Home /News /automobile /

யமாஹாவின் புதிய YZF-R15 V4.0 பைக் அறிமுகம் - ப்ளூடுத், டிரான்ஷக்ஷன் கன்ட்ரோல் என அசத்தல் அப்டேட்டுகள்!

யமாஹாவின் புதிய YZF-R15 V4.0 பைக் அறிமுகம் - ப்ளூடுத், டிரான்ஷக்ஷன் கன்ட்ரோல் என அசத்தல் அப்டேட்டுகள்!

யமாஹாவின் புதிய YZF-R15 V4.0

யமாஹாவின் புதிய YZF-R15 V4.0

யமஹா ஆர்15 வி 4 மற்றும் ஆர்15 எம் என இரண்டிலும் 155 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு SOHC ஃபியூயல் இன்ஜெக்ட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
புதிய ஜெனரேஷன் R15 பைக்கை அறிமுகம் செய்துள்ள யமாஹா, ப்ளூடுத், டிரான்ஷக்சன் கன்ட்ரோல் என அசத்தல் அப்டேட்டுகளுடன் வெளிவந்துள்ளது.

யமாஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள அடுத்த தலைமுறை பைக்குகளை இந்திய மார்க்கெட்டில் செவ்வாய்கிழமை அறிமுகம் செய்துள்ளது. R15 V4 மற்றும் R15M என இரு பைக்குகளும், மேக்ஸி ஸ்டைல் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் ஆகியவற்றை பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தியது. உலகில் யமாஹாவின் R15 அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாடு இந்தியா. முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய YZF-R15 பைக்கில் க்விக் ஷிப்பட்டர், யூஎஸ்டி ஃபோர்க், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி என பல்வேறு சிறப்பு வசதிகளை யமஹா கொண்டு வந்துள்ளதால் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய YZF-R15 பைக் நவீன முறையில் புதிய வடிவமைப்பைப் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் புதிய ஃபேரிங் மற்றும் விண்ட்ஸ்கிரீன் சேர்க்கப்பட்டு LED ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. பகல்நேர ரன்னிங் விளக்குகள், இருபுறமும் ஹெட்லைட் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய YZF-R7 மாடலின் தோற்றத்தை R15 நினைவூட்டுகிறது என்றாலும், பின்புறத்தில் R15 V3.0 மாடலில் உள்ளதைப் போன்றே அமைந்துள்ளது. ஆனால் பெரிய ஏர் டக்ட்ஸ் எக்ஸாஸ்ட் மஃப்ளர் மற்றும் ரைடருக்கான கால் வைக்கும் முறைகளும் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

யமாஹாவைப் பொறுத்தவரை வழக்கமான மாடல்களில் இருந்து மாறுபட்ட, கூடுதல் செயல்திறன் பெற்ற பைக்குகளை எம் வரிசை பெயர் கொண்டு அழைப்பதுபோலவே, இந்த பைக்குகளுக்கும் எம் வரிசை பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. புதிதாக வந்துள்ள ஆர்15 எம் வேரியண்டில் நீல நிற சக்கரங்கள், வித்தியாசமான இருக்கை கவர் மற்றும் தங்க நிறத்தில் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள டிராக்‌ஷன் கன்ட்ரோல், க்விக் ஷிஃப்ட் ஆகியவை சிறப்பான பெர்ஃபானெஸை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... நடப்பாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகமாக உள்ள SUV கார்களின் பட்டியல்!

யமஹா ஆர்15 வி 4 மற்றும் ஆர்15 எம் என இரண்டிலும் 155 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு SOHC ஃபியூயல் இன்ஜெக்ட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவை அதிகபட்சமாக 18.4 பிஎச்பி பவரையும், 14.2 என்எம் டார்க்கையும் வழங்கும். வேரியபிள் வால்வு ஆக்ஷன் (VVA) உடன் இந்த எஞ்சின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. விலையைப் பொறுத்த வரை 1.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

யமாஹா மோட்டார் இந்தியா நிறுவன குழுமத் தலைவர் மோட்டோஃபுமி ஷிதாரா பேசும்போது, யமாஹா தனித்துவமான தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது எனக் கூறினார். YZF-R15 V4 உலகளவில் முதன்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த அவர், இந்தியாவில் ரேஸ் பைக்குகளில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களும் இதில் இருக்கிறது என தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Yamaha

அடுத்த செய்தி