Home /News /automobile /

டுகாட்டி Panigale V4 ஸ்போர்ட்ஸ் பைக்கின் 2022 வெர்ஷன் வெளியீடு - சிறப்பு அம்சங்கள் என்ன?

டுகாட்டி Panigale V4 ஸ்போர்ட்ஸ் பைக்கின் 2022 வெர்ஷன் வெளியீடு - சிறப்பு அம்சங்கள் என்ன?

Ducati Panigale V4 Bike

Ducati Panigale V4 Bike

2022-ஆம் ஆண்டிற்கான மேபடுத்தப்பட்ட Panigale V4-ஐ டுகாட்டி நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது.2022-ஆம் ஆண்டிற்கான மேபடுத்தப்பட்ட Panigale V4-ஐ டுகாட்டி நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
கடந்த 2018-ல் ஆண்டு அறிமுகமானதில் இருந்து மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சூப்பர் பைக்குகளில் ஒன்றாக டுகாட்டி நிறுவனத்தின் Panigale V4 பைக்குகள் இருந்து வருகின்றன. இதனிடையே 2022-ஆம் ஆண்டிற்கான மேபடுத்தப்பட்ட Panigale V4-ஐ டுகாட்டி நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது. 2022 Ducati Panigale V4 மற்றும் V4 S ஆகிய சூப்பர் பைக்குகள் வரும் டிசம்பர் முதல் வெளிநாடுகளில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இத்தாலிய சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி Panigale V4 பைக்ஸ் வேரியன்ட்ஸ்களின் ஏரோடைனமிக்ஸ், சேஸ், இன்ஜின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் மேம்பாடுகளை செய்து இருக்கிறது.

நுட்பமான மாற்றங்கள் மூலம் மேம்படுத்தப்பட்ட சவாரி அனுபவம் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அதிக ergonomic feedback-ஸை வழங்க சீட் மற்றும் டேங்கின் மேற்பரப்புகள் மாற்றப்பட்டுள்ளன. இது போன்ற மாற்றங்களால் 2022 Panigale V4 மேலும் சிறப்பான அனுபவத்தை ரைடர்களுக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது.

கியரிங் அப்டேட்ஸ்கள் சூப்பர் பைக்கின் ஸ்லோ-ஸ்பீடு கார்னரிங், கார்னர்-எக்சிட் த்ரஸ்ட் மற்றும் டாப் ஸ்பீடு உள்ளிட்டவற்றை மேம்படுத்துகிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றங்கள், மிகவும் கச்சிதமான மற்றும் மெல்லிய டபுள்-ப்ரொஃபைல் டிசைன் விங்க்ஸ் மற்றும் ஃபேரிங்கின் கீழ் பகுதியில் ரீடிசைன் செய்யப்பட்ட எக்ஸ்ட்ராக்ஷன் பாக்கெட். இதன் பின்னர் பிரமாண்டமான டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல், 1103சிசி வி4 இன்ஜின் உள்ளது, இது இன்ஜினின் உட்புறங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் ஆற்றலில் சிறிது பம்ப் பெறுகிறது.

Also read:   கேஜிஎஃப் – 2 படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ஆமீர் கான்

2022 Panigale V4 சூப்பர் பைக் மாடலானது இப்போது 12,500rpm-ல் 210hp மற்றும் 11,000rpm-ல் 124Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலே சொன்னது போல கியர்பாக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முதல், இரண்டாவது மற்றும் ஆறாவது கியர் செட்டிங்குகள். சிறந்த டிரைவ் அனுபவத்திற்காக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த கியர் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக டாப்-ஸ்பீடு மணிக்கு 5 கிமீ வேகம் அதிகரித்துள்ளது. இவை தவிர மேலும் பைக்கின் எடை இப்போது 5 கிலோ கிராம் குறைக்கப்பட்டு மொத்தம் 195.5 கிலோ எடையை கொண்டு வருகிறது.

புதிய Panigale ஆனது six-axis inertial measurement unit-ன் சமீபத்திய ஜெனரேஷனை பயன்படுத்துகிறது. கார்னரிங் ABS, ட்ராக்ஷன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல் மற்றும் பல ரைடர் உதவி அம்சங்களில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. V4 ஆனது 5-ஸ்போக் வடிவமைப்புடன் கூடிய அலுமினிய விளிம்புகளை கொண்டுள்ளது, அதே சமயம் V4 S ஆனது 3-ஸ்போக் செய்யப்பட்ட அலுமினிய அலாய் வீல்களை கொண்டுள்ளது. அவை Pirelli Diablo Supercorsa SP டயர்களுடன் கவர் செய்யப்பட்டிருக்கும்.

அதே நேரத்தில் 2022 Panigale V4 S சூப்பர் பைக்கானது புதிய Ohlins NPX 25/30 செமி-ஆக்டிவ் ஃபோர்க்குகளைப் பெறுகிறது. மேலும் இதன் 5-இன்ச் TFT டிஸ்ப்ளே சில மாற்றங்களை பெறுகிறது. இது தவிர, 2022 Panigale V4 மோட்டார் சைக்கிளின் ஒட்டுமொத்த உணர்வை மேம்படுத்தும் சில சிறிய நுட்பமான மாற்றங்களை தவிர, பழைய மாடலை போலவே உள்ளது. V4 மற்றும் V4 S இரண்டும் இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Published by:Arun
First published:

Tags: Automobile, Bike

அடுத்த செய்தி