முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / இந்தியாவில் ரூ.7.53 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்

இந்தியாவில் ரூ.7.53 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்

Hyundai Venue 2022

Hyundai Venue 2022

2022 Hyundai Venue | 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு நிறுவனம் புதிய டார்க் குரோம் முன் கிரில்லை கொடுத்து சிறப்பான தோற்றத்தை அளித்துள்ளது.

  • 2-MIN READ
  • Last Updated :

இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி-க்களில் ஒன்றான புதிய ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் (2022 Hyundai Venue facelift) கார் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2022 ஹூண்டாய் வென்யூ இந்தியாவில் ப்ளூலிங்க் கனெக்ட் (BlueLink Connect) எனப்படும் கனெக்ட்டட் கார் டெக்னாலஜியை பெற்ற முதல் எஸ்யூவி கார் ஆகும்.

இந்திய கார் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய ஹூண்டாய் வென்யூ 1.2 லிட்டர் MPi பெட்ரோல் வேரியன்ட்டுக்கான ஆரம்ப விலை ரூ.7.53 லட்சம் ஆகும். 1.0 டர்போ GDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் இன்ஜின் வேரியன்ட்களுக்கான விலை ரூ.9.99 லட்சம் வரை செல்கிறது. இருப்பினும் புதிய ஹூண்டாய் வென்யூவின் எஞ்சின் அதன் முன்னோடியின் எஞ்சினை போலவே உள்ளது. டிசைன் மற்றும் ஸ்டைலிங் மாற்றங்களுடன் கூடுதலாக இந்த சப்காம்பாக்ட் SUV இப்போது பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூலிங்க் அமைப்பின் ஒரு பகுதியாக 60+ கனெக்டட் கார் டெக்னலாஜி உட்பட பல பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

2022 ஹூண்டாய் வென்யூ பேசிக், அட்வான்ஸ், சுப்ரீம் ஆகிய மூன்று ஆக்சஸரீஸ் பேக்குகளின் ஒரு பகுதியாக 47 ஆக்சஸரீஸை பெறும்.

டிசைன்:

2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு நிறுவனம் புதிய டார்க் குரோம் முன் கிரில்லை கொடுத்து சிறப்பான தோற்றத்தை அளித்துள்ளது. புதிய ஹூண்டாய் வென்யூவின் பின் பகுதியில் தனித்துவமான வெர்டிகிள் டிசைன் எலெமென்ட்ஸ்களுடன் LED டெயில் லேம்ப்ஸ்களை இணைக்கும் தனித்துவமான ஃபர்ஸ்ட் -இன்-செக்மென்டை கொண்டுள்ளது. தனித்துவமான உயரமான மற்றும் அகலமான தோற்றத்தை அளிக்கும் வகையில் 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரின் பின்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2022 ஹூண்டாய் வென்யூ போலார் ஒயிட், டைஃபூன் சில்வர், பாண்டம் பிளாக், டெனிம் புளூ, டைட்டன் கிரே, ஃபியரி ரெட், 1 டூயல் டோன் ஃபைரி ரெட் வித் பிளாக் ரூஃப் ஆப்ஷன் உட்பட 7 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்டீரியர்:

2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் டூயல்-டோன் பிளாக் மற்றும் பீஜ் தீம் கொண்டுள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் காம்பாக்ட் எஸ்யூவி புதிய நான்கு-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை பெறுகிறது. இந்த எஸ்யூவியில் எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது. இந்த கார் அலெக்சா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் உடன் மேம்படுத்தப்பட்ட ஹோம் டு கார் (H2C) இணைப்பை வழங்குகிறது. ஹோம் டு கார் (H2C) மூலம், வாடிக்கையாளர்கள் ரிமோட் கிளைமேட் கன்ட்ரோல், ரிமோட் டோர் லாக்/அன்லாக், ரிமோட் வெஹிகிள் ஸ்டேட்டஸ் செக், ஃபைன்ட் மை கார் , டயர் பிரஷர் இன்ஃபர்மேஷன் மற்றும் பிற செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும்.

Also Read : இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

எஞ்சின் ஆப்ஷன்கள்:

புதிய 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காரானது அதன் முந்தைய மாடல்களை போலவே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சின் 2 வேரியன்ட்களாகவும், டீசல் எஞ்சின் ஒற்றை வேரியன்டிலும் வழங்கப்பட உள்ளது. ஹூண்டாய் 2022 வென்யூ எஸ்யூவியை 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.2 லிட்டர் எம்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் ஆகிய மூன்று எஞ்சின் விருப்பங்களில் வழங்குகிறது. இதில் 1.0-லிட்டர் டர்போ GDi பெட்ரோல் எஞ்சின் 6,000rpm-ல் 118 bhp மற்றும் 172 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. 1.2 லிட்டர் Mi பெட்ரோல் எஞ்சின் 82 bhp மற்றும் 114 Nm டார்க்கை உருவாக்குகிறது. 1.5 லிட்டர் CRDi இன்ஜின் 99 bhp மற்றும் 240 Nm டார்க்கை வெளிப்படுத்தும்.

Also Read : எஸ்யூவி கார் வாங்க திட்டமா.? இந்தியாவை கலக்க உள்ள டாப் 3 மாடல்கள் இதோ!

எஞ்சின்கள் கீழ்காணும் 4 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகின்றன: 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி. புதிய ஹூண்டாய் வென்யூவில் நார்மல், ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்களின் தேர்வுடன் டிரைவிங் பர்ஃபாமென்சிற்காக டிரைவ் மோட் பொருத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Automobile, Hyundai, India