அல்காசர் போல புதிய மாற்றங்களுடன் ஹூண்டாய் கிரெட்டா அறிமுகம்!

2022 hyundai creta

லத்தீன் அமெரிக்க மார்க்கெட்டில் நுழைந்திருக்கும் அப்டேட் வெர்சனான கிரெட்டா, விரைவில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படலாம்

  • Share this:
ஹூண்டாய் கிரெட்டா கார், வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் ஏற்கனவே இருந்த அமைப்புகளில் இருந்து பல்வேறு மாடிபிகேசன்கள் செய்யப்பட்டு, புதிய தோற்றத்தில் ’கெத்தாக’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காரின் முன்பகுதியைப் பொறுத்த வரை முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட்டு, அல்காசர் மாடலில் இருக்கும் முன்புற மாடல் பொருத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக இரண்டு விதமான தேர்வுகளில் என்ஜின்கள் உள்ளன. 1.0 லிட்டர் கொண்ட டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் வசதி கொண்ட பியூல் பிளெக்ஸ் பெட்ரோல் என்ஜினில் வெளிவந்துள்ளது

காரின் முன்பக்கத்தில் வழங்கப்படும் பம்பர், ரேடியேட்டர் க்ரில் மற்றும் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை அனைத்தும் புதிய பொலிவைப் பெற்றுள்ளன. இந்த மாடல் 7 சீட்டர் அல்காசர் மாடலில் இருந்து எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. கிரெட்டாவில் கிரில் அமைப்பு இருக்கும் நிலையில், கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஹெட்லேம்புகள், காரின் ஒட்டுமொத்த லுக்கை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது. பேஸ்லிஃப்ட்கள் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளதால், இதற்கு முன்பிருந்த தோற்றம் சிறிதும் இல்லாமல் புதிய லுக்கில் பளிச்சிடுகிறது.

வெளிப்புற மாற்றங்களைப் போல் உட்புறத்தில் காரின் கேபினும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கருப்பு - பழுப்பு நிற காம்பிநேஷனில் இருக்கும் காரின் உட்புறம், கூல் லுக்கை கொடுக்கிறது. புதிதாக கொடுக்கப்பட்டுள்ள 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூ லிங்க் கனெக்டிவிட்டி மற்றும் 7 இன்ச் இன்ஸ்ரூமென்ட் கிளெஸ்டரில் இடம்பெற்றுள்ளது. முன்பு காரின் கதவு மற்றும் ஸ்டியரிங்கில் லெதர்கள் வழங்கப்படவில்லை. மாடிபிக்கேஷனில் இந்த லெதர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய லுக்கை சொல்லவேண்டும் என்றால், கார் சாலையில் செல்லும்போது அனைவரது கவனத்தையும் ஒரு நொடியாவது இழுத்துவிடும். பல்வேறு மாடல் கார்களுக்கு மத்தியில் நிறுத்தி வைக்கபட்டிருந்தாலும், தனித்து தெரியும் வகையில் சூப்பரான மாடிபிக்கேஷனைப் பெற்றுள்ளது. கம்போர்ட், பிளாட்டினம், லிமிட்டெட் மற்றும் அன்லிமிட்டெட் வெர்சன்கள் இருக்கும் ஹூண்டாய் கிரெட்டாவில் பனோரமிக் சன் ரூஃப், பல்வேறு வகையான டிரைவ் மோட்கள் மற்றும் எல்.டி.இ ஹெட்லேம்புகள் தனித்துவமானதாக இருக்கும் என கூறப்படுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சக்கரங்கள் அலாய் வீல் மாடல். ஒவ்வொரு சக்கரமும் 18 இன்ச் அளவில் இருக்கும். அல்காசரை விட, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரஷ்ய கிரெட்டாவின் மாடலை முழுமையாக ஒத்திருக்கும் என கூறலாம். என்ஜின்களைப் பொறுத்த வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. பவர், டர்க்யூ மற்றும் பர்ஃபாமென்ஸ் தொடர்பான தகவல்களும் கிடைக்கவில்லை. லத்தீன் அமெரிக்க மார்க்கெட்டில் நுழைந்திருக்கும் அப்டேட் வெர்சனான கிரெட்டா, விரைவில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அறிமுகம் குறித்த உறுதியான தகவலை ஹூண்டாய் வெளியிடவில்லை.
Published by:Arun
First published: