் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 170 எச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன், மிக சிறந்த டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக 9 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் காரில் பொருத்தப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி