ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

புதிய Audi Q7 facelift SUV கார் அறிமுகம் - சிறப்பம்சங்கள் என்னென்ன?

புதிய Audi Q7 facelift SUV கார் அறிமுகம் - சிறப்பம்சங்கள் என்னென்ன?

2022 Audi Q7 SUV

2022 Audi Q7 SUV

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள 2022 Audi Q7 SUV Facelift காரானது எக்ஸ்டீரியர் மேக்ஓவர், முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இன்டீரியர் மற்றும் மிக முக்கியமாக பெட்ரோல்-ஒன்லி எஸ்யூவி-யாக மாறி இருக்கிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஜெர்மன் கார் தயாரிப்பாளரான Audi நிறுவனம், ஃபேஸ்லிஃப்ட்டட் எஸ்யூவி-யை (facelifted SUV) அறிமுகம் செய்து இந்தியாவில் தனது Q7 -ஐ மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. அப்டேட்டட் Audi Q7 காருக்கான அறிமுக விலைகள் பேஸ் பிரீமியம் பிளஸ் ரூ.79.99 லட்சத்தில் தொடங்கி, டெக்னாலஜி வேரியன்ட்டின் விலை ரூ.88.33 லட்சமாக இருக்கும். இந்த இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரலில் BS6 எமிஷன் விதிமுறைகளுக்கு (BS6 emission norms) உட்பட்டு Audi Q7 கார் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 2 வருட இடைவெளிக்குப் பிறகு Audi நிறுவனம் தனது Q7-ஐ தற்போது மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள 2022 Audi Q7 SUV Facelift காரானது எக்ஸ்டீரியர் மேக்ஓவர், முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இன்டீரியர் மற்றும் மிக முக்கியமாக பெட்ரோல்-ஒன்லி எஸ்யூவி-யாக மாறி இருக்கிறது. இந்த கார் 3.0 லிட்டர் V6 TFSI என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய காரின் வெளிப்புறத்தில், முன்பக்கத்தில் புதிய பம்பர் மற்றும் த்ரீ-டைமன்ஷ்னல் எபெஃக்ட்டுடன் கூடிய ஹையர் ஏர் இன்லெட்ஸ் உள்ளன. இது ஆக்டாக்னல் அவுட்லைன் மற்றும் புதிய சில ட்ரிம்முடன் தட்டையான, அகலமான தோற்றமுடைய சிங்கிள்ஃப்ரேம் கிரில்லுடன் வருகிறது.

Also read:  Hyundai நிறுவனத்தின் பாகிஸ்தான் ஆதரவு பதிவுக்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு.. ட்ரெண்டிங்கில் #BoycottHyundai

மேலும் இந்த புதிய Audi Q7 சிக்னேச்சர் டேடைம் ரன்னிங் லைட்ஸ்களுடன் கூடிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய எல்இடி டெயில் லேம்ப்ஸ்களையும் பெறுகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட washer nozzles-களுடன் கூடிய அடாப்டிவ் விண்ட்ஷீல்ட் வைப்பர்கள் உள்ளன. கார் 48.26 செமீ (R19) 5-ஆர்ம் ஸ்டார் ஸ்டைல் டிசைன் அலாய் வீல்களையும் பெற்றுள்ளது. கராரா ஒயிட், மைத்தோஸ் பிளாக், நவர்ரா ப்ளூ, சாமுராய் கிரே மற்றும் ஃப்ளோரெட் சில்வர் உள்ளிட்ட 5 கலர் ஆப்ஷன்களிலும், Saiga Beige மற்றும் Okapi Brown ஆகிய 2 இன்டீரியர் கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கும். உட்புறத்தில் இந்த கார் ஆடி விர்ச்சுவல் காக்பிட் மற்றும் ஆடி ஸ்மார்ட் ஃபோன் இன்டர்ஃபேஸ் போன்ற ஸ்மார்ட் அம்சங்களைப் பெறுகிறது. மற்ற முக்கிய அம்சங்களில் MMI டச் ரெஸ்பான்ஸுடன் MM நேவிகேஷன் பிளஸ், ஹை ரெசல்யூஷன் கொண்ட கலர் டிஸ்ப்ளேவில் டிஸ்பிளேவுடன் கூடிய நேவிகேஷன், ஏர் கண்டிஷனிங்கைக் கட்டுப்படுத்த கலர் டிஸ்ப்ளே கொண்ட ரிமோட் MMI touch control panel, B&O பிரீமியம் 3D சவுண்ட் சிஸ்டம் - 3D ஸ்பீக்கர்கள், சென்டர் ஸ்பீக்கர் மற்றும் சப்வூஃபர் உட்பட 19 ஸ்பீக்கர்கள் மூலம் சவுண்ட் பிளேபேக், ஒரு 16-சேனல் ஆம்ப்ளிஃபையர் உள்ளிட்ட பல அம்சங்கள் அடக்கம்.

Also read: காரின் உட்பகுதி டாய்லெட் சீட்டை விட அசுத்தமானது - ஷாக்கிங் ரிப்போர்ட்!

மேலும் இந்த Audi Q7 காரானது உள்ளமைக்கப்பட்ட ஏற்பாடுகளுடன் தயாராக இருக்கும் ரியர் சீட் என்டர்டெயின்மென்ட் ஆகும். ஆடி என்டர்டெயின்மென்ட் மொபைல் (ரியர் சீட் என்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன்கள்) ஆடி-யின் ஒரிஜினல் ஆக்சஸரீஸ் மூலம் கிடைக்கிறது. மேலும் ஸ்கிரீன்கள் Audi Q7-ன் B&O பிரீமியம் 3D சவுண்ட் சிஸ்டமுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. Q7 ஃபேஸ்லிஃப்ட் ஒரு புதிய 340hp, 500Nm, 3.0-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட V6 பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. இது 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 48V மைல்ட்-ஹைப்ரிட் அமைப்பையும் கொண்டுள்ளது. 5.9 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை அடையும் என்று ஆடி கூறுகிறது. இதன் உச்ச வேகம் மணிக்கு 250 கிமீ என கூறப்பட்டுள்ளது.

Published by:Arun
First published:

Tags: Audi, Automobile