Home /News /automobile /

அறிமுகமான சில நாட்களிலேயே 21,000-க்கும் மேற்பட்ட புக்கிங்ஸை பெற்ற 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்..!

அறிமுகமான சில நாட்களிலேயே 21,000-க்கும் மேற்பட்ட புக்கிங்ஸை பெற்ற 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்..!

2022 hyundai venue

2022 hyundai venue

2022 Hyundai Venue Facelift | புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நாட்களிலேயே இந்த காரை வாங்க சுமார் 21,000-த்திற்கும் மேற்பட்ட புக்கிங்ஸ் பெறப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும் ...
    தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய் சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி-க்களில் ஒன்றான தனது புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் (2022 Hyundai Venue facelift) காரை அறிமுகப்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நாட்களிலேயே இந்த காரை வாங்க சுமார் 21,000-த்திற்கும் மேற்பட்ட புக்கிங்ஸ் பெறப்பட்டுள்ளன. தற்போது வரை செய்யப்பட்டிருக்கும் மொத்த புக்கிங்ஸ்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஹைப்ரிட் ஹேட்ச்பேக் எஸ்யூவியின் டீசல் வேரியன்ட்டிற்கானது என்று தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

    ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் டீசல் மொத்தம் ஆறு ஆப்ஷன்களில் 3 வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை 1.2 பெட்ரோல் மாடல் ரூ.7.53 லட்சத்திலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மாடல் விலை ரூ.9.99 லட்சத்திலும் தொடங்குகிறது.

    இந்த காரில் டீசல் ஆப்ஷனானது மிட்-லெவல் வேரியன்ட்களுடன் தொடங்கும் அதே நேரத்தில் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் லோயர்-லெவல் மாடல்களுடன் கிடைக்கின்றன. ஹூண்டாய் வென்யூவுக்கான தேவை, பெட்ரோலை நோக்கி நகர்ந்தாலும், டீசல் என்ஜின்களுக்கான தேவை இன்னும் SUV பிரிவில் உள்ளது என்பதை புக்கிங்ஸ்கள் காட்டுகிறது. வென்யூவின் இந்த புதிய வெர்ஷன் உலகளவில் விற்கப்படும் 7 சீட்டர்ஸ் கொண்ட ஃபிளாக்ஷிப் எஸ்யூவி-யான Hyundai Palisade-ஆல் ஈர்க்கப்பட்ட ரீடிசைன்டு ரேடியேட்டர் கிரில்லை கொண்டுள்ளது. மேலும் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் இப்போது மாற்றியமைக்கப்பட ஃப்ரன்ட் பம்பருடன் வருகிறது.



    இந்த புதிய வென்யூ காரில் ஒரு புதிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 2-ஸ்டெப் ரிக்ளீனிங் பேக் சீட், 4-வே எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், ஏர் ப்யூரிஃபையர், ரியர் ஏசி வென்ட்ஸ், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உள்ளிட்ட பல அம்சங்கள் இன்டீரியர் டிசைனின் பகுதிகளாக இருக்கின்றன. இந்த எஸ்யூவியில் எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது. இந்த கார் அலெக்சா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் உடன் மேம்படுத்தப்பட்ட ஹோம் டு கார் (H2C) இணைப்பை வழங்குகிறது. ஹோம் டு கார் (H2C) மூலம், வாடிக்கையாளர்கள் ரிமோட் கிளைமேட் கன்ட்ரோல், ரிமோட் டோர் லாக்/அன்லாக், ரிமோட் வெஹிகிள் ஸ்டேட்டஸ் செக், ஃபைன்ட் மை கார் , டயர் பிரஷர் இன்ஃபர்மேஷன் மற்றும் பிற செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும்.

    Also Read : இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

    இதனிடையே சமீபத்திய ஆண்டுகளில் அதன் மாடல்களுக்கான தேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹூண்டாய், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட வாகனங்களின் தேவை அதிகரித்து கொண்டே வருவதாக குறிப்பிட்டு உள்ளது. டாடா நெக்ஸான், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், கியா சோனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ரெனால்ட் கிகர், நிசான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுடன் ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் போட்டியிடுகிறது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Automobile, Hyundai

    அடுத்த செய்தி