• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 2022ல் வெளியாகும் ஹூண்டாய் க்ரெட்டா கார் - என்ன ஸ்பெஷல்?

2022ல் வெளியாகும் ஹூண்டாய் க்ரெட்டா கார் - என்ன ஸ்பெஷல்?

2022 hyundai creta

2022 hyundai creta

கார் திருடப்பட்டால் உடனே வாடிக்கையாளரின் மொபைலுக்கு குறுஞ்செய்தி வரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ஹூண்டாய் க்ரெட்டா

  • Share this:
2022ம் ஆண்டு வெளியாக உள்ள ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படங்கள் அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2022 ஹூண்டாய் ‘க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்’ அடுத்த மாதம் ‘கெய்கிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ ஷோ’வில் (GIIAS) அதன் அறிமுகத்தை வெளியிட இருக்கிறது. இந்த காரை பற்றி வெளிவந்துள்ள செய்திகளை பார்க்கலாம். இந்த படங்களின் மூலம் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கத்தையும், பக்கவாட்டு பகுதியையும் பார்க்க முடிகிறது. இந்த எஸ்யூவியில் விளிம்புகள் வரை விரிவடையும் வகையில், கிரில் வடிவத்தில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் எல்இடி ஹெட்லைட்கள் வசதியுடன் வருகிறது என்பது படங்களின் மூலம் தெளிவாக தெரிகிறது. ஹெட்லைட்டினை ஒளிர செய்யும் போது பூமராங் வடிவம் உருவாவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இது கீழ் பம்பரில் ஒரு பேண்டஸி டார்க் ஃபினிஷ் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த புதிய க்ரெட்டாவில் போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மேம்பட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறது.

Also read: ஒரு ரூபாய் அனுப்பினால் ரூ.51 கிடைக்கும் – வாட்ஸ்அப் அறிவித்துள்ள கேஷ்பேக் ஆஃபர் விவரம் இதோ!

புதிய 10.25-இன்ச் டிஎஃப்டி எல்சிடி கிளஸ்டர் போன்ற அம்சங்களுடன் வருகிறது. கூர்மையாகத் தோற்றமளிக்கும் வகையில் ‘அலாய் வீல்களின்’ பாடிவொர்க் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காரின் பின்புறத்தில் உள்ள எல்இடி டெயில் விளக்குகள் ஒருங்கிணைந்த வடிவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்புதிய க்ரெட்டாவில் ‘புளூலிங்க்’ வசதி இருக்கிறது. இதன் மூலம் காரின் யூசர்கள் ஸ்மார்ட்போனை வாகனத்துடன் இணைக்க முடியும்.

வாகன கண்காணிப்பு, வாகனம் திருடப்பட்டால் அதனை பின்தொடரும் வசதி, வேலட் பார்க்கிங் போன்ற நவீன சிறப்பான அம்சங்களைப் பெற்றுள்ளது. கார் திருடப்பட்டால் உடனே வாடிக்கையாளரின் மொபைலுக்கு குறுஞ்செய்தி வரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா பெரும்பாலும் 144Nm உடன் 1.5 லிட்டர் பெட்ரோல், 242Nm உடன் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 250Nm உடன் 1.5 லிட்டர் டீசல் மோட்டாரைப் பெறும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

Also read:  பொதுஇடத்தில் சண்டை போட்டுக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள்.. தர்மசங்கடத்தில் கட்சித் தலைமை

6-ஸ்பீடு மேனுவல் தவிர, CVT, 6-ஸ்பீடு ஆட்டோ மற்றும் 7-ஸ்பீடு DCT உள்ளிட்ட மூன்று ஆட்டோமேட்டிக் வசதிகளுடன் வருகிறது. ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவில் 2022 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது க்ரெட்டாவின் விலை ரூ.10.16 லட்சத்தில் தொடங்கி ரூ.17.78 லட்சம் வரை செல்கிறது. புதிய பதிப்புடன் வரும் போது இதைவிட ரூ.30,000 முதல் 45,000 வரை உயர்வாக பெற முடியும்.

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு மற்றொரு தென்கொரிய எஸ்யூவி காரான ‘கியா செல்டோஸ்’ முக்கியமான போட்டி மாடலாக விளங்குகிறது. நடுத்தர விலை எஸ்யூவில் ஹூண்டாய் தற்போது இரண்டாம் இடம் வகிக்கிறது. முதல் இடத்தை கியா செல்டோஸ் பெற்றுள்ளது.இந்த ‘ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்’ வந்தால் இந்திய வாகன சந்தையில் மீண்டும் முதல் இடத்தை பெரும் என்று கூறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: