Home /News /automobile /

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யுவி - டக்ஸன் 2022 மாடலின் இந்திய அறிமுகம் உறுதியானது!

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யுவி - டக்ஸன் 2022 மாடலின் இந்திய அறிமுகம் உறுதியானது!

ஹூண்டாய் கார்

ஹூண்டாய் கார்

2022 Hyundai Tucson | நினைவூட்டும் வண்ணம், 2021 ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி மாடல் ஆனது க்ளோபல்-ஸ்பெக் மாடல், யூரோ என்சிஏபியின் 5-ஸ்டார் ப்ரொடெக்ஷன் மதிப்பீட்டைப் பெறும் கார்களின் பட்டியலில் உள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் கம்பெனி, அதன் 2022 ஹூண்டாய் டக்ஸன் மாடலின் வழியாக நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவியின் ஆல்-நியூ மாடலை இந்தியாவிற்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹூண்டாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல் நியூ ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி 2022 மாடலானது இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும். இது இந்தியாவிற்கு வரவிருக்கும் ஹூண்டாய் டக்சனின் ஃபோர்த் ஜெனரேஷன் மாடல் ஆகும்.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் எம்டி & சிஇஓ ஆன உன்சூ கிம் (Unsoo Kim), " உலகளாவில் சிறந்த விற்பனையை சந்திக்கும் எங்களின் ஆல் நியூ டக்ஸனை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்த ஹூண்டாய் தயாராக உள்ளது. இது 2004ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகளவில் 7 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களின் இதயங்களையும் மனதையும் கவர்ந்துள்ளது" என்று கூறி உள்ளார்.

    நினைவூட்டும் வண்ணம், 2021 ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி மாடல் ஆனது க்ளோபல்-ஸ்பெக் மாடல், யூரோ என்சிஏபியின் 5-ஸ்டார் ப்ரொடெக்ஷன் மதிப்பீட்டைப் பெறும் கார்களின் பட்டியலில் உள்ளது. சர்வதேச அளவிலான விற்பனையை வைத்து பார்க்கும் போது, இந்தியாவிலும் இது நல்ல வரவேற்பை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் நடத்தப்பட்ட க்ராஷ் டெஸ்டில் இந்த எஸ்யுவி, அடல்ட் ஆக்குபேஷன் சேஃப்டியில் (adult occupation safety) 86 சதவீத மதிப்பெண்களையும், சைல்ட் சேஃப்டி டெஸ்டில் 87 சதவீத மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. ஃபார்வேட் கொல்லிஷன் வார்னிங், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ட்ரைவர் அட்டென்சன் அலெர்ட் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய டக்ஸனின் பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரின் சிறந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகிறது.

    ஹூண்டாய் டக்சன் மாடல் ஆனது, ஃப்ரான்ட்ல் இம்பாக்ட் டெஸ்ட்டின் போது கிடைக்கக்கூடிய 16 புள்ளிகளில் 12.4 புள்ளிகளைப் பெற்றது, அதேசமயம் லேட்டரல் இம்பாக்ட் டெஸ்ட்டில் 15.4 புள்ளிகளைப் பதிவு செய்தது. மேலும் இந்த எஸ்யுவு 4 புள்ளிகளில் 3.3 என்ற ரியர் இம்பாக்ட் ஸ்கோர் மற்றும் ரெஸ்க்யூ அண்ட் எக்ஸ்ட்ரிக்கேஷன் மதிப்பீட்ல் 2 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

    மேலும் அடல்ட் ஆக்குபென்ட் ப்ரொடெக்ஷனின் அடிப்படையில் 38 புள்ளிகளில் 33.1 புள்ளிகளைப் பெற்றுள்ளது. சைல்ட் ஆக்குபேஷன் ப்ரொடெக்ஷனை பொறுத்தவரை, மொத்த 49 புள்ளிகளில் 42.9 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது 6 மற்றும் 10 வயது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட சோதனை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும், வல்னரபில் ரோட் யூசர் டெஸ்ட் என்று வரும்போது, ​​2021 டக்ஸன் ஒப்பீட்டளவில் 66 சதவிகிதம் குறைந்த மதிப்பெண்ணையே பெற்றுள்ளது. ஏஇபி பெடஸ்ட்ரியன் (AEB Pedestrian) என்று வரும்போது இந்த எஸ்யுவி மொத்த 9 புள்ளிகளில் 5.1 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஏஇபி சைக்கிளிஸ்ட் (AEB Cyclist) என்று வரும்போது 9 இல் 7.2 புள்ளிகள் என்கிற சற்றே சிறப்பான மதிப்பீட்டை பெற்றுள்ளது.

    Also see... அடுத்த தலைமுறைக்காக கூட்டு சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் - மஹிந்திரா

    இந்த ஃபோர்த் ஜெனரேஷன் டக்ஸன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வேண்டும், ஏனெனில் இந்த எஸ்யுவி ஏற்கனவே நாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hyundai

    அடுத்த செய்தி